இதற்கு பெண்களை விட ஆண்கள் தான் அதிக வாடிக்கையாளர்களாம்.. புதிய கூத்து..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வளர்ந்த பிறகு, நாம் கடைகளில் வெளிப்படையாக வாங்க முடியாத பல பொருட்கள் தற்போது எளிமையாக யாருக்கும் தெரியாமல் ஆசால்டாக வாங்க முடிகிறது.

 

நான் கூறுவது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தற்போது இப்பட்டியலில் புதிதாக இன்னும் ஒரு பொருள் இணைந்துள்ளது.

புதிதாக இணைந்துள்ள பொருட்களுக்கு பெண்களைவிடவும் ஆண் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றனர் என்று புள்ளிவிபரம் கூறுகிறது. இப்பிரிவு சார்ந்த விற்பனையை உடனடியாக அரசு கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தற்போது உள்ளது.

ஈகாமர்ஸ் சந்தை

ஈகாமர்ஸ் சந்தை

இந்தியாவில் ஈகாமர்ஸ் சந்தையின் அறிமுகம் சில வருடங்களுக்கு முன்னதாகவே இருந்தாலும், மிகவும் குறுகிய காலத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்து தற்போது நம் கண்முன்னே நிற்கிறது.

ஆனால் இதில் பல கருப்புப் பக்கங்கள் உள்ளது அது யாருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது.

 

காமம்

காமம்

இந்தியாவில் இன்றளவும் மருந்தகங்களில் காண்டம் வாங்குவது எந்த அளவிற்குக் கடினம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவை அனைத்தையும் அடித்து ஓடவிடும் வகையில் 3 வருடங்களுக்கு முன்பு பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் தளத்தில் sexual wellness என்ற தனி வர்த்தகப் பிரிவு துவங்கப்பட்டது.

முக்கிய நிறுவனங்கள்
 

முக்கிய நிறுவனங்கள்

காமசூத்ரா, தட்ஸ்பர்சனல், ஒமைசிக்ரட்ஸ்,ஒஎம்பேஷ்ரம் போன்ற பல நிறுவனங்கள் ஆன்லைன் விற்பனையில் களமிறங்கியது. இந்நிறுவனங்கள் வெண்ணிலா காண்டம், பெண்களின் உள்ளாடை போன்ற சாக்லெட்கள் (edible lingerie), விளையாட்டுப் பொம்மைகள் (குறிப்பு: அந்த விளையாட்டு), விளையாட்டிற்குத் தகுந்த உடைகள் எனப் பொருட்களை விற்பனை செய்யத் துவங்கியது.

இன்று இப்பிரிவில் இணைந்துள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 45ஐ தாண்டியுள்ளது.

 

பெரு நகரங்களில்

பெரு நகரங்களில்

இந்தியாவில் பெரு நகரங்களில் கூட மக்கள் இத்தகைய பொருட்களை எளிதாக வாங்க முடியும் நிலையில் ஈகாமர்ஸ் தளத்தில் இத்தகை பொருட்களின் அறிமுகத்தின் மூலம் சிறு நகரங்களில் இருக்கும் மக்கள் தங்களது காம உணர்வுகளையும், இச்சைகளையும் தீர்த்துக்கொள்ளும் தளமாக மாறியது என்பதே உண்மை.

புதிய பொருள்

புதிய பொருள்

மேலே கூறப்பட்டவை அனைத்தும் சந்தையில் மழைக் காலத்தில் மிளகாய் பஜ்ஜி விற்பனை போல் பரபரவென விற்பனை ஆகி வரும் நிலையில், இதற்குப் போட்டியாகப் புதிய பொருள் ஈகமார்ஸ் சந்தையில் வெற்றிநடை போடுகிறது.

பெண்கள் உள்ளாடை

பெண்கள் உள்ளாடை

இன்றைய நிலையில் பெண்கள் உள்ளாடை ரீடைல் கடைகளில் செய்யப்படும் விற்பனையை விட ஆன்லைனில் தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.

முக்கியப் பொருட்கள்

முக்கியப் பொருட்கள்

இப்பிரிவில் பிரா, டே வியர், லான்ஜ்ச் வியர், பேன்டீஸ், ஷேப் வியர் மற்றும் ஸ்லீப் வியர் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.

ஆசியா, ஐரோப்பிய, அமெரிக்கா, என உலக நாடுகளில் ஏற்கனவே இப்பிரிவின் விற்பனை சிறப்பாக இருக்கும் நிலையில் தற்போது சூடுபிடித்துள்ளது. இத்துறையின் விற்பனை உலகளவில் 2016-2020 வருட காலகட்டங்களில் சுமார் 17 சதவீதம் சராசரியாக வளரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில்..

இந்தியாவில்..

கடந்த 3 வருடத்தில் முன் இந்திய ஈகாமர்ஸ் சந்தையிக்கு அறிமுகமான பெண்கள் உள்ளாடை பிரிவில் முதலில் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில் விற்பனையில் பெரிய அளவிலான வளர்ச்சி ஏதுமில்லை.

ஆனால் இத்துறையில் இருக்கும் உள்நாட்டு நிறுவனங்கள் களமிறங்கிய உடன் ஆட்டம் களைக்கட்டியது.

