விரைவில் பிக்பாஸ்கட் மற்றும் க்ரோஃபர்ஸ் நிறுவனங்கள் இணைய வாய்ப்பு..!
பிக்பாஸ்கட் மற்றும் க்ரோஃபர்ஸ் இரண்டு நிறுவனங்களும் இணையதளம் மூலமாக மளிகை பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும் நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்களும் இணைவதற்கான பேச்சுவார்த்தை துவங்கியதுள்ளதாக நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிக்பாஸ்கட் நிறுவனத்துடன் க்ரோஃபர்ஸ் நிறுவனம் இணைய வேண்டும் என்றால் க்ரோஃப்பர்ஸ் நிறுவனத்திற்குக் கூடுதல் முதலீடு தேவை.
எனவே க்ரோஃப்பர்ஸ் நிறுவனத்தின் பிரதான முதலீட்டு நிறுவனமான சாப்ட் பேங்க் 60 மில்லியன் டாலர் முதல் 100 மில்லியன் டாலர் வரை கூடுதலாக முதலீடு செய்ய வேண்டி வரும். சாப்ட் பேங்க் நிறுவனம் தான் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டாளர் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ்கட் மற்றும் க்ரோஃபர்ஸ் இரண்டு நிறுவனங்களும் இணைவதற்கான பேச்சு வார்த்தை துவக்க நிலையில் தான் உள்ளது என்றும் பிக்பாஸ்கட் நிறுவனத்தின் மதிப்பு அதிகமாகவும், க்ரோஃபர்ஸ் நிறுவனத்தின் மதிப்பு குறைவாக இருப்பதும் இதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. பிக்பாஸ்கட் நிறுவனத்தின் மதிப்பு 400 முதல் 500 மில்லியன் டாலர்களாகவும், அதே நேரம் க்ரோஃபர்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 150 முதல் 200 மில்லியன் டாலர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ்கட் நிறுவனம் இதுவரை தனது முதலீட்டாளர்களிடம் இருந்து 220 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளதாகவும், மேலும் முதலீட்டைப் பெற அமெசான், வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. பிக்பாஸ்கட் நிறுவனம் மொத்தமாக 700-800 மில்லியன் டாலர்கள் வரை தனது மதிப்பை உயர்த்த முடிவு செய்துள்ளது. க்ரோஃபர்ஸ் நிறுவனம் தனது முதலீட்டாலரான டைகர் குளோபல் மேனேஜ்மெண்ட் மற்றும் சாப்ட் பேங்க்-ம் இருந்து 120 மில்லியன் டாலர்களைப் பெற்றதை அடுத்து நிறுவனத்தின் மதிப்பு 350 மில்லியன் டாலர் முதல் 400 மில்லியன் டாலர்களாக உள்ளது. 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் டோப்லர் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி பிக்பாஸ்கட் நிறுவனம் பெற்ற 580 கோடி வருவாயில் 278 கோடி நட்டம் என்றும் க்ரோஃப்பர்ஸ் நிறுவனம் பெற்ற 225 கோடி வருவாயில் 14.3 கோடி ரூபாய் நட்டம் என்று குறிப்பிட்டு இருந்தது. இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்களில் மளிகை பொருட்கள் விற்பனை மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக உள்ளது. மாறி வரும் டிஜிட்டல் உலகில் இந்திய வாடிக்கையாளர்கள் அதிகமாக நுகர்பொருட்களை இணையதளம் மூலமாக வாங்குவதும் அதிகரித்து வருகின்றது.
கூடுதல் முதலீடுகள் தேவை
துவக்க நிலையில் பேச்சு வார்த்தை
இரண்டு நிறுவனங்களின் மதிப்பு
பிக்பாஸ்கட்
க்ரோஃபர்ஸ்
வருவாய் நட்டம்
இந்திய இ-காமர்ஸ் துறையில் மளிகை பொருட்கள்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications