இந்தியாவின் முன்னணி ஜிபிஎஸ் நேவிகேஷன் மற்றும் லொகேஷன் சேவையை அளிக்கும் மேப்மைஇந்தியா நிறுவனம் பெங்களுரில் இருக்கும் VIDTEQ நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு பிளிப்கார்ட் நிறுவனம் மேப் மை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்தது. இதன் பின் இந்நிறுவனம் சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
பெங்களுரூ
மே 2008ஆம் ஆண்டுச் சந்திரா திம்மனகரி மற்றும் நவாடா முரளீதர ஆகியோரால் துவங்கப்பட்ட விட்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தான் இந்த VIDTEQ-ஐ உருவாக்கியது.
வீடியோ
ஒரு நகரத்தின் இரு முனைகளில் இருந்து வழித்தடத்தை வீடியோ வாயிலாகப் பதிவு செய்யும் சேவையை VIDTEQ அளிக்கிறது. தற்போதைய நிலையில் இந்நிலையில் சுமார் 20 நகரங்களில் இருக்கும் அனைத்து வழித்தடங்களைப் பதிவு செய்துள்ளது.
பதிவு
மேலும் இந்த வழித்தடம் குறித்த டேட்டாவை VIDTEQ நிறுவழம் டிரோ் மூலம் 360 கோணத்தில் மேப்மைஹோம்.காம் நிறுவனத்தின் வாயிலாகப் பதிவு செய்கிறது.
முதலீடு
2011 ஜூலை மாதம் VIDTEQ நிறுவனம் 5.3 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடாகத் திரட்டியது.
கைப்பற்றல்
இந்நிலையில் பிளிப்கார்ட் முதலீட்டில் இயங்கி வரும் மேப்மை இந்தியா நிறுவனம் VIDTEQ-ஐ அறிவிக்கப்படாத தொகைக்கு முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.
தற்போதைய நிலையில் மேப்மை இந்தியாவிற்கு 5000 நிறுவனங்களும் 10 மில்லியன் மக்களும் வாடிக்கையாளராக உள்ளனர்.
சேவை விரிவாக்கம்
VIDTEQ நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் மேப்மை இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவையை அளிக்க உள்ளது.


Click it and Unblock the Notifications