கிராம மக்களுக்குக் குறைந்த வட்டியில் 1 லட்சம் ரூபாய் கடன்.. மத்திய அரசின் அதிரடி திட்டம்..!
இந்திய கிராமங்களில் நிலவும் வறுமையை ஒழிக்கும் விதமாக மத்திய அரசு மைக்ரோ கிரெடிட் திட்டத்தை மத்திய அரசு மாற்றியமைத்து வருகிறது.
இதன் படி இந்திய கிராமங்களில் வறுமையில் தவிக்கும் குடும்பங்களுக்கு, எவ்விதமான பிணையம் இன்றி, மிகவும் குறைந்த வட்டியில் ஒரு குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் என்ற வீதத்தில் அடுத்த 3-5 வருடங்களுக்குக் கடன் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அமர்ஜித் சின்ஹா
இத்திட்டத்தின் படி கடன் வழங்கும் முறை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. மேலும் கிராம பகுதியில் இருக்கும் குடும்பங்கள் குறித்த விபரங்களைச் சேகரித்து வருகிறோம், இதன் மூலம் அவர்களுக்குக் கடன் எளிமையான முறையிலும் நேரடியாகவும் அவர்களுக்குச் சென்றடையும் என் கிராம வளர்ச்சித் துறை செயலாளர் அமர்ஜித் சின்ஹா தெரிவித்துள்ளார்.
8.5 கோடி குடும்பங்கள்
தற்போதைய நிலையில் சமூகப் பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்பின் படி இந்திய கிராம பகுதிகளில் மட்டும் சுமார் 8.5 கோடி குடும்பங்கள் ஏழ்மையில் தவித்து வருகிறது.
இந்த அனைத்துக் குடும்பங்களையும் 2019ஆம் ஆண்டுக்குள் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வருடத்திற்கு 60,000 கோடி ரூபாய்
இத்திட்டத்தின் படி வருடத்திற்கு 60,000 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் கடன் அளிக்க முடிவு செய்துள்ளது. மேலும் இத்திட்டம் 2019ஆம் ஆண்டு வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக வட்டி
இதன் மூலம் கிராம மக்கள் உள்ளூர் கடன் அளிப்பவர்களையும், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களையும் நம்பி இருக்கத் தேவையில்லை. மேலும் இவர்கள் 11 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி விகிதத்தில் கடன் அளிக்கும் காரணத்தால் பல குடும்பங்கள் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கி வருகிறது.
மத்திய அரசின் இத்திட்டத்தின் வாயிலாக வட்டி அனைத்தும் மானியம் அளிக்கப்பட உள்ளதால், கிராம மக்களின் வளர்ச்சிக்கு இது மிகப்பெரிய அளவில் பயன்படும்.
விவசாயம்
மேலும் ஊரக வளர்ச்சி அமைச்சகம், விவசாயம் மற்றும் விலங்கு வளர்ப்பு அமைச்சகத்திடம் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் படி கிராம மக்கள் மாட்டுப் பண்ணை, ஆடு தொட்டி அமைக்க விருப்பம் உள்ள கிராம மக்களுக்கு உதவி அளிக்கும் வகையில் இத்திட்டத்தின் மூலம் கடன் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பால்
விவசாயிகள் மத்தியில் சரியான இணைப்பை உருவாக்க மத்திய அரசு தேசிய டெய்ரி டெவலப்மெண்ட் போர்டு உதவியை நாடியுள்ளது. இதன் மூலம் பல வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என மத்திய அரசு நம்புகிறது.
வட்டி விகிதம்
தற்போது வங்கிகள் அளித்தும் வரும் 11 சதவீத வட்டி கொண்ட கடனில் இத்திட்டத்தின் வாயிலாக ஊரக வளர்ச்சி அமைச்சகம் 4 சதவீதமும், 250 பின்தங்கிய மாவட்டக்களில் இருக்கும் குடும்பங்களுக்குக் கூடுதலாக 3 சதவீத வட்டி சலுகையும் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் வெறும் 4 சதவீத வட்டி கிராம மக்கள் கடன் பெற முடியும்.
வாய்ப்புகள்
இத்தகைய கடன் மூலம் வறுமையில் இருக்கும் கிராம மக்களுக்கு இது புதிய வாய்ப்புகளைத் தேடித்தரும்.
இதன் மூலம் இவர்களின் திறமை மற்றும் உழைப்பு இந்திய பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய அளவில் பங்காற்றும் என்று சின்ஹா தெரிவித்தார்.
முன்மாதிரி
இத்திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு பஞ்சாயத் அமைப்புகள் மற்றும் தெலங்கானா ஸ்ரீநிதி கோ-ஆப்ரேடிவ் அமைப்புகளின் செயல்முறையை ஆய்வு செய்து, இதன் வாயிலாக இத்திட்டத்தை வடிவமைத்துள்ளது.
வேலைக்காரி முதல் முகேஷ் அம்பானி வரை..
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications