இந்தியாவில் 2.5 லட்சம் நிறுவனங்கள் எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம்.. ஊழியர்களே உஷாரா இருங்க..!

இந்தியாவில் 2.5 லட்சம் நிறுவனங்கள் எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம்.. ஊழியர்களே உஷாரா இருங்க..!

கடந்த 2 வருடங்களாக இந்தியாவில் சுமார் 2,50,000 நிறுவனங்கள் எவ்விதமான வர்த்தகமும் செய்யாமல் சும்மாவே இருக்கிறது. அதுமட்டும் அல்லாமல் இந்த நிறுவனங்கள் அரசிடம் தனது உண்மையான நிலையைத் தெரிவிக்காமல் ஏமாற்றி வருவதைத் தற்போது நிறுவன விவகாரத்துறை கண்டுபிடித்துள்ளது.

இதனால் இந்த 2.5 லட்சம் நிறுவனங்கள் எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம் என அரசு கணித்துள்ளது.

நிறுவனங்களின் பதிவாளர்

நிறுவனங்களின் பதிவாளர்

இந்நிலையில் நிறுவன விவகாரத்துறையின் கீழ் இயங்கும் பிராந்தி நிறுவன பதிவாளர் அலுவலகம் கடந்த 2 வாரத்தில் தேக்கம் அடைந்த 2,50,000 நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த நோட்டீஸில் தத்தம் நிறுவனம் நிறுவன சட்டம் 2013இன் படி 'dormant company' என்று அறிவிக்கப்படத் தவறியுள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் எத்தனை நிறுவனங்கள் இருக்கிறது தெரியுமா..?

 

முதல் இடத்தில் மும்பை

முதல் இடத்தில் மும்பை

நிறுவன பதிவாளர் வெளியிட்ட தகவலின் படி மும்பையில் 71,000 நிறுவனங்கள் கடந்த 2 வருடமாக எவ்விதமான வர்த்தகமும் செய்யாமல் தேக்க நிலையில் உள்ளது. இதன் மூலம் செயல் இழந்துக்கிடக்கும் நிறுவனங்களை அதிகம் கொண்ட நகரத்தில் மும்பை முதலிடம் வகிக்கிறது.

மும்பையைத் தொடர்ந்து டெல்லி 53,000, ஹைதராபாத் 40,000, பெங்களுரூ 22,000 நிறுவனங்களை டாப் 5 இடங்களைப் பிடித்துள்ளது.

 

சென்னை

சென்னை

இதைத் தொடர்ந்த 11,000-12,000 நிறுவனங்கள் பட்டியலில் அகமதாபாத், கொல்கத்தா, பூனே ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.

சென்னையில் 4,000 நிறுவனங்கள் தேக்கமடைந்துள்ளாதாக நிறுவன பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் கான்பூர் 7,000 நிறுவனங்கள், ஜெய்ப்பூர் 6,000 நிறுவனங்கள், சண்டிகர் 4,600 நிறுவனங்கள் என இப்பட்டியில் இந்தியாவின் முக்கிய நகரங்களை அனைத்தையும் குறிப்பிட்டுள்ளது.

 

ஆய்வு

ஆய்வு

மேலும் நிறுவன பதிவாளர் அலுவலகம், இந்த 2,50,000 நிறுவனங்களை வருமான வரித்துறை, கலால் வரித்துறை, சேவை வரித்துறை ஆகியவற்றை ஆய்வு செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் மூலம் மத்திய அரசு அடுத்த வேட்டையில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

 

நீக்கம்

நீக்கம்

நிறுவன பதிவாளர் அலுவலகம் ஒரு நிறுவனத்தின் பெயரை அரசின் பதிவில் இருந்து 2 காரணங்களுக்காக நீக்கப்படலாம்.

1. நிறுவனத்தைப் பதிவு செய்து ஒரு வருடத்திற்குள் வர்த்தகத்தைத் துவங்கவில்லை என்றால் நீக்கப்படும்.

2. அதேபோல் வர்த்தகத்தைத் துவங்கிய நிறுவனம் தொடர்ந்து 2 வருடம் எவ்விதமான வர்த்தகம் செய்யவில்லை என்றால் செயல் இழந்த நிறுவனம் என்று அறிவித்து அதனைப் பதவியேட்டில் இருந்து நீக்கப்படும்.

 

ஊழியர்கள்

ஊழியர்கள்

தற்போது நிறுவன பதிவாளர் அலுவலகம் நீக்கப்பட உள்ள நிறுவனங்களில் ஊழியர்கள் பணியாற்றி இருக்கும் பட்சத்தில் அவர்களின் அனுபவம் பிற நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படாது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

இந்தியாவில் 2.5 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டால் வர்த்தகத்தில் பல விதமான பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புச் சந்தையில் மிகப்பெரிய அளவிலான அதிர்வுகள் ஏற்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+