கூகுளின் அடுத்த அதிரடி..மும்பை பெங்களூரில் வீட்டிற்கு உணவு டெலிவரி செய்யும் செயலி அறிமுகம்..!

கூகுளின் அடுத்த அதிரடி..மும்பை பெங்களூரில் வீட்டிற்கு உணவு டெலிவரி செய்யும் செயலி அறிமுகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இணைய உலகின் மிகப் பெரிய நிறுவனமான கூகுள் இந்தியாவில் வியாழக்கிழமை வீட்டிற்கு உணவை டெலிவரி செய்யும் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து இன்று தோய்வு நிலையை நோக்கிச் செல்லும் ஒரு வர்த்தகத்தில் கூகுள் நுழைவதை அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்து வருகின்றனர்.

 

காலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை ஏரோ(Aero) எனப்படும் இந்தச் செயலியிலை கூகுள் அறிமுகப்படுத்தியது. இந்தச் செயலி மூலமாக இந்தியாவில் மும்பை மற்றும் பெங்களூரில் வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டணி சேர்ந்துள்ள நிறுவனங்கள்

கூட்டணி சேர்ந்துள்ள நிறுவனங்கள்

வீட்டிற்கு உணவு டெலிவரி செய்வதற்காகப் பாக்ஸ்8, பிரெஷ்மெனு, ஃபாஸூஸ், அர்பன்கிளாப், ஜிம்பெர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து கூகுள் நிறுவனம் தங்களது சேவையை அளிக்கிறது.

சேவைக் குறித்து முழுமையான அறிக்கை இன்னும் வெளிவரவில்லை கூகுள் இதற்கான மென்பொருள் உருவாக்கம் குறித்துத் தெரிவித்த போதிலும் விரிவாக இந்தச் சேவை குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்தியாவில் சோதனை முயற்சியாக இந்தச் சேவையை அளிக்க இருக்கின்றது என்றும், ஏரோ முழமாக உணவு டெலிவரி செய்வதில் சிறந்த சேவை அளிக்க இருக்கின்றது, இதன் மூலம் இந்திய கூகுள் பயனர்களுக்கு மேலும் சிறந்த சேவையைக் கூகுள் அளிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

சோதனையும் இணைவும்

சோதனையும் இணைவும்

கூகுள் நிறுவனம் இந்தச் சேவையை அளிக்க முடிவு செய்து செயலியும் உருவாக்கப்பட்டுக் கடந்த 8 மாதங்களாக நிறுவனங்களுடன் இணைவதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தது என்றும் சோதனைக்காகக் கூகுள் நிறுவனங்கள் இதனை ஏற்கனவே மூன்று மாதங்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்றும் இந்தச் சேவை பற்றி நன்கு அறிந்த இரண்டு ஊழியர்கள் நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.

கூகுள் என்ன செய்யும்
 

கூகுள் என்ன செய்யும்

கூகுள் நிறுவனம் டெலிவரி செய்வதற்காகப் புதிதாக ஊழியர்கள் யாரையும் எடுக்கப் போவதில்லை, அதே நேரம் தனக்கான ஒரு உணவு தயாரிக்கும் கூடம் அல்லது உணவக எதையும் துவங்கப்போவதில்லை. இந்தச் சேவை மூலமாக எந்த நிறுவனங்களுடன் எல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளதோ அவர்களுக்குச் சேவையை மேலும் சிறப்பாக மாற்றி அளிக்கும்.

பேஸ்புக்

பேஸ்புக்

கூகுள் நிறுவனம் போன்று இதற்கு முன்பு சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் ஸ்பாஸ், குழாய்ச் சரிபார்ப்பவர்கள், நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடுபவர்கள் உள்ளிட்டவர்களுக்கான பல சேவைகளை அளிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறைந்து வரும் முதலீடு

குறைந்து வரும் முதலீடு

இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீடு செய்யும் நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்யும் வணிகத்தில் முதலீடு செய்வதைப் பெறும் அளவில் குறைத்து வரும் நிலையில் கூகுள் நிறுவனம் இந்தத் துறையில் முதலீட்டைத் துவங்கியுள்ளது. உதாரணத்திற்கு 2015-ம் ஆண்டு 8.2 பில்லியன் டாலர் இந்தத் துறையில் முதலீடு செய்யப்பட்டது அதுவே 2016-ம் ஆண்டு 3.3 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடு கிடைத்துள்ளது.

மூடப்படும் உணவு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

மூடப்படும் உணவு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

உணவு டெலிவரி போன்ற சேவை அளிக்கத் துவங்கப்பட்ட பல நிறுவனங்கள் டேசோம் ஈட்லோ, ஸ்பூஞ்சி ஆகிய ஸ்டார்டப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

போட்டி நிறுவனங்கள்

போட்டி நிறுவனங்கள்

கூகுள் நிறுவனம் இந்தச் சேவை துறையில் முதலீடு செய்யத் துவங்கியவுடன் நேரடி செவை அளிப்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றாலும் ஜோமேட்டோ, ஸ்விகி உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் இந்தச் செயலி எப்படி வேலை செய்யும் கூகுள் தேடல் கருவியை எப்படிப் பயன்படுத்தும் என்று எல்லாம் பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google app for food delivery, home services launched in India

Google app for food delivery, home services launched in India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X