பிஎச்ஐஎம்(BHIM) செயலி பயன்படுத்தி பரிந்துரை போனஸ் மற்றும் வணிகர்களுக்கான கேஷ் பேக் பெறுவது எப்படி..?
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாகப் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை பிஎச்ஐஎம் செயலியை பயன்படுத்துபவர்களுக்குக் கேஷ்பேக் ஆஃபர் மற்றும் பரிந்துரைப்புப் போனஸ் போன்றவற்றை வணிகர்களுக்கும், தனிநபர்களுக்கும் மத்திய அரசு அளிக்கும் என்று அறிவித்தார்.
இந்தச் செயலியை பயன்படுத்தி உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என யாரை வேண்டுமானாலும் பரிந்துரை செய்து ஒருவருக்கு 10 ரூபாய் போனசாகப் பெறலாம்.
இதே போன்று வணிகர்களும் குறைந்து 50 பேரிடம் இருந்து பிஎச்ஐஎம் செயலி மூலமாக விற்பனைக்கான பணத்தைப் பெறும் போது 100 ரூபாய் பெறலாம்.
எனவே நாம் பிஎம் செயலி பயன்படுத்தி வணிகர்கள் எப்படிக் கேஷ் பேக் பெறலாம் மற்றும் தனிநபர் பயனர்கள் எப்படிப் பரிந்துரைத்து 10 ரூபாய் பெறுவது என்று இங்குப் பார்ப்போம்.
முதல் முறையாகப் பிஎச்ஐஎம் செயலியை பதிவிறக்கம் செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
புதிதாக ஒருவர் பிஎச்ஐஎம் செயலியை கூகுள் ப்ளே ஸ்க்டோர் மூலமாகப் பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்த பிறகு தேவையான விவரங்கள் அதாவது மொபைல் எண், கடவுச்சொல், யூபிஐ ஐடி போன்றவற்றை உருவாக்க வேண்டும்.
எப்படிப் பரிந்துரைப்பது?
முதல் முறையாக நண்பர் ஒருவரை பரிந்துறக்க வேண்டும் என்றால் பரிவர்த்தனை செய்யும் போது பரிந்துரைக் குறியீடு என்பதைத் தேர்வு செய்து உங்களுக்கு யார் இந்தச் செயலியை பரிந்துரைத்தார்களோ அவர்களது மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
முதல் முறையாக இணைபவர்களுக்கு என்ன பயன்?
முதல் முறையாகப் பிஎச்ஐஎம் செயலியில் இணைந்து மூன்று பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 25 ரூபாய் அளிக்கப்படும்.
பரிந்துரை போனஸ்
பிறரை பிஎச்ஐஎம் செயலில் இணையப் பரிந்துரை செய்து அவர்கள் மூன்று பரிவர்த்தனை செய்த பிறகு பரிந்துரைத்தவர்களுக்கு 10 ரூபாய் போனசாகக் கிடைக்கும்.
வணிகர்கள்
வணிகர்கள் செய்யும் 50 முதல் 100 வரையிலான பரிவர்த்தனைக்கு மொத்தமாக 100 ரூபாயும்,100 பரிவர்த்தனைகளுக்கு அதிகமாகச் செய்யும் போது 50 பரிவர்த்தனைக்கு 50 பைசாவும் போனசாக அளிக்கப்படும்.
கட்டுப்பாடு
பிஎச்ஐஎம் செயலி மூலமாக மாதம் தினமும் 200 ரூபாய் போனஸ் ஆகப் பெறலாம். வணிகர்களுக்கு மாதத்திற்கு 300 ரூபாய் வரை போனஸ் அளிக்கப்படும்.
வீடியோ
வீடியோ
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications