உபர் இந்தியாவின் அடுத்த அதிரடி.. ஒரே நேரத்தில் பல கார்களைப் புக் செய்யலாம்....?
உபர், ஓலா நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் செயலிகள் மூலமாக டாக்ஸி சேவைகளை அளித்து வருகின்றன. இப்போது செயலிகள் கார் புக் செய்யும் ஒன் டு ஒன் அதாவது ஒரே கார் மட்டுமே புக் செய்யும் முறை தான் இருந்து வருகின்றது.
இதனை மாற்றி அமைக்க முடிவு செய்த உபர் டாக்ஸி நிறுவனம் உபர் சென்ட்ரல் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் மூலம் வணிக நிறுவங்கள் ஒரே நேரத்தில் பல கார்களைப் புக் செய்யலாம்.
உபர் சென்ட்ரல் என்றால் என்ன?
உபர் சென்ட்ரல் சேவை மூலமாக வணிக நிறுவனங்கள் ஒரே நேரத்தில் பல கார்களைப் புக் செய்யலாம், வாடிக்கையாளர்கள் மற்றும் கிளைண்ட் கட்டணங்களையும் புக் செய்பவர்களே செலுத்தும் சேவை ஆகும்.
இந்தச் சேவையின் மூலமாகப் புக் செய்பவர்கள் ஒரே நேரத்தில் பல கார்களை வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வாடிக்கையாளர்களை ஏற்றிச் சென்று வெவ்வேறு இடங்களில் டிராப் செய்யும் ஆகும். தன் மூலம் ஒரே காரினை மீண்டும் மீண்டும் புக் செய்து பயன்படுத்தும் முறை இருக்காது.
இது எப்படி வேலை செய்கின்றது?
இந்தச் சேவை உபர் வணிகங்கள் தேர்வின் மூலம் அளிக்கப்படுகின்றது. இதனை டேப்ளட், உலாவிகள் என அனைத்திலும் பயன்படுத்த முடியும்.
உடர் செண்ட்ரல் நிறுவனங்கள் மற்றும் குழுக்களைக் கார்ப்ரேட் உபர் கணக்கை துவங்க அனுமதிக்கும்.
பல கார்களைப் புக் செய்யும் போது ஒவ்வொரு பயணங்களின் கட்டணத்தையும் தனித்தனியாக உபர் டெஸ்பேட்சர் கணக்கு பட்டியலிட்டு உங்களுக்குக் காண்பிக்கும்.
ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை?
நிறுவனங்கள் கார் புக் செய்து அனுப்பும் போது பயணம் செய்ய இருப்பவர்களிடம் ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பயண நேரம், ஓட்டுநர் பெயர், வாகன எண், மாடல், ஓட்டுநர் மொபைல் எண் உள்ளிட்டவற்றைப் பயணிகளின் மொபைல் எண்ணிற்குக் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
வியக்க வைக்கும் சேவை
உலகளவில் கோல்ட்மேன் சாச்ஸ், டெல், வென்ண்டன், பைன் & கம்பெனி, ஏர்டெல், ஏ.டி.கிரெர்னி, ரிலையன்ஸ் ஏடிஏ குரூப் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட 65,000 நிறுவங்கள் உபர் ஃபார் பிஸ்னஸ் சேவையைப் பயன்படுத்தி வருவதாகவும் உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications