எங்கே என்னுடைய ரூ.12 கோடி.. இன்போசிஸ் உடன் ராஜீவ் பன்சால் சண்டை..!
பெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ்-இன் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியான ராஜீவ் பன்சால் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியதற்கான severance pay தொகை 2 வருடங்கள் ஆகியும் இன்னமும் முழுமையாக அளிக்காத நிலையில், இன்போசிஸ் நிறுவனத்துடன் சண்டை போட்டு வருகிறார்.
இன்போசிஸ் நிர்வாக மற்றும் நிறுவனர்கள் குழுக்கள் மத்தியில் தற்போது நிலவும் முக்கியப் பிரச்சனைகளுக்கு இவர் தான் ஆரம்பப் புள்ளி.
ராஜீவ் பன்சால்
இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு பன்சால் 2015ஆம் ஆண்டு வெளியேறும் போது, நிர்வாகம் இவருக்கு 17.38 கோடி ரூபாயைப் பணிநீக்க சம்பளமாக (severance pay)அளிக்க ஒப்புதல் அளித்தது.
2 வருடம்
பன்சால் நிறுவனத்தை விட்டு வெளியேறி சுமார் 2 வருடங்கள் ஆன நிலையில் இன்போசிஸ் இவருக்கு வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே அளித்துள்ளது.
சட்ட ரீதியில் சண்டை
இந்நிலையில் மீதமுள்ள 12 கோடி ரூபாயை இன்போசிஸ் அளிக்காத நிலையில் சட்ட ரீதியில் இன்போசிஸை எதிர்கொள்ள ராஜீவ் பன்சால் முடிவு செய்துள்ளார்.
வழக்கு
இந்த வழக்கிற்கு நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்வி ரவீந்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் பன்சாலுக்குப் பிரதிநிதியாக இன்டஸ் லா என்னும் சட்ட நிறுவனமும், இன்போசிஸ் பிரதிநிதியாக நிஷித் தேசாய் அசோசியேட்ஸ் ஆகியவை இந்த வழக்கில் ஈடுபடுகிறது.
மேலும் இந்த வழக்கின் முதல் விசாரணை மே மாத்தில் நடக்க உள்ளது.
இன்போசிஸ்
இதுகுறித்து இன்போசிஸ் கூறுகையில், ராஜீவ் பன்சாலுக்கு அளிக்க வேண்டிய தொகையில் 12 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து உரிமை மற்றும் கடமைகள் சார்ந்த சில விளக்கங்கள் தேவைப்படுகிறது.
இதன் காரணமாகத் தான் இதுவரை அவருக்கு நிலுவையில் உள்ள 12 கோடி ரூபாய் அளிக்கப்படவில்லை என இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரச்சனை
ஏற்கனவே ஊழியர்கள் அளிக்கப்பட்ட அதிகப்படியான severance pay குறித்து இன்போசிஸ் தலைமை அலுவலகத்தில் நிர்வாகக் குழுவிற்கும் நாராயணமூர்த்தித் தலைமையிலான நிறுவனர் குழுவிற்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் வெடித்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கு இன்போசிஸ் நிறுவனத்திற்குப் புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.
இன்போசிஸ் பங்கு விலை
வியாழக்கிழமை வர்த்தகத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 0.28 சதவீதம் அதிகரித்து 921.80 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
ஊழியர்களின் கதி


Click it and Unblock the Notifications