விஜய் மல்லையா இந்தியா வருவதற்கான சாத்தியம் இல்லை..!

விஜய் மல்லையா விரைவில் இந்தியா வருவதற்கான சாத்தியம் இல்லை..ஏன் தெரியுமா..?

வங்கிகளில் 9,000 கோடி கடனை பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் வசித்து வரும் விஜய் மல்லையாவை மோடி அரசு என்ன தான் முயற்சி செய்தாலும் விரைவில் இந்தியா கொண்டு வருவதற்கான சாத்தியம் இல்லை.

செவ்வாய்கிழமை இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா வெஸ்ட்மிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சில மணி நேரங்களில் பெயில் வாங்கினார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதே நேரம் இந்த மதுபானம் மற்றும் விமான நிறுவனங்களின் அதிபதியாக இருந்த விஜய் மல்லையா அவ்வளவு விரைவாக இந்தியா வர வாய்ப்புள்ளை என்று கூறப்படுகின்றது. அது ஏன் என்று இங்கு பார்ப்போம்.

நிபந்தனை ஜாமீன்

நிபந்தனை ஜாமீன்

ஸ்காட்லாந்து யார்டில் கைதான மல்லையா சில மணி நேரங்களில் 650,000 யூரோ அதாவது 5.4 கோடியைச் செலுத்தி மே 17-ம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து நீதிமன்றம்

இங்கிலாந்து நீதிமன்றம்

இந்தியா சார்பாக இங்கிலாந்து அரசு நீதிமன்றத்தில் வாதாடும் என்று கூறப்படுகின்றது.

விஜய் மல்லையாவின் வழக்கு இங்கிலாந்தின் ஒப்புவித்தல் சட்டம் 2003 பாகம் 2இன கீழ் கையாளப்பட்டு வருகின்றது.

 

இந்தியா நிரூபிக்க வேண்டும்

இந்தியா நிரூபிக்க வேண்டும்

1. சிபிஐ மற்றும் இந்திய அமலாக்கத்துறை இரண்டும் மல்லையா மோசடி செய்ததற்கான முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

2. இந்தியாவில் ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருகின்றது.

3. இந்த வழக்கில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்பதையும் இந்தியா நிரூபிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எப்படி இது சாத்தியம் ஆகும்?

எப்படி இது சாத்தியம் ஆகும்?

மேலே கூறியவை அனைத்தும் முறையாக நடக்கும் போது நீதிபதி இங்கிலாந்து செயலாளர்களுக்கு விஜய மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரிக்கை அனுப்புவார்.

ஏற்கனவே இந்தியா இங்கிலாந்து நீதிமன்றங்களில் சரணடை கோரியுள்ள வழக்குகள் ஏற்கனவே இந்தியா இங்கிலாந்து நீதிமன்றங்களில் சரணடை கோரியுள்ள வழக்குகள்

ஏற்கனவே இந்தியா இங்கிலாந்து நீதிமன்றங்களில் சரணடை கோரியுள்ள வழக்குகள் ஏற்கனவே இந்தியா இங்கிலாந்து நீதிமன்றங்களில் சரணடை கோரியுள்ள வழக்குகள்

இந்தியா விஜய் மல்லையா மட்டும் இல்லாமல் லலித் மோடி, உள்ளிட்ட பலரை ஓபடைக்க வேண்டும் நீண்ட காலமாக வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால் இது வரை எதுவும் சாத்தியப்படவில்லை.

எவ்வளவு காலம் எடுக்கும்?

எவ்வளவு காலம் எடுக்கும்?

மல்லையா இந்தியா வர இன்னும் 6 முதல் 1 வருடம் வரை ஆகும் என்று அவரது தரப்பு ஆலோசனை வழங்குநர் அமித் தேசாய்க் கூறினார். ஆனால் இந்த வழக்கைப் பார்க்கும் போது மேலும் காலத் தாமதமும் ஆக வாய்ப்பு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+