நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் எதற்காக முதலீடு செய்ய வேண்டும்? இதைப் படியுங்கள் 20 வருடமாக 20 சதவீதம் அள்ளித்தந்த முதலீடு திட்டம்!
வங்கி நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்து ஆண்டுக்கு7 முதல் 7.5 சதவீதம் மட்டுமே அளித்துவரும் நிலையில் ஆண்டுக்கு ஆண்டு வட்டி விகிதமும் குறைந்துகொண்டே செல்கின்றது.
நிரந்தர வைப்பு நிதி என்பது முதலீடு செய்தபிறகு எதைப்பற்றியும் நாம் கவலைப்படாமல் இருக்கக் கூடிய ஒரு திட்டமாகும். ஆனால் குறைந்த வட்டி விகிதம் மட்டுமே லாபம் அளிப்பதால் உங்களது ஓய்வு காலத்தில் இது உங்களுக்குப் பெரிதாக உதவ வாய்ப்பில்லை.
ஈக்விட்டி முதலீடு திட்டம்
நிரந்தர வைப்பு நிதி திட்டத்தை நாம் ஈக்விட்டி முதலீடு திட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஆண்டுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை உங்களது முதலீடுகளுக்கு லாபத்தை அளித்து வந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக மும்பை பங்குச் சந்தை 200 பங்குகளை வாங்கி இருந்தால் 50 சதவீத பங்குகள் 20 சதவீதம் வரையிலும், 70 சதவீத பங்குகள் 15 சதவீதம் வரை லாபம் அளித்திருக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
இந்தியாவின் ஜிடிபி
அன்மையில் நடைபெற்ற ஒரு ஆய்வின் படி இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டே வருவதற்குப் பங்குச் சந்தையில் முதலீடுகள் அதிகரித்துக்கொண்டு வந்துகொண்டே இருப்பது ஆகும்.
அமேரிக்கப் பங்குச் சந்தையைப் பின்னுக்குத் தள்ளிய இந்திய பங்குச் சந்தை
அமெரிக்கப் பங்குச் சந்தைகளை விட இந்திய பங்குச் சந்தை ஒரு பங்கிற்கு 38 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளதைக் கண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். ஆசியாவில் இருந்து சீன பங்குச் சந்தை 23 சதவீதம் வரையிலும் ஒரு பங்கின் லாபத்தை அளித்துச் சராசரியாக 10 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது.
அதிக லாபம் அளிக்கும் இந்திய பங்குச் சந்தை
ஈக்விட்டி சந்தை முதலீடுகளில் இந்தியாவின் மும்பை பங்குச் சந்தை முதலீடுகளும் பிரேசில் பங்குச் சந்தை முதலீடுகள் மட்டுமே 15 முதல் 20 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்கப் பங்குச் சந்தை மற்றும் சீன பங்குச் சந்தையும் உள்ளன.
என்எஸ்எஸ்ஓ மாதிரி தரவு
என்எஸ்எஸ்ஓ மாதிரி தரவை வைத்துப் பார்க்கும் போது சந்தையில் முதலீடுகளைத் துவங்கும் காலம் முக்கியம் இல்லை என்றும், 2007-ம் ஆண்டில் இருந்து மும்பை பங்கு சந்தைப் பங்குகள் 20 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளதை உறுதி செய்கின்றது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications