அட நமக்குத் தெரியாம போச்சே.. பிர்லாவின் புதிய பிஸ்னஸ் ஐடியாவை பார்த்து புலம்பும் ரிலையன்ஸ்..!!

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிகள் நுழையாத முன்னரே பல வருடங்களாக இடம்பெற்று வந்த பிர்லா குடும்பத்தின் தற்போது புதிய