ஏர் ஏசியாவின் புதிய வழித்தடங்கள் மற்றும் ரூ.1249 முதல் அதிரடி விமான பயணம் அஃபர்..!

ஏர் ஏசியாவின் புதிய வழித்தடங்கள் மற்றும் ரூ.1249 முதல் அதிரடி விமான பயணம் அஃபர்..!

ஏர் ஏசியா இந்தியா உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கான விமானப் போக்குவரத்து சேவையை அளித்து வருகின்றது. இப்போது கூடுதலாக ராஞ்சி, டெல்லி, கொல்கத்தா வழித்தடங்களிலும் விமானப் போக்குவரத்து சேவையை ஏர் ஏசியா அளிக்க முடிவு செய்துள்ளது.

ஏர் ஏசியாவின் டெல்லி - ராஞ்சி, ராஞ்சி-கொல்கொத்தா புதிய வழித்தடங்களில் 1,799 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் பயணம் செய்யலாம். ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் டாடா மற்றும் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் கூட்டு நிறுவனமாகும்.

மேலும் ஏர் ஏசியா நிறுவனம் புதிய வழித்தடங்களில் தினமும் இரண்டு முறை விமானச் சேவையை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

1,249 ரூபாய் டிக்கெட்

1,249 ரூபாய் டிக்கெட்

சிறப்புச் சலுகை திட்டம் மூலமாகப் பெங்களூரு, கொச்சி, கோவா, ஹைதராபாத் உள்ளிட்ட வழித்தடங்களில் ஏர் ஏசியா விமானம் மூலமாக 1249 ரூபாயில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சலுகை காலம்

சலுகை காலம்

ஏர் ஏசியாவின் இந்தச் சிறப்புச் சலுகை ஆஃப்ர் மூலமாக 2017 செப்டம்பர் 30-ம் தேதி வரை பயணம் செய்யலாம் என்றும், பயணங்களுக்கான டிக்கெட்டினை 2017 ஏப்ரல் 23-ம் தேதி வரை புக் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் ஏசியா

ஏர் ஏசியா

ஏர் ஏசியா நிறுவனம் ஆஸ்த்ரேலியா மற்றும் ஏசியாவில் 120 வழித்தடங்களில் தங்கலது விமானச் சேவையை வழங்கி வருகின்றது. இந்தியாவில் தனது கூட்டு நிறுவனத்துடன் இணைந்து 15 இடங்களுக்கு ஏர் ஏசியா விமானச் சேவையை அளிக்கின்றது.

விமானப் பயண டிராப்பிக்

விமானப் பயண டிராப்பிக்

இந்தியாவில் விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தொடர்ந்து ஆபர்கள் வழங்கி வருவதால் ஏர் டிராப்பிக் 16 சதவீதம் அதிகரித்துள்ளது என்று விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+