 

ஜிவாமே

ஜிவாமே

இத்துறையில் இன்று உச்சத்தில் இருக்கும் ஜிவாமே (Zivame) ஈகாமர்ஸ் சந்தையில் களமிறங்கிய போது மக்கள் மத்தியில் பார்வையாளர்கள் மட்டுமே இருந்த நிலையில். ஓரு ஆண்டின் இடைவேளையில் இந்நிறுவனத்தின் விற்பனை சுமார் 300 சதவீதம் அதிகரித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

புதிய விரிவாக்கம்

புதிய விரிவாக்கம்

சமீபத்தில் இந்நிறுவனம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாகப் பெண்கள் உள்ளாடைகளுக்கெனப் பிரத்தியேகமான ஒரு கடையும் அதில் டிரைல் ரூம்-ஐயும் அமைத்துள்ளது. இத்தகைய செயலை செய்த முதல் இந்திய நிறுவனமும் இது தான்.

புதிய நிறுவனம்

புதிய நிறுவனம்

இந்நிலையில் ஜிவாமே நிறுவனத்திற்குப் போட்டியாக டெல்லியைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் கோல்வியா (Clovia) நிறுவனம் இதே உள்ளாடை வர்த்தகத்தில் 2016ஆம் ஆண்டில் 61 சதவீத விற்பனை வளர்ச்சியை அடைந்தது.

30 கோடி ரூபாய்

30 கோடி ரூபாய்

2015ஆம் ஆண்டில் இந்நிறுவனம் 18.6 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில் 2017ஆம் ஆண்டில் ஆன்லைன் விற்பனையின் வாயிலாக மட்டுமே சுமார் 30 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளது.

முதலீடு

முதலீடு

இந்தியாவில் இத்துறைக்கு இருக்கும் வளர்ச்சி வாய்ப்புகளை மையமாக வைத்தும் தனது வர்த்தகத்தைப் பெரு நகரங்களில் மட்டும் செய்யாமல் இந்தியாவின் 2வது, 3வது கட்ட நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யச் சுமார் 25 கோடி ரூபாய் முதலீட்டை ஈட்டியுள்ளது.

ஸ்டாட்ர் அப்

ஸ்டாட்ர் அப்

இந்தியாவில் Clovia போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இன்றைய வர்த்தகச் சூழ்நிலையில் முதலீடு பெறுவதும் என்பது சாதாரணக் காரியம் இல்லை. இத்தகைய நிலையிலும் இந்நிறுவனம் முதலீட்டை ஈர்த்துள்ளது என்றால் இப்பிரிவின் வளர்ச்சி அளவை யூகித்துக்கொள்ளுங்கள்.

ஆபாசம்

ஆபாசம்

ஆனால் இத்தகைய பொருட்களை விற்பனை செய்யும் தளத்தில் ஆபாசம் நிறைந்த புகைப்படங்கள் உள்ளது.

ஸ்மார்ட்போன், கம்பியூட்டர், இண்டர்நெட் அனைத்தும் குழந்தைகள் கையில் கிடைக்கும் இந்தக் காலத்தில் தவறானவற்றைப் பார்க்கும் வாய்ப்புகள் அதிகம். ஆக இத்துறை நிறுவனங்கள் வெறும் விற்பனையை மட்டும் பார்க்காமல் மக்கள் நலனிலும் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்.

 

டார்கெட்

டார்கெட்

பெண்கள் உள்ளாடை விற்பனையாக இருந்தாலும் சரி, sexual wellnes நிறுவனமாக இருந்தாலும் சரி, இவர்கள் 18 வயது முதல் 45 வயதுள்ள மக்களைக் குறிவைத்து விற்பனை செய்கின்றனர். குறிப்பாக இந்த வயது விபரங்களைப் பேஸ்புக் போன்ற சமுக வலைத்தளங்களில் இருந்து இந்நிறுவனங்கள் பெறுகின்றன.

இதை வைத்து பேஸ்புக், கூகிள் விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்கின்றனர்.

 

விற்பனையில் கலக்கும் சில ஊர்கள்

விற்பனையில் கலக்கும் சில ஊர்கள்

தமிழ்நாட்டில் திருநெல்வேலி, கர்நாடகாவில் தும்கூர், ஆந்திர பிரதேசத்தில் வாரங்கள் போன்ற மாவட்டங்களில் விற்பனை அதிகளவில் உள்ளதாக இந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒவ்வொருவரின் பில்லும் குறைந்தது 4000 முதல் 5000 வரை இருக்கிறது. (அட கொன்னியா!!)

கூரியார் மேட்டர்

கூரியார் மேட்டர்

நாம் வாங்கும் பொருள் மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டால் அசிங்கமாகி விடுமோ என்று நீங்கள் கவலை படவும் தேவையில்லை. பார்சலில் இது குறித்து எந்த வகையான தகவலும் இருக்காது. பெட்டியில் கூட நிறுவனத்தின் பெயர் இருக்காது. இத்தகைய பார்சலுக்குப் பெயர் தான் "பிளாக் பாக்ஸ்".

சம்பளம் தான் எல்லாம்..!

சம்பளம் தான் எல்லாம்..!

சம்பளத்தை வாரியிறைக்கும் டெக் நிறுவனங்கள்.. ஊழியர்கள் செம ஜாலி..!

சம்பளமே சரியாக கொடுக்காத நிறுவனங்கள் மத்தியில் விடுமுறைக்கு காசு கொடுத்தால் எப்படி இருக்கும்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Online Lingerie Market is growing like anything

Indian Online Lingerie Market is growing like anything
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X