20 நாடுகளை விடவும் அதிக சொத்துக்களை வைத்துள்ளார் முகேஷ் அம்பானி..!

By குட்ரிட்டர்ன்ஸ்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் சுமார் 20 நாடுகளை விடவும் அதிகச் சொத்துக்களை வைத்துள்ளார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி. இந்திய பொருளாதாரத்தின் குடுமியே இவர் கையில் தான் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா..?

 

அது தான் உண்மை.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி உருவாக்கிய ரிலையன்ஸ் குழுமம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

குறிப்பாக இவர் கட்டுப்பாட்டில் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானி தலைமையில் வியக்க வைக்கும் அளவிற்கு வளர்ச்சியை அடைந்துள்ளது. இத்தனை பெருமைக்கும் உடையவரான முகேஷ் அம்பானி இந்தியாவில் பிறக்கவில்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

 

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

ஏப்ரல் 19, 1957ஆம் வருடம் திருபாய் அம்பானி, கோகிலாபென் அம்பானிக்கும் பிறந்த மூத்த மகனான முகேஷ் அம்பானி யெமன் நாட்டின் துறைமுக நகரமான ஏடென் நகரத்தில் பிறந்தார்.

இவருக்குப் பின் திருபாய் அம்பானி, கோகிலாபென் தம்பதியினருக்கு அனில் அம்பானி, தீப்தி சலகோன்கார், நீனா கோத்தாரி ஆகியோர் பிறந்தனர்.

 

1970வரை
 

1970வரை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 1966ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டாலும் 1970ஆம் ஆண்டு வரை திருபாய் அம்பானி குடும்பம் மும்பை நகரில் ஒரு 2 பெட்ரூம் கொண்ட வீட்டில் தான் தங்கியிருந்தனர்.

திருபாய் மறைவு

திருபாய் மறைவு

திருபாய் மறைவிற்குப் பின் ரிலையன்ஸ் குழுமம் இரண்டாகப் பிரிந்தது. இதில் பெட்ரோல் சுத்திகரிப்பு சாந்த வர்த்தகம் முகேஷ் அம்பானிக்குக் கிடைத்தது.

இதன் பின் முகேஷ் அம்பானியின் நிறுவன வளர்ச்சியே இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியாக மாறியது.

 

நீதா அம்பானி

நீதா அம்பானி

முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் உயர்மட்ட நிர்வாக குழுவில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

இந்திய பொருளாதாரத்தில் முகேஷ் அம்பானியின் ஆதிக்கம் இன்று வரை குறையவில்லை. இன்றைய நிலையில் முகேஷ் அம்பானியின் சொத்து மத்திப்பு 23 பில்லியன் டாலர்.

தற்போது முகேஷ் அம்பானி பெட்ரோல் சுத்திகரிப்பு முதல் காய்கறி வியாபாரம் வரை அசத்தி வருகிறார். முகேஷ் அம்பானியிடம் இந்திய பொருளாதாரத்தை அடிப்படைக்கும் அளவிற்கு என்ன தொழில் செய்கிறார் என்பதேயே நாம் இப்போது பார்க்க போகிறோம்.

 

பெட்ரோகெமிக்கல்

பெட்ரோகெமிக்கல்

பெட்ரோல் சுத்திகரிப்பு மற்றும் துணை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

பேகேஜிங், விவசாயம், ஆட்டோமோடிவ், ஹவுசிங் மற்றும் ஹெல்த்கேர் துறை சார்ந்த பல முக்கியப் பொருட்களைத் தயாரித்து வருகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது இப்பிரிவு சார்ந்த வர்த்தகத்தில் பாலிமர்ஸ், பாலியெஸ்டர், பைபர் இண்டர்மீடியேட்ஸ், ஆரோமேடிக்ஸ், எலாஸ்டோமெர் ஆகியவற்றைத் தயாரிக்கிறது.

 

டெக்ஸ்டைல்

டெக்ஸ்டைல்

இந்தியாவில் டெக்ஸ்டைல் துறையில் இன்று ஒரு முன்னோடியாகத் திகழும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய வர்த்தகப் பிராண்ட் தான் விமல்.

விமல் பிராண்ட் பெயரில் இக்குழுமம் பேப்ரிக்ஸ், ஆடைகள், ஆட்டோ பர்னீஷ் பொருட்களை மிகப்பெரிய அளவில் தயாரித்து, உலகளவில் வர்த்தகம் செய்து வருகிறது.

 

ஜியோ

ஜியோ

சமீபத்தில் இந்திய டெலிகாம் துறையைப் புரட்டி போட்டி பெருமை முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தையே சாரும்.

யாரும் எதிர்பார்க்காத வகையில், சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் டெலிகாம் துறையில் களமிறங்கியுள்ளது முகேஷ் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

 

ரிலையன்ஸ் ரீடெய்ல்

ரிலையன்ஸ் ரீடெய்ல்

ரிலையன்ஸ் ரீடெய்ல் பிரிவு 2006-ம் ஆண்டு நேரடியாக வாடிக்கையாளர்களைச் சென்று அடைவதற்காக உருவாக்கப்பட்டது ஆகும். இதன் மூலம் லட்சக் கணக்கான வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் ஒவ்வொரு வாரமும் 3.5 மில்லியன் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ரிலையன்ஸ் ரீடெய்ல் மூலமாக என்னென்ன வணிகங்களில் எல்லாம் ரிலையன்ஸ் செய்து வருகின்றது என்று இங்குப் பார்ப்போம்.

 

ரிலையன்ஸ் ஃப்ரெஷ்

ரிலையன்ஸ் ஃப்ரெஷ்

ரிலையன்ஸ் ப்ரெஷ் ரிடெயில் கடைகள் மூலமாக வீட்டிற்குத் தேவையான மளிகை சாமானங்கள், காய் கறிகள், பழங்கள் போன்றவற்றைத் தங்கலது பிறாண்டு பெயரில் மட்டும் இல்லாமல் பிற நிறுவனங்களின் பிறாண்டுகளையும் ரிலையன்ஸ் ஃப்ரெஷ்
விற்று வருகின்றது.

ரிலையன்ஸ் ஃப்ரெஷ் டைரக்ட்

ரிலையன்ஸ் ஃப்ரெஷ் டைரக்ட்

ரிலையன்ஸ் ஃப்ரெஷ் டைரக்ட் மூலமாக இணையதளத்தில் மளிகை பொருட்களை விற்பானைச் செய்து வரப்படுகின்றது.

ரிலையன்ஸ் ஸ்மார்ட்

ரிலையன்ஸ் ஸ்மார்ட்

ரிலையன்ஸ் ஸ்மார்ட் மூலமாகச் சூப்பர் மார்க்கெட் கடையாக மளிகை பொருட்கள், ஆடை அணிகலன்கள், வீட்டிற்குத் தேவையான தட்டுபுட்டுச் சாமானங்கள், நொறுக்குத் தின்பண்டங்கள் போன்றவற்றை விற்பனை செய்கின்றது.

 

 

ரிலையன்ஸ் மார்க்கெட்

ரிலையன்ஸ் மார்க்கெட்

மளிகை பொருட்கள், நுகர்பொருட்கள், போன்றவற்றை மொத்த கொள்முதல் விலைக்கு இங்கு வங்கைச் சென்று விற்பனை செய்ய முடியும். இந்தியா முழுவதும் 37 நகரங்களில் ரிலையன்ஸ் மார்க்கெட் கடைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் டிஜிட்டல்

ரிலையன்ஸ் டிஜிட்டல்

இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் மின்னணு கடையில் சங்கிலி நிறுவனமாக ரிலையன்ஸ் டிஜிட்டல் செயல்பட்டு வருகின்றது. இங்கு ஆடியோ மற்றும் காணொளி பொருட்கள், டிஜிட்டல் கேமராக்கள், குளிரூட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், மைக்ரோவேவ் ஓவன்கள், நீர் தூய்மையாக்கிகள், சமையலறை மற்றும் வீட்டு உபகரணங்கள், கேமிங் கன்சோல்கள் கேம்களும், கணினிகள், லேப்டாப்கள், டேப்லெட் போன்ற அனைத்து விதமான பொருட்களையும் வாங்க முடியும்.

ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ்

ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ்

ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மூலமாக லேப்டாப், மொபைல் போன்கள், டேப்லெட்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றை வாங்கலாம்.

ஐ-ஸ்டோர்

ஐ-ஸ்டோர்

ஐ-ஸ்டோர் கடை ஐ-போன், ஆப்பிள் நிறுவனங்களின் பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதற்கான தனிப் பிரிவாகும்.

ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ்

ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ்

ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் பிராண்டட் மகளிர் ஆடைகள், உள்ளாடைகள், ஆண்கள் ஆடைகள், குழந்தைகள் ஆடைகள் மற்றும் பேஷன் ஆபரணங்கள் போன்றவற்றை விற்கும் பிரிவாகும்.

ரிலையன்ஸ் ஃபூட்பிரிண்ட்

ரிலையன்ஸ் ஃபூட்பிரிண்ட்

உட்புற, வெளிப்புற, ஃபார்மல்ஸ், கேஷ்வல், விளையாட்டு, கட்சிகள், இன அல்லது அவ்வப்போது பயன்படுத்த கூடிய காலினிகளை விற்கும் பிரிவு ஆகும்.

ஃபூட்பிரிண்ட் 360

ஃபூட்பிரிண்ட் 360

ஃபூட்பிரிண்ட் 360 வாயிலாக எங்கு இருந்து வேண்டுமானாலும் இ-காமர்ஸ் இணையதளம் மூலமாகக் காலினிகளை வாங்க முடியும்.

ரிலியன்ஸ் ஜூவெல்ஸ்

ரிலியன்ஸ் ஜூவெல்ஸ்

இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நகை விற்பனை செய்தற்காக உறுக்கப்பட்ட பிரிவாகும். இந்தியாவில் மொத்தம் 36 நகரங்களில் 50 ரிலியன்ஸ் ஜூவெல்ஸ் கடைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏஜியோ.காம்

ஏஜியோ.காம்

இணையதளம் மூலமாகப் பேஷன் ஆடைகளை விற்பனை செய்யும் பிரிவே ஏஜியோ.காம் ஆகும். இந்த நிறுவனம் 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

8.5 கோடி மதிப்பிலான கார்

8.5 கோடி மதிப்பிலான கார்

அம்பானி பயணம் செய்யும் BMW760Li காரின் மதிப்பு 8.5 கோடி ரூபாய் ஆகும். இந்த காரில் இரு புல்லெட் கூடு துளைக்க முடியாத அளவு பாதுகாப்பானது ஆகும். அதுமட்டும் இல்லாமல் இந்த காரில் உள்ள பெட்ரோல் டேன்க் என்ன செய்தாலும் தீப்பிடிக்கவே பிடிக்காது.

இந்த கார் மட்டும் இல்லாமல் BMW 760Li, மேபேக் 62 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் வகுப்பு காரும் இவரிடம் உண்டு.

 

27 மாடி வீடு

27 மாடி வீடு

என்பதை நீங்களே பாருங்கள்..என்பதை நீங்களே பாருங்கள்..

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவான உண்ம..." data-gal-src="http:///img/600x100/2017/10/08-1507449927-dheerubhai-ambani.jpg">
 உண்மை கதை..!

உண்மை கதை..!

<strong>ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவான உண்மை கதை..!</strong>ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவான உண்மை கதை..!

இவர் தான் இந்தியாவின் அடுத்த அம்பானி..!" data-gal-src="http:///img/600x100/2017/10/08-1507449953-mukeshandbabaramdev.jpg">
அடுத்த அம்பானி..!

அடுத்த அம்பானி..!

<strong>இவர் தான் இந்தியாவின் அடுத்த அம்பானி..!</strong>இவர் தான் இந்தியாவின் அடுத்த அம்பானி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani: Things to know about him

Mukesh Ambani turns 60: Things to know about him
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X