டிசிஎஸ் காலாண்டு அறிக்கையில் எப்படி இன்ஃபோசிஸ் நிறுவனம் எதிர்பார்த்த லாபம் இல்லை என்றதோ அதே போன்று வருவாய் மற்றும் லாபத்தில் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2016-ம் ஆண்டிற்கான 4 வது காலாண்டு அறிக்கையைச் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. காலாண்டு அறிக்கை வெளியீட்டால் நிறுவனத்தின் பங்குகள் 0.53 சதவீதம் சரிந்து 2,308 ரூபாயாக வர்த்தகம் ஆனது.
டிசிஎஸ் காலாண்டு அறிக்கையில் எப்படி இன்ஃபோசிஸ் நிறுவனம் எதிர்பார்த்த லாபம் இல்லை என்றதோ அதே போன்று வருவாய் மற்றும் லாபத்தில் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
நிகர லாபம்
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் 3வது காலாண்டுடன் ஒப்பிடும் பொது 2.51 சதவீதம் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும், சென்ற காலாண்டு 6,778 கோடியாக இருந்த வருமானம் 6,608 கொடி ரூபாயாகக் குறைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இருப்பினும் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016-2017 நிதி ஆண்டின் வருவாய் 4.23 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிவித்துள்ளது.
செயல்பாடுகளில் இருந்து வருமானம்
டிசிஎஸ் நிறுவனம் நிறுவனத்தின் மொத்த விற்பனையிலும் 0.3 சதவீதம் அதாவது 29,945 கோடியாக இருந்த வருமானம் 29,642 கோடியாகச் சரிந்துள்ளதாகக் கூறியுள்ளது.
பங்குகள் மூலம் கிடைத்த வருமானம்
மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும் போது 34.40 ரூபாயாக இருந்து ஒரு பங்கின் லாபம் 4 வது காலாண்டு அறிக்கையின் படி 33.52 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அறிவித்துள்ளது.
டிவிடெண்ட் - ஈவுத்தொகை
டிசிஎஸ் நிறுவனம் இறுதி ஈவுத்தொகையை ஒரு பங்கிற்கு 27.50 ரூபாய் என அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள்
டிசிஎஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் வருவாய் 29 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு நிலையான நாணய வருவாயாக 1.4 பில்லியன் டாலர் பெற்றுள்ளதாகவும், டிசிஎஸ் சீராக வாடிக்கையாளர்களை அதிகரித்து வருவதாகவும் அதனால் வருவாய் தரப்பு அதிகரித்து வருவதாகவும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications