கார், பைக்குன்னு வாங்கிக் கொடுத்து ஊழியர்களைக் குஷிப்படுத்திய சூரத் வைர வியாபாரி..!

கார், பைக்குன்னு வாங்கிக் கொடுத்து ஊழியர்களைக் குஷிப்படுத்திய சூரத் வைர வியாபாரி..!

இன்று காலையில் விப்ரோ நிறுவனத்தின் பணிநீக்கத்தைக் கண்டு ஐடி துறை மட்டும் அல்லாமல் அனைத்து வர்த்தகத் துறையும் சோகத்தில் மூழ்கிய நிலையில் சூரத் வைர வியாபாரியின் செயல், மண்டையைப் பிளக்கும் வெயில் ஆலங்கட்டி மழை போல அமைந்துள்ளது.

அப்படி என்ன செஞ்சிட்டாரு..?

சூரத் வைர வியாபாரிகள்

சூரத் வைர வியாபாரிகள்

ஒவ்வொரு வருடமும் ஊழியர்களை விதவிதமாகக் குஷிப்படுத்துவதில் சூரத் வைர வியாபாரிகள் முக்கிய இடத்தில் இருப்பார்கள். அந்த வகையில் இந்த வருடம் லக்சிதாஸ் விகாரியா என்ற வைர வியாபாரி செய்திகளில் மட்டும் அல்லாமல் ஊழியர்கள் மனத்திலும் இடம்பிடித்துள்ளார்.

உற்சாகப் பரிசு

உற்சாகப் பரிசு

சில வருடங்களுக்குச் சூரத் வைர வியாபாரி ஒருவர் தனது நிறுவனத்திற்குக் கிடைத்த அதிகப்படியான லாபத்தைத் தன் நிறுவனங்கள் ஊழியர்களுடன் பங்குப்போட்டுக்கொள்ளக் கார், பைக், வீடு எனப் பரிசுகளை வாங்கிக் குவித்தார்.

அந்த வரிசையில் தற்போது லக்சிதாஸ் விகாரியாவும் இணைந்துள்ளார்.

 

வருடாந்திர கூட்டம்

வருடாந்திர கூட்டம்

லக்சிதாஸ் விகாரியா-வின் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் தனது ஊழியர்களின் சிறப்பு மிக்கப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் சுமார்
ஊழியர்களுக்குப் புதிய பைக்-ஐ அன்பளிப்பாக அளித்துள்ளார்.

ஹோண்டா

ஹோண்டா

லக்சிதாஸ் விகாரியா தன் நிறுவனத்தில் பணியாற்றும் 125 ஊழியர்களுக்கு ஹோண்டா ஆக்டிவா 4ஜி 109சிசி சக்தி கொண்ட ஸ்கூட்டரை அளித்துள்ளார்.

மேலும் இதனை வழங்கும் போது அனைத்து வண்டிகளும் தேசிய கொடிகளைக் கொண்டி அலங்கரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

ஷவ்ஜிபாஸ் தோலாகியா

ஷவ்ஜிபாஸ் தோலாகியா

இதேபோல் மற்றொரு வைர வியாபாரியான ஷவ்ஜிபாஸ் தோலாகியா புத்தாண்டு பரிசாக 1,200 டட்சன் ரெடி கோ காரை பரிசா அளித்தார். மேலும் இது கடந்த ஆண்டுப் பரிசு பெறாதவர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கார் மற்றும் பிளாட்

கார் மற்றும் பிளாட்

கடந்த ஆண்டு ஷவ்ஜிபாஸ் தோலாகியா தீபாவளி போனஸ் ஆகத் தனது 1,716 ஊழியர்களுக்கு 400 வீடுகள், 1,260 கார்கள் என் வாரி வழங்கினார்.

இப்போ சொல்லுங்க இது ஆலங்கட்டி மழை தானே..!

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+