விவிஐபி-களுக்கு ஆப்பு: விமானத்தை தாமதப்படுத்தினால் 15 லட்சம் அபராதம்..!
ஏர் இந்தியா ஊழியர்களிடம் சிவ சேனா அமைச்சர் மிரட்டும் விதமாக அன்மையில் நடந்துகொண்டதை அடுத்து புதிய விதிகள் அபராதம் உள்ளிட்டைவை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கின்றது.
விமான நிறுவனத்திடம் இருந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவலின் படி விமானத்தைத் தாமதப்படுத்தும் விஐபிகளுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் வரை அபராதம் விதிக்க இருப்பதாகத் தெரிகின்றது.
அபராதங்கள்
இதன்படி 1 மணி நேரம் வரை விமானத்தைத் தாமதப்படுத்தினால் 5 லட்சம் ரூபாய் அபராதமும், 1 முதல் 2 மணி நேரம் வரை தாமதப்படுத்தினால் 10 லட்சம் ரூபாய் அபராதமும், 2 மணி நேரத்திற்கும் அதிகமாகத் தாமதப்படுத்தும் போது 15 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
ஊழியர்களைப் பாதித்த சம்பவங்கள்
அன்மையில் ஏர் இந்தியா ஊழியர்களிடம் தவறாக நடந்ததை அடுத்து விவிஐபி முதல் யாராக இருந்தாலும் சரி ஊழியர்களிடம் தவறாக நடந்துகொண்டால் அது மிகவும் தவறு, இந்தச் சம்பவம் எங்களது ஊழியர்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.
நிறுவனத்திற்கு உரிமை உண்டு
ஹோட்டலில் அறை புக் செய்யும் போது கூட விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும். அதனால் ஏர் இந்தியா ஊழியர்களிடம் பயணிகள் தவறாக நடந்துக்கொள்வதைத் தவிர்க்கும் வண்ணம் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விதிகள் கடுமைப்படுத்துவதற்கான காரணங்கள்
ஏர் இந்தியா இந்த முடிவை மூன்று காரணங்களுக்காகக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. கடந்த ஒரு வருடமாக அமைச்சர்களினால் ஏற்படும் பிரச்சனைகள், அன்மையில் சிவ சேனா அமைச்சரால் ஏற்பட்ட சிக்கல் மற்றும் 60 வயது ஊழியரைச் செருப்பால் அடித்த மூன்று சம்பவங்கள் தான் இந்த முடிவை எடுக்க இருக்கும் காரணங்கள் ஆகும்.
விமான நிலைய அதிகாரிகளுக்கு முழு அதிகாரம்
கட்டுக்கடங்காத பயணிகளைக் கடுமையான கட்டமைப்பு முறையில் வழிநடத்த முழு அதிகாரத்தையும் ஏர் இந்தியா ஊழியர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிர்வாகிகளுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதிக்காகக் காத்திருப்பு
இதற்கான கடுமையான விதிகள் ஏர் இந்தியாவின் சட்டத் துறை தயாரித்துள்ளது என்றும், அவை CMD அஸ்வினி லோகன் அவர்களுடன் ஒப்புதல் பெறுவதற்காகக் காத்திருக்கப்படுகின்றது என்றும் கூறப்படுகின்றது. புதிய விதிகளுக்கான ஒப்புதல் கிடைத்த உடன் விதிகள் கடுமை படுத்தப்படும் கட்டுக்கடங்காமல் ஊழியர்களை நடத்தும் விவிஐபிகளைச் சாதாரணப் பயணிகளாக மாற்றப்படும் என்றும் ஏர் இந்தியா உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நிறுவனத்தின் தலைவரிடம் அனுமதி தேவையில்லை
மேலும் இந்தப் புதிய விதிகளின் மூலமாக விமான நிலைய நிர்வாகிகள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோரிடம் அனுமதி ஏதும் பெறாமல் கட்டுக்கடங்காத பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி உண்டு என்றும் கூறப்படுகின்றது.
பயணிகளுக்கு இழப்பீடு
அதே நேரம் விமான நிறுவனத்தினால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு முறையான இழப்பீடு வழங்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications