பிராஜெக்ட் 'பிளிப்கார்ட்' முடிந்தது.. அடுத்தது பிராஜெக்ட் 'பேடிஎம்'..!
அமெரிக்காவில் அலிபாபாவின் வருகை மற்றும் மக்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்கத்தால் அதிகளவிலான வருவாய் மற்றும் வர்த்தக இழப்பைச் சந்தித்த அமேசான்.காம்.
அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் நின்று கொண்டு இருந்த நிலையில், இந்தியாவின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃ பிசோஸ்.
இந்தியா
இந்தியாவில் ஈகாமர்ஸ் துறை பெரிய அளவில் வளர்ந்த அடைந்து பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் நிறுவனங்கள் இத்துறையில் ஆட்சி செய்திருக்கும் போது அமேசான்.காம் இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்கியது.
தலைகீழாக மாறியது
அதுவரை சந்தையில் கலக்கிக்கொண்டு இருந்த பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் நிறுவனங்களின் நிலை தலைகீழாக மாறியது. இத்தகைய சரிவிற்கு அமேசான் நிறுவனம் தான் காரணம் என்றால் மிகையாகாது.
அமேசான்
அந்த வகையில் தற்போது அமேசான் நிறுவனம் இந்தியாவில் பேடிஎம், ப்ரீசார்ஜ், மொபிகிவ்க் நிறுவனங்களுக்குப் போட்டியாகக் களமிறங்க உள்ளது. அடுத்த 6 முதல் 12 மாதங்களில் பேடிஎம் நிறுவனமும் ஆட்டம் காண உள்ளது.
டிஜிட்டல் வேலெட்
ஆம், இந்தியாவில் டிஜிட்டல் வேலெட் வர்த்தகத்தை அமேசான் நிறுவனம் செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பேடிஎம் நிறுவனத்தைப் போலவே அமேசான் நிறுவனமும் தனக்கென ஒரு வேலெட்டை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்க உள்ளது.
ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா
1 வருடத்திற்கு முன்பு அமேசான் இந்தியா, ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியாவிடம் ப்ரீபெய்டு பேமெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் உரிமத்திற்காக விண்ணப்பம் செய்திருந்தது. தற்போது இதற்கான உரிமத்தைத் தான் ஆர்பிஐ அளித்துள்ளது.
பேடிஎம், ப்ரீசார்ஜ், மொபிகிவ்க்
அமேசான் கொண்டு வரும் வேலெட் சேவையின் மூலம் இதில் பதிவேற்றம் செய்யப்படும் பணத்தை அமேசானில் மட்டும் பயன்படுத்தாமல், வெளிச் சந்தையிலும் பயன்படுத்த முடியும். இதன் அமேசான் நிறுவனத்தின் வருகை இந்தியாவில் தற்போது வளர்ந்து கொண்டு இருக்கும் பேடிஎம், ப்ரீசார்ஜ், மொபிகிவ்க் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பாக அமையும்.
நம்பிக்கையான சேவை
ரிசர்வ் வங்கியிடம் இருந்து உரிமம் பெற்றதை தொடர்ந்து அமேசான் இந்தியாவின் பேமெண்ட்ஸ் பிரிவின் துணை தலைவர் ஸ்ரீராம் ஜகனாதன் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு எளிமையான மற்றும் நம்பிக்கையான பணமில்லா பேமெண்ட் சேவையை அளிக்க உள்ளோம்.
பணஇருப்பு அளவு
மேலும் பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்கத் திட்டமிட்டுக் கொண்டு இருக்கும் இந்தியாவில் முதற்கட்டமாக வாடிக்கையாளர்களிடம் KYC பெற்று முறையான அனுமதியுடன் குறைந்த பணஇருப்பு அளவு கொண்ட வேலெட் சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
UPI தளம்
ரிசர்வ் வங்கி தற்போது மக்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் UPI தளத்தைப் பிரபலமாக்கும் திட்டத்துடன் பல முன்னணி மற்றும் திறன்வாய்ந்த நிறுவனங்களுக்கு PPI உரிமத்தை அளித்து வருகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள்
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் அனைத்துத் துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதிகளவிலான வாய்ப்புகளை மத்திய அரசு அளிப்பதாலும், மக்கள் மத்தியில் பன்னாட்டு நிறுவனம் என்பது விரும்பத்தக்க ஒன்றாக இருப்பதால் அதே துறையில் இருக்கும் இந்திய நிறுவனங்கள் மீதான ஈர்ப்பு மக்கள் மத்தியில் குறைகிறது.
நஷ்டம்
மேலும் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடும் விதமாகவும், வர்த்தகத்தைத் தொடர்ந்து பெறவும், வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளவும் இந்திய நிறுவனங்கள் அதிரடி சலுகையை அளிக்கிறது. இது வெற்றிபெற்றாலும் அதிகளவிலான நஷ்டத்தில் நிறுவனங்கள் மூழ்கி வருகிறது.
இதுவே பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் நிறுவனங்களுக்கு நிகழ்ந்தவை. பேடிஎம் நிறுவனம் என்ன ஆகப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications