பிக்னி பாய் ‘விஜய் மல்லையா’ இங்கிலாந்தில் கைது..!
ஆடம்பர வாழ்க்கை, மதுபான வியாபாரம் என இந்திய பில்லியனர்கள் பட்டியலில் செழிப்பாக இருந்த விஜய் மல்லையா தற்போது இந்திய வங்கிகளில் ரூ9,000 கோடி கடன்களை கட்டாமல் தப்பி ஓடிய விஜய் மல்லையா லண்டனில் உள்ள ஸ்காட்லாந்து யார்டில் கைது செய்யப்பட்டார். லண்டனில் இன்று காலை 9:30 அளவில் கைது செய்யப்பட்ட இவருக்கும் தற்போது 61 வயது. இதனைத் தொடர்ந்து விஜய மல்லையா விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வெஸ்டிமின்ஸ்டெர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட மல்லையா மூன்று மணி நேரத்தில் பெயில் பெற்று வெளியேறினார்.
விஜய் மல்லையாவிற்கு வங்கிகள் கடன் கொடுத்தால் வங்கிகள் பாதிப்புக்குள்ளானது, இவரது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர், மல்லையா தயாரிக்கும் மதுபானத்தைக் குடித்ததால் இந்தியாவில் இருக்கும் கடைக்கோடி மக்களும் உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டனர்.
இந்தியாவில் இவரால் பாதிக்கப்படாதது யாருமே இல்லை என்று சொன்னாலும் மிகையாகாது. இப்படி இவரைப் பற்றிப் பல பெருமைகள் உண்டு. இந்நிலையில் விஜய் மல்லையா பற்றிய வாழ்க்கை முறை, வர்த்தக நிலைமை, சொத்து விபரங்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இப்போது பார்க்கலாம் வாங்க.
கடன் அளவுகள்
விஜய் மல்லையா அளிக்க வேண்டிய கடன் தொகையில், 17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் தலைமையிலான எஸ்பிஐ வங்கிக் குழு கிங்பிஷர் நிறுவனத்தின் சில சொத்துக்களை முடக்கி விற்பனை செய்தது போக இன்னும் 7,000 கோடி ரூபாய் அளிக்க வேண்டும்.
முக்கிய வங்கிகள்
மல்லையாவிற்கு அதிகக் கடன் அளித்த பெருமை எஸ்பிஐ வங்கிக்குப் போய்ச் சேர்கிறது, இவ்வங்கி மல்லையாவிற்கு 1,600 கோடி ரூபாய் அளவிலான கடன் தொகை நிலுவையில் உள்ளது. இதைத்தொடர்ந்து பிஎன்பி, ஐடிபிஐ வங்கிகள் 800 கோடி என நாட்டின் முன்னணி வங்கிகள் அனைத்தும் வாரி வழங்கியுள்ளது. இவை அனைத்தும் மக்கள் பணம் என்பதை நினைவுபடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் இருக்கும் இவரது சொத்துக்கள்
1. யுனைடெட் பிரீவரிஸ் நிறுவனத்தின் 33% பங்குகள், இதன் மதிப்பு 7,000 கோடி ரூபாய்.
2. மங்களூரு கெமிக்கல் மற்றும் உரம் நிறுவனத்தில் 22 சதவீத பங்குகள், இதன் மதிப்பு 140 கோடி ரூபாய்.
3.யுபி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் 52 சதவீத பங்குகள்.
4. பேயர் கார்ப் சயன்ஸ் நிறுவனத்தில் 1 சதவீத பங்குகள். மற்றும் இந்நிறுவனத்தின் தலைவர் பதவி.
மேலே குறிப்பிட்டுள்ள சொத்துக்களில் 50 சதவீதத்திற்கு அதிகமான பங்குகளை இவர் கோர முடியாத நிலையில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.
துவக்கம்.. உயர்வு..
விஜய் மல்லையா வின் தந்தை 1983ஆம் ஆண்டுக் காலமான பிறகு தனது 28வது வயது யுபி குரூப் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார் விஜய் மல்லையா. அதேபோல் இவர் வர்த்தகக் காலத்தில் கிங்பிஷர் ஸ்டாரங் பிர் அறிமுகம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. இன்று வரை இந்தியாவில் அதிகளவில் விற்கப்படும் பிர் வகை என்றால் அது இதுவே. 2002ஆம் ஆண்டு ராஜ்ஜிய சபா உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிங்பிஷர் ஏர்லையன்ஸ் துவக்கம் 2005
கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட அறிமுகம். ராய்ல் சேலேஞ் பிராண்ட் விஸ்கியை தயாரிக்கும் ஷா வாலேஸ் நிறுவனத்தைக் கைப்பற்றினார். 2006: பேக்பைபர் விஸ்கி மற்றும் ரமனாவ் வோட்கா தயாரிக்கும் Herbertsons நிறுவனத்தைக் கைப்பற்றினார் மல்லையா. 2007: ஸ்பைகர் என்னும் பார்மூலா ஒன் கார் நிறுவனத்தை வாங்கி ஃபோர்ஸ் இந்தியா எனப் பெயர் மாற்றினார்.
ஏர் டெக்கான் 2007
அதிக நஷ்டத்தில் செயல்பட்டுக் கொண்டு இருந்து ஏர் டெக்கான் நிறுவனத்தை வர்த்தகப் போட்டியின் காரணமாக வாங்கினார். வைட்டி அண்ட் மெக்கே என்னும் பிரிட்டிஷ் விஸ்கி நிறுவனத்தை 595 மில்லியன் டாலருக்குக் கைப்பற்றினார். 2008: 111.6 மில்லியன் டாலர் மதிப்பில் ராயல் சேலேஞ் என்னும் ஐபிஎல் கிரிக்கெட் அணியை வாங்கினார். பெங்களூரில் யுபி சிட்டி துவங்கப்பட்டது. 2009: இந்திய மக்கள் அனைவரும் வாயைப் பிளக்கும் வகையில் மாண்டி கார்லோவில் 750 கோடி ரூபாய் மதிப்புள்ள தீவு ஒன்றை வாங்கி அசத்தினார்.
வெளிநாட்டுச் சொத்துக்கள்
நியூயார்க் டிரம்ப் டவரில் வீடுகள், சான் பிரான்சிஸ்கோவில் மதிப்பறியாத ஆடம்பர வீடு, தென் ஆப்பிரிக்காவில் கேம் ரெசார்ட், கோவா-வில் பிச்பிரென்ட் வில்லா 200க்கும் மேற்பட்ட ஆடம்பர பழமையான வின்டேஜ் கார், 95 மீட்டர் நீளம் உள்ள ஆடம்பர படகு, கல்ப்ஸ்டீரிம் என்னும் ஆடம்பர பிரைவேட் ஜெட் என இவரது சொத்துக்கள் நீண்டுகொண்டே போகிறது. ஆனால் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க மட்டும் பணம் இல்லை.
கிங்பிஷர் ஏர்லையன்ஸ் 2012
ஏர் டெக்கான் நிறுவனத்தின் மூலம் ஏற்பட்ட கடன் சுமையின் காரணமாகக் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் விஜய் மல்லையா.
ஊழியர்கள் போராட்டம்
இதன் தொடர்ச்சியாகச் சம்பள நிலுவையின் காரணமாக இந்நிறுவன ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கினர். இதனால் இந்நிறுவனத்தின் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
வருமான வரி துறை
வருமான அறிக்கையைத் தாக்கல் செய்யாதது, போன்ற பல காரணங்களுக்காக இந்நிறுவனத்தின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. இதற்கு முன் பல வருடங்களாகக் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் வங்கிகளில் கடன் பெற்றுக்கொண்டே நிறுவனத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஏர்லையன்ஸ் முடக்கம்
அக்டோபர் மாதம் இந்நிறுவனத்தின் விமானங்களுக்கான குத்தகை பணக் கொடுக்க முடியாத காரணத்தால் இந்நிறுவன விமானங்களைக் குத்தகை நிறுவனங்கள் கைப்பற்றியது. இதன்பின் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் விமானத் துறைக்கு அளிக்க வேண்டிய கட்டணம் மற்றும் வரியைச் செலுத்தாத காரணத்திற்காகவும், இயக்குவதற்கு விமானங்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாத காரணத்திற்காகவும் இந்நிறுவனத்தின் உரிமம் ரத்துச் செய்யப்பட்டது.
டியாஜியோ 2013
2012ஆம் ஆண்டு இறுதியில் பிரிட்டிஷ் மதுபான நிறுவனமான டியாஜியோ யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனப் பங்குகளை வாங்க ஒப்புக்கொண்டது. இதன் பின் 2013ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் னைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் 27 சதவீத பங்குகளைச் சுமார் 6,500 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. இந்தத் தொகையிலும் KFA நிறுவனத்திற்குக் கடன் அளித்த வங்கிகளுக்கு எவ்விதமான தொகையும் அளிக்கப்படவில்லை.
நாணயமற்றவர் 2014
கிங்பிஷர் நிறுவனத்திற்காகப் பெற்ற கடனை அளிக்க முடியாத விஜய் மல்லையாவை முதல் முறையாக யுனைடெட் வங்கி நாணயமற்றவர் என அறிவித்தது. இதன்பின் சில வங்கிகள் அறிவித்தது. இதனைப் பல நீதிமன்றங்களில் தொடுத்த வழக்குகள் மூலம் தன் மீது படிந்த கறையைத் துடைத்தார் மிஸ்டர். மல்லையா.
பதவி விலக வேண்டும் 2015
ஏற்கனவே சனி பகவான் உச்ச தலையில் இருப்பதைக் கவனிக்காத விஜய் மல்லையா டியாஜியோ முதலீடு செய்யப் பணத்தைத் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பல நிறுவனங்களுக்கு முறைகேடாகக் கொடுத்தார். இதனால் டியாஜியோ விஜய் மல்லையாவை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவன தலைவர் பதிவில் இருந்து விலகுமாறு கேட்டது. இதனை மறுத்தார் மல்லையா.
டாட்டா பை பை...
இதன் பின் 2016ஆம் ஆண்டில் டியாஜியோ அறிவித்த 515 கோடி ரூபாய் ஆஃபரை ஏற்றுக்கொண்டு யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
பிரதமர் உதவியை நாடும் ஊழியர்கள்..
2012ஆம் ஆண்டு முடங்கப்பட்ட கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தில் இன்னமும் 1,500 ஊழியர்கள் பணியில் உள்ளனர். கடந்த மார்ச் 5 ஆம் தேதி இந்நிறுவன ஊழியர்கள் மல்லையாவிற்கு ரத்த கண்ணீர் வடிக்காத குறையாகக் கடிதம் எழுதினார். இதற்கு முன்னரே அதாவது மார்ச் 2ஆம் தேதியே மல்லையா நாட்டை விட்டு ஒடிவிட்டார். தற்போது இந்நிறுவன ஊழியர்கள் தங்களது சம்பள நிலுவை கோரிக்கையைப் பிரதமரிடம் கொண்டு சென்றுள்ளனர்.
சொத்துக்கள் பரிமுதல்
இந்த மோசடி வழக்குகளைத் தொடர்ந்து இவருடிஅய விலை உயர்ந்த சொத்துக்கல், கிங்பிஷர் விலா, இவரது நிறுவனத்திற்கு பயன்படுத்தி வந்த கார் உள்ளிட்டைவை ஏற்கனவே ஏலம் விடப்பட்டுள்ளன. ஆனாலும் இவர் வாங்கிய க்டன் தொகையை மீட்டு எடுக்க முடியவில்லை. பல சொத்துக்களை பரிமுதலும் செய்ய முடியவில்லை. இந்தியா மட்டும் இல்லாமல் வெளினாடுகளிலும் கோடி கணக்கில் இவர் சொத்துக்களை குவித்த்துள்ளார்.
கைது
பெங்களுரை சேர்ந்த விஜய மல்லையா இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்து யார்டில் 18/04/2017 கைது செய்யப்பட்டார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications