எல்லா அரசு துறைகளிலும் காலியிடங்கள் ஆனால் வேலைக்கு மட்டும் ஆட்களை எடுக்க மாட்டோம்..!
இந்திய மக்கள் தொகை 121 கோடிகளைத் தாண்டி சென்றுகொண்டு இருக்கின்றது, அதில் 31 சதவீதத்தினர் 20 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள். அதே நேரம் இந்திய அரசு நிறுவனங்கள் பலவற்றில் 20 முதல் 50 சதவீதம் வரை வேலைக்குக் காலியிடங்கள் உள்ளன.
பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை, நிதித் துறை, சட்டத் துறை மற்றும் மத்திய மனித வளத்துறை என ஆறு மத்திய அமைச்சகங்களிடம் இருந்து பெற்ற தரவுகளை வைத்துப் பார்க்கும் போது இன்னும் 6 முதல் 10 ஊழியர்கள் ஓய்வு பெறும் நிலையிலும் உள்ளனர்.
இப்படி இருக்கும் பொது இந்திய அரசு ஏன் இன்னும் அற்விப்பை வெளியிட்டுக் காலியிடங்களை நிரப்பி அனைத்துத் துறைகளையும் திறம்படச் செயல்படுத்தாமல் இருக்கின்றது என்று வல்லுநர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இப்படிப் பட்ட சூழலில் துறை வாரியாகக் காலியாக உள்ள பணி இடங்களின் விவரங்களை இங்குப் பார்ப்போம்.
கல்வி
மத்திய மனித வளத்துறையிடம் இருந்து பெற்ற தரவுகளை வைத்துப் பார்க்கும் போது தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மட்டும் 10 லட்சம் ஆசிரியர் பணிகள் காலியாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் உள்ளிட்ட அரசுக் கல்வி நிறுவனங்களில் 6,000 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவை மட்டும் இல்லாமல் மத்திய பல்கலைக்கழகங்களில் 6,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. பொறியியல் கல்லூரிகளில் 29 சதவீதம் அதாவது 4.2 லட்சம் பணி இடங்கள் காலியாக உள்ளன.
சட்ட அமலாக்கத் துறை
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதி மன்றங்களில் இத்தினை வழக்குகள் உள்ளன, தீர்ப்புகள் தாமதமாக வழங்கப்படுகின்றன என்று நாம் குறை கூறி வரும் நிலையில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதி மன்றத்தில் 40 சதவீதம் வரை காலியிடங்கள் உள்ளன. பிற நீதிமன்றங்களில் 15,000 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
காவல் துறை
நாடு முழுவதும் 24 சதவீதம் அதாவது காவல் துறையில் மட்டும் 5 லட்சம் காலியிடங்கள் உள்ளன என்றும் அதில் அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 50 சதவீதமும், கர்நாடகாவில் 36 சதவீதமும் காலியிடங்களாக உள்ளன. தமிழகத்தில் 50,000 காலியிடங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
சிபிஐ-ல் 24 சதவீதம் காலியிடங்களும், அமலாக்க இயக்குநரகத்தில் 63 சதவீதம் காலியிடங்களும் உள்ளன என்றும் கூறப்படுகின்றது.
பாதுகாப்புத் துறை
பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்ப பிரிவில் மட்டும் 41 சதவீதம் காலியிடங்களும், தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளில் 44 சதவீதமும் காலியிடங்கள் உள்ளன என்று கூறப்படுகின்றது. ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளிலும் மொத்தமாக 55,000 பணியிடங்கள் காலியாக உள்ளன.
மத்திய ஆயுதப் படையில் 74,000 காலியிடங்களும், கடலோர காவல்படையில் 20 சதவீதம் வரை காலியிடங்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சுகாதாரத் துறை
மருத்துவர், நோயாளிகள் விகிதம் 1:1,560 ஆக உள்ளது என்றும், செவியலர்கள், நோயாளிகள் விகிதம் 1:707 ஆக உள்ளது என்று ஆனால் இது மிகவும் குறைவு என்றும் வால்லுனர்கள் கூறுகின்றனர். இதில் அதிகப்படியான காலியிடங்கள் கிராம்புறங்களில் தான் உள்ளது என்றும் அதற்கு நாம் நிறைய மருத்துவக் கல்லூரிகளைக் கிராமப்புறங்களில் அமைக்க வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த ஹொஸ்மட் மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் அஜித் பெனடிக்ட் ரியான் கூறுகிறார்.
யாருடைய தவறு இது?
இப்படி இருக்கும் நிலையில் அரசுத் துறைகள் சரியாக இயங்குவதில்லை என்று நாம் குறை கூறினாலும் தேவையான அளவு ஆட்களை அரசு நியமிக்காமல் இருப்பது யாருடைய தவறு.


Click it and Unblock the Notifications