40% சம்பளத்தை இழந்தார் இன்போசிஸ் சிஇஓ.. ஊழியர்களின் கதி என்ன..?!
பெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் கடந்த வாரம் 2016-17 நிதியாண்டின் 4வது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில், முழு ஆண்டுக்கான வளர்ச்சி விகிதகங்கள் கணக்கிடப்பட்டது.
விஷால் சிக்கா தலைமையில் இன்போசிஸ் கடந்த நிதியாண்டின் நிர்வாகம் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை அடையவில்லை, இது இந்நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு மத்தியில் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது. இதன் காரணமாக இந்த வளர்ச்சி தொய்விற்குக் காரணமாக விஷால் சிக்காவின் சம்பளத்தில் இன்போசிஸ் கைவைத்துள்ளது.
40 சதவீதம் சரிவு..
2016-17 நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் மற்றும் வளர்ச்சி அளவுகளின் இலக்கை எட்டாத நிலையில், இன்போசிஸ் நிர்வாகம் இந்நிறுவனத்தின் சிஈஓ விஷால் சிக்காவின் சம்பளத்தைச் சுமார் 40 சதவீதம் குறைத்துள்ளது.
3 மில்லியன் டாலர்
வருடத்திற்கு 3 மில்லியன் டாலர் நிலையான சம்பளமாகப் பெறும் விஷால் சிக்காவிற்கு, இலக்கை அடைவதற்கான செயல்திறன் அடிப்படையில் அளிக்கப்படும் 8 மில்லியன் டாலர் வேரியபில் பே-இல் வெறும் 3.68 மில்லியன் டாலர் மட்டுமே இந்த வருடம் இன்போசிஸ் நிர்வாகம் சிக்காவிற்கு அளித்துள்ளது.
காரணம்
வருடத்திற்கு 11 மில்லியன் டாலர் சம்பளத்தைப் பெறும் விஷால் சிக்கா தனது இலக்கை அடையாத காரணத்திற்காகச் சம்பளத்தில் 40 சதவீதம் குறைந்து வெறும் 6.7 மில்லியன் டாலரை மட்டுமே அளித்துள்ளது இன்போசிஸ்.
11 மில்லியன் டாலர் சம்பளம்
கடந்த நிதியாண்டில் இன்போசிஸ் அறிவிக்கப்பட்டதன் படி விஷால் சிக்காவிற்கு 2016-17ஆம் நிதியாண்டில் தனது இலக்கை முழுமையாக எட்டினால் 11 மில்லியன் டாலரை சம்பளமாக அளிப்பதாக அறிவித்திருந்தது.
இதில் 1 மில்லியன் டாலர் அடிப்படை சம்பளம், 3 மில்லியன் டாலர் வேரியபில் பே, 2 மில்லியன் தடை செய்யப்பட்ட பங்குகள், 5 மில்லியன் டாலர் பங்குகள் செயல்திறன் அடிப்படையில் அளிக்கப்படுபவை.
7.45 மில்லியன் டாலர்
கடந்த வருடம் விஷால் சிக்கா 7.45 மில்லியன் டாலரை சம்பளமாகப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
காலாண்டு முடிவுகள்
கடந்த வாரம் இன்போசிஸ் வெளியிட்ட காலாண்டு முடிவுகளில் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 3,603 கோடி ரூபாயை மொத்த லாபமாகப் பெற்றது, அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இது 3,708 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
திடீர் சம்பள உயர்வு..!
2020-21ஆம் ஆண்டுக்குள் இன்போசிஸ் நிறுவனம் 20 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை அளிக்கும் ஒரு நிறுவனமாக மாற்ற வேண்டும் என்று காரணத்திற்காகச் சர்வதேச சந்தையில் இருக்கும் முன்னணி டெக் நிறுவனங்களுக்கு இணையாக இன்போசிஸ் நிர்வாகம் சிக்காவின் சம்பளத்தை 7 மில்லியன் டாலரில் இருந்து சுமார் 11 மில்லியன் டாலராக உயர்த்தியது.
இக்காலகட்டத்தில் டிசிஎஸ் சீஇஓவாக இருந்த என்.சந்திரசேகரனின் சம்பளமே 25.6 கோடி ரூபாயாக இருந்த நிலையில் சிக்காவின் சம்பளம் 49 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
ஊழியர்கள்
இலக்கை எட்டாத காரணத்திற்காக இன்போசிஸ் நிர்வாகம் அதன் சீஇஓ சம்பளத்தையே 40 சதவீதம் வரை குறைந்துள்ள நிலையில், வருவாய் சரிவு, லாபத்தில் சரிவு, நிர்வாகத்தில் பிரச்சனை, எச்1பி விசா பிரச்சனை எனப் பலவற்றில் மாட்டிக்கொண்டு இருக்கும் இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பள உயர்வு எப்படி இருக்கும்.
ஏப்ரல்
இன்போசிஸ் ஊழியர்கள் தங்களது சம்பள உயர்விற்காகக் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், விஷால் சிக்காவின் சம்பள குறைப்பு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications