ஐடி நிறுவனங்கள் அடுத்து என்ன செய்யபோகிறது..? ஐடி ஊழியர்கள் கவனத்திற்கு..!!

இந்திய ஐடி நிறுவனங்களின் ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி வருவதால் நிறுவனங்களுக்கு அதிகளவிலான ஊழியர்கள் தேவைப்பாடாது என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றாக இருந்தாலும்.

அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ள விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்ற கணித்துக்கொண்டும் நிலையிலேயே, விப்ரோ இந்தப் பாதிப்பின் எதிரொலி எப்படி இருக்கும் என்று ஊழியர்களுக்குக் காட்டியுள்ளது.

விப்ரோ

விப்ரோ

ஏப்ரல் 25ஆம் தேதி காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ள விப்ரோ, அறிவிப்பிற்கு முன்னதாகவே 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

2016-17ஆம் நிதியாண்டுக்கான ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் விப்ரோ நிறுவனம் Non-Performers என்று கூறப்படும் குறைந்த செயல்திறன் கொண்ட ஊழியர்களைச் சுமார் 600 பேரை உடனடியாக நிறுவனத்தை விட்டு வெளியேற்றியுள்ளது.

 

பணிநீக்கம் தொடரும்..

பணிநீக்கம் தொடரும்..

மேலும் நடப்பு நிதியாண்டில் ஊழியர்களின் பணிநீக்கம் 2000 வரை உயரும் என்றும், சந்தையில் வர்த்தக நிலை சீராகும் வரை இந்தப் பணிநீக்கம் தொடரும் என விப்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலை விப்ரோ நிறுவனத்தில் மட்டும் தானா என்று நீங்கள் கேட்டால்? சத்தியமாக இல்லை.. காக்னிசென்ட், இன்போசிஸ், கேப்ஜெமினி, டிசிஎஸ் போன்ற நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்திலும் இதே நிலைதான்..!

 

என்ன நடவடிக்கை

என்ன நடவடிக்கை

விப்ரோ தனது வர்த்தகம் மற்றும் வருவாய் அளவுகளைச் சீர்ப்படுத்த ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில் பிற காக்னிசென்ட், இன்போசிஸ், கேப்ஜெமினி, டிசிஎஸ் நிறுவனங்கள் என்ன செய்யப்போகிறது..? வாங்க பார்ப்போம்.

காக்னிசென்ட்

காக்னிசென்ட்

காக்னிசென்ட் அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் இதன் 75 சதவீத ஊழியர்கள் இந்தியாவில் தான் உள்ளனர்.

நடப்பு நிதியாண்டின் துவக்கத்திலேயே 2,60,000 ஊழியர்களைக் கொண்டுள்ள காக்னிசென்ட் நிறுவனம் 5 சதவீதம் அதாவது 10,000 ஊழியர்களைக் குறைந்தபட்சம் நிறுவனத்தை விட்டு வெளியேற்றுவதாக வெளிப்படையாகவே அறிவித்தது.

 

அமெரிக்க நிறுவனம்

அமெரிக்க நிறுவனம்

இந்நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் காரணத்தினால் அமெரிக்காவில் அதிகளவிலான பணிநீக்கம் இருக்காது என ஐடித்துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இதனால் இந்தியாவில் இருக்கும் ஊழியர்களுக்கு மார்ச் மாதம் முதலே வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

 

செயல்திறன் மதிப்பீடு

செயல்திறன் மதிப்பீடு

மேலும் இந்தப் பணிநீக்கம் அனைத்தும் 2016-17ஆம் நிதியாண்டுக்கான ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் மட்டுமே நடக்கும் எனக் காக்னிசென்ட் தெரிவித்துள்ளது.

இதனால் விப்ரோ நிறுவனத்தைப் போலவே CTS நிறுவனமும் கடுமையான கணக்கீட்டை கொண்டு செயல்திறன் மதிப்பீட்டைச் செய்ய உள்ளது.

 

ஏப்ரல் மாதம்

ஏப்ரல் மாதம்

மேலும் இந்நிறுவனத்தின் பணிநீக்கம் குறித்த அறிவிப்பு ஏப்ரல் மாதம் இறுதியில் வெளியாகும் எனக் கருதப்படுகிறது.

இன்போசிஸ்

இன்போசிஸ்

இந்திய ஐடித்துறையில் மிக முக்கிய நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் இந்த வருடம் பணிநீக்கம் மட்டும் அல்லாலமல் பிரஷ்ஷர்களின் தேர்வும் மிகவும் குறைவாக இருக்கும்.

கடந்த நிதியாண்டில் இண்போசிஸ் சுமார் 17,857 புதிய ஊழியர்களை நிறுவனத்தில் சேர்த்த நிலையில் 2016-17 நிதியாண்டில் வெறும் 6,320 ஊழியர்களை மட்டுமே சேர்த்துள்ளது. இது கிட்டதட்ட 60 சதவீத சரிவு.

 

விஷால் சிக்கா

விஷால் சிக்கா

பிப்ரவரி மாதம் இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓ விஷால் சிக்கா இந்தியாவில் ஆட்டோமேஷன் காரணமாக வரலாறு காணாத வகையில் ஐடி ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனக் கூறினார்.

அனுபவ பெற்ற ஊழியர்கள்

அனுபவ பெற்ற ஊழியர்கள்

அதேபோல் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான யுபி பிரவீன் ராவ், அடுத்தச் சில வருடங்களில் 15-20 வருட அனுபவம் பெற்ற ஊழியர்கள் நிறுவனத்தின் சொத்து என்ற நிலை சுமையாக மாறும் என்று கூறினார்.

அதேபோல் இத்தகையைச் சூழ்நிலையில் இருக்கு வெளியேற அதிக அனுபவம் பெற்ற ஊழியர்கள் புதிய டெக்னாலஜி-ஐ கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரவீன் ராவ் கூறினார்.

 

இன்டர்ன்ஷிப்

இன்டர்ன்ஷிப்

இதோடு நிற்காமல் இன்போசிஸ் கடந்த சில மாதங்களாக எப்போதும் இல்லாத அளவிற்குக் கல்லூரியில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு அதிகளவிலான இன்டர்ன்ஷிப் அளிக்கிறது.

இதன் மூலம் இன்போசிஸ் மாணவர்களைப் பணியில் அமர்த்துவதற்கு முன் அவர்களின் திறனை ஆய்வு செய்து பணியில் அமர்த்தலாம் இல்லையெனில் எளிமையாக வெளியேற்றிவிடலாம்.

 

கேப்ஜெமினி

கேப்ஜெமினி

இந்தியாவிலும் அமெரிக்கச் சந்தையிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்ட ஐரோப்பிய மென்பொருள் நிறுவனமான கேப்ஜெமினி ஐகேட் நிறுவனத்தை வாங்கியது.

தற்போதிற்கும் சந்தைச் சூழ்நிலையில் பிற நிறுவனங்களைக் காட்டிலும் கேப்ஜெமினி ஊழியர்களுக்குச் சாதகமான பணிகளையே செய்து வருகிறது.

இந்தியாவில் இருக்கும் இந்நிறுவன ஊழியர்களில் 1,00,000 பேருக்கு டிஜிட்டல் தொழில்நுட்படத்தில் 2018ஆம் ஆண்டுகள் பயிற்சி அளித்து அவர்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளது.

 

புதிய ஊழியர்கள்

புதிய ஊழியர்கள்

அதேபோல் இந்தியாவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் பிரஷ்ஷர்களைப் பணியில் அமர்த்தும் எண்ணிக்கையைக் குறைத்து வரும் நிலையில் கேப்ஜெமினி தற்போது இருக்கும் 15-20 சதவீத அளவை 40 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.

டிசிஎஸ்

டிசிஎஸ்

ஏற்கனவே ஊழியர்களை வெளியேற்றத் திட்டமிட்டு மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்ட டிசிஎஸ் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல் கேப்ஜெமினி நிறுவனத்தைப் போலவே ஊழியர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

மெக்கென்சி அண்ட் கம்பனி

மெக்கென்சி அண்ட் கம்பனி

இந்திய ஐடி நிறுவனங்களுக்கு இது அப்ரைசல் காலம் என்பதால் அமெரிக்காவின் முன்னணி ஆலோசனை நிறுவனமான மெக்கென்சி அண்ட் கம்பனி இந்திய ஐடி துறை குறித்த முக்கிய ஆய்வை நடத்தியுள்ளது.

தேவையில்லாத ஊழியர்கள்

தேவையில்லாத ஊழியர்கள்

இதில் அடுத்த 3-4 வருடத்தில் சுமார் 3,700,000 வேலைவாய்ப்புகள் இந்திய ஐடி நிறுவனங்களில் தேவையற்றதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இது இந்திய ஐடித்துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகளில் 50 சதவீதம்.

இதை நாஸ்காம் நிறுவனமும் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஆபத்தில் ஐடி துறை

ஆபத்தில் ஐடி துறை

இந்தியாவில் அடுத்த 5 வருடத்தில் ஐடித்துறையில் ஆட்டோமோஷன் ஆதிக்கத்தின் மூலம் "Low Skilled" தர வேலைவாய்ப்புகள் 30 சதவீதம் வரை பாதிக்கப்படும் என HFS Research நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

அதிகம் திறமைகள் தேவைப்படாத, தினந்தோறும் செய்ய வேண்டிய ஒரே வேலைகளையே நாம் Low Skilled வேலைவாய்ப்பாகக் கூறப்படுகிறது.

அதேபோல் மீடியம் ஸ்கில்டு வேலைவாய்ப்புகள் 8 சதவீதம் வரையும், ஹெய்-ஸ்கில்டு வேலைவாய்ப்புகளில் 56 சதவீதம் வரை பாதிக்கப்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

பிபிஓ

பிபிஓ

இந்தியா நிறுவனங்களில் ஆட்டோமேஷன் செய்வதன் மூலம் அதிகளவிலான பிபிஓ வேலைவாய்ப்புகள் காற்றில் பறந்து காணாமல் போய் வருகிறது. இந்நிலையில் HFS Research நிறுவனத்தின் ஆய்வில் அடுத்த 5 வருடத்தில் 3.7 மில்லியன் பிபிஓ வேலைவாய்ப்புகள் இழப்பு ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

உலக வங்கி

உலக வங்கி

HFS Research நிறுவனத்தின் ஆய்வை உறுதி செய்யும் வகையில் ஆட்டோமேஷன் மூலம் இந்தியாவில் 69 சதவீதமும், சீனாவின் 77 சதவீதமும், எத்தியோப்பியாவில் 85 சதவீதம் அளவிற்கு வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட உள்ளது என உலக வங்கி தெரிவித்தது.

இனி ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்.

இனி ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்.

சந்தைக்கு ஏற்றார் போல் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் இல்லையெனில் அதிகச் சம்பளம் தரும் பெரிய டெக்னாலஜி நிறுவனங்களில் சேர்ந்து விடவேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+