லாபத்தில் 2.83 சதவீதம் சரிந்தது இன்போசிஸ்.. ஊழியர்களின் நிலை என்ன?

லாபத்தில் 2.83% சரிவு.. முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்திய இன்போசிஸ்..!

பெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் இன்று தனது 4வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.

அதிகளவிலான லாபம் இருக்காது என்றாலும் கடந்த காலாண்டிற்கு இணையான லாபத்தை இன்போசிஸ் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலீட்டாளர்கள் வியாழக்கிழமை மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தனர்.

இதனால் ஊழியர்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருக்குமா..?

லாபத்தில் சரிவு..!

லாபத்தில் சரிவு..!

டிசம்பர் 31, 2016இல் முடிந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாப அளவு 3,708 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் மார்ச் 31,2017 உடன் முடிவடைந்த இன்போசிஸ் நிறுவனத்தின் 4வது காலாண்டில் இதன் லாபம் 2.83 சதவீதம் குறைந்து 3,603 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

லாபம் மட்டுமில்லை வருவாயும் சரிவு...

லாபம் மட்டுமில்லை வருவாயும் சரிவு...

அமெரிக்காவில் விசா பிரச்சனையால் வெளிநாட்டுச் சந்தையில் 0புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் அதிகச் செலவுகள் பிடித்திருக்கும் அதனால் தான் லாபம் குறைந்தது என்றால் அதுவுமில்லை.

இந்நிறுவனத்தின் லாபமும் 4வது காலாண்டில் 0.89 சதவீதம் குறைந்துள்ளது, அதேபோல் கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது தற்போது சதவீதம் அளவில் சரிந்துள்ளது.

இதன் மூலம் மார்ச் மாத்துடன் முடிவடைந்த காலாண்டில் இன்போசிஸ் வருவாய் 17,120 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

 

வளர்ச்சி

வளர்ச்சி

நடப்பு நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனம் நாணய அளவில் 6.5 - 8.5 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடையும் எனத் தெரிவித்துள்ளது.

அமெரிக்கச் சந்தையில் இன்போசிஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான காக்னிசென்ட் இந்த வருடம் 8 - 10 சதவீதம் வரையிலான வளர்ச்சியைப் பதிவு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மொத்த செலவுகள்

மொத்த செலவுகள்

2017ஆம் ஆண்டின் ஜனவரி - மார்ச் வரையிலான காலகட்டத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த செலவுகள் 3.11 சதவீதம் குறைந்து 12,506 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது கடந்த காலாண்டில் 12,908 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பண இருப்பு

பண இருப்பு

2016-17 நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் Liquid assetsஆன பணம், பணத்திற்கு ஈடான சொத்துகள் மற்றும் முதலீடுகளின் அளவு 38,773 கோடி ரூபாயாக உள்ளது.

(கடைசி போட்டோவை பார்க்க மறந்து விடவேண்டாம்.)

பிராந்தி வளர்ச்சி

பிராந்தி வளர்ச்சி

இக்காலகட்டத்தில் இன்போசிஸ் நிறுவனம் அமெரிக்கச் சந்தையில் கடந்த காலாண்டை விடவும் 1.2 சதவீதமும், அமெரிக்காவில் 1.6 சதவீதமும், உள்நாட்டுச் சந்தையில் 6.9 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஆனால் நாணய அளவீடுகள் உலகளவில் இன்போசிஸ் சுமார் 1.3 சதவீதம் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

துறை சார்ந்த வளர்ச்சி

துறை சார்ந்த வளர்ச்சி

மேலும் வருவாய் அளவீடுகளில் இன்போசிஸ் நிறுவனத்தின் ECS பிரிவு 2.8 சதவீதமும், BFSI பிரிவு 0.5 சதவீதமும், ரீடைல், CPG,மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறை 3.1 சதவீதமும், உற்பத்தித் துறையின் வளர்ச்சி எவ்விதமான மாற்றமும் இல்லாமல் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஈவுத்தொகை

ஈவுத்தொகை

இக்காலாண்டு முடிவுகளின் அறிவிப்பில், நிர்வாகம் தனது முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்குச் சுமார் 14.75 ரூபாயை அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், 2018 நிதியாண்டில் பங்கு பைபேக் திட்டத்தின் வாயிலாக இந்நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்குச் சுமார் 13,000 கோடி ரூபாய் வரை அளிக்க முடிவு செய்துள்ளது.

 

ஊழியர்கள்

ஊழியர்கள்

அமெரிக்காவில் எச்-1பி விசா கட்டுப்பாடுகள் முழுமையாக அமலுக்குக் கொண்டு வரப்படாமல் இருக்கும் இத்தகைய சூழ்நிலையிலேயே இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் அதிகளவில் குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகள் முழுமையாக அமலாக்கம் செய்தால் இந்நிறுவனத்தின் ஊழியர்களின் சம்பள உயர்வு முதல் நிறுவனத்தின் லாபம் அதிகளவில் குறையும்.

எனவே அடுத்தச் சில காலாண்டுகளுக்கு ஊழியர்களுக்கு எவ்விதமான பிரச்சனையும் இருக்காது.

 

ஊழியர்கள் எண்ணிக்கை

ஊழியர்கள் எண்ணிக்கை

இன்போசிஸ் நிறுவனத்தில் 2017 நிதியாண்டின் 3வது காலாண்டில் புதிய ஊழியர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயரவில்லை என்றாலும், 4வது காலாண்டில் சுமார் 601 பேர் புதிதாக நிறுவனத்தில் இணைந்துள்ளனர். மேலும் ஊழியர்களைப் பயன்டுத்தும் விகிதம் 78.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

(திரும்புவும் சொல்றேன் கடைசி போட்டோவை பார்க்க மறந்து விடவேண்டாம்.)

ஊழியர்களே வெளியேற்றம்

ஊழியர்களே வெளியேற்றம்

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் கடந்த காலாண்டின் 18.4 சதவீதத்தில் இருந்து தற்போது 17.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பங்குச்சந்தையில் சரிவு..

பங்குச்சந்தையில் சரிவு..

இதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில், இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 970 ரூபாயில் இருந்து 941.60 ரூபாயாகக் குறைந்து வர்த்தகம் துவங்கியது.

மேலும் 10.30 மணிக்கு இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2.16 சதவீதம் சரிந்து 947.50 ரூபாய் அளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

 

என்னடா இது..?!

என்னடா இது..?!

 

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+