விப்ரோ நிறுவனத்தில் 600 பேர் பணிநீக்கம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!
பெங்களுரூ: இந்தியாவின் 3வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான விப்ரோ 2016-17ஆம் ஆண்டுக்கான செயல்திறன் மதிப்பீட்டின் வாயிலாகச் சுமார் 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
விப்ரோவின் இந்த அறிவிப்பு இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.
600 ஊழியர்கள்
இந்தியா மட்டும் அல்லாமல் உலகச் சந்தையில் டிசிஎஸ், இன்போசிஸ் உடன் சரி சமமாகப் போட்டி போடும் விப்ரோ நிறுவனம் தற்போது எச்1பி விசா முதல் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.
இந்தப் பிரச்சனைகளைக் குறைக்கும் விதமாக விப்ரோ நிறுவனம் 2016-17 நிதியாண்டுக்கான ஊழியர்களின் வருடாந்திர "performance appraisal" மூலம் சுமார் 600 பேரைப் பணிநீக்கம் செய்யதுள்ளது.
2000 வரை உயரலாம்
ஊழியர்களின் செயல்திறன் மதிப்பீட்டில் மிகக் குறைந்த ரேடிங் அளித்து ஊழியர்களை வெளியேற்றி வருகிறது விப்ரோ நிர்வாகம்.
மேலும் ஊழியர்களின் பணிநீக்கம் எண்ணிக்கை 600இல் இருந்து 2,000 வரை உயரலாம் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
1.79 லட்சம் ஊழியர்கள்
2016ஆம் ஆண்டு டிசம்பர் மாத வரையில் இந்நிறுவனத்தில் சுமார் 1.79 லட்சம் ஊழியர்கள் இந்தியாவிலும் உலக நாடுகளிலும் இந்நிறுவனத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் 600 ஊழியர்களின் பணிநீக்கம் இந்நிறுவன பணியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
விப்ரோ
வழக்கமாக நிர்வாகம் செய்யும் வேலைச் சார்ந்த செயல்திறன் மதிப்பீட்டையே விப்ரோ நடத்தியுள்ளது. ஆனால் வர்த்தகக் காரணிகள், மூலபாய முக்கியத்துவம், வாடிக்கையாளர் தேவை எனப் பல முக்கியக் காரணங்கள் மூலம் இந்த முறை செயல்திறன் மதிப்பீட்டை மிக முக்கியக் கருவியாக நிர்வாகம் எடுத்துள்ளது என விப்ரோ தெரிவித்துள்ளது.
தொடரும்..
மேலும் இத்தகைய நடவடிக்கை அடுத்த வருடமும் தொடரும் என்பதற்கான சமிக்கையும் விப்ரோ அளித்துள்ளது இதில் குறிப்பிடத்தக்கது.
விசா பிரச்சனை
விப்ரோ நிறுவனத்தின் இத்தகைய முடிவிற்கு மிகமுக்கிய காரணம் அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ள விசா கட்டுப்பாடுகள் தான்.
மேலும் தற்போதைய நிலையில் இதனை எதிர்கொள்ளத் தற்காலிக விசா மூலம் ஊழியர்கள் வெளிநாட்டிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது ஐடி நிறுவனங்கள்.
செலவுகள் அதிகரிப்பு
வெளிநாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து சிறப்பான சேவை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள், விசா கட்டுப்பாடுகளின் காரணமாகப் பல புதிய யுத்திகளைக் கையாள வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
இதனால் நிறுவனத்திற்குச் செலவுகள் அதிகரிக்கும். இதனைக் கட்டுப்படுத்தவே பல செலவின குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியே ஊழியர்களின் பணிநீக்கம்.
காலாண்டு முடிவுகள்
வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி விப்ரோ நிறுவனம் தனது 2016-17 நிதியாண்டுக்கான 4வது காலாண்டு முடிவுகளையும், முழு ஆண்டுக்கான முடிவுகளையும் வெளியிட உள்ளது.
அதிக வருவாய்
பொதுவாக இந்திய ஐடி நிறுவனங்கள் 60 சதவீத வருவாயை அமெரிக்கச் சந்தையிலும், 20 சதவீகம் ஐரோப்பிய சந்தையிலும் பெறும் காரணத்தால் விசா பிரச்சனைக்காக இதனைத் தவிர்க்க முடியாத நிலையில் நிறுவனங்கள்.
முக்கியப் பிரச்சனை
தற்போது ஐடி நிறுவனங்கள் விசா பிரச்சனை மட்டும் அல்லாமல் ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி வரும் காரணத்தால் ஊழியர்களின் தேவை அதிகளவில் குறைந்துள்ளது.
பிற நிறுவனங்கள்
விப்ரோ 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள நிலையில் இந்திய சந்தையில் இருக்கும் பிற ஐடி நிறுவனங்கள் என்ன செய்யும்.?
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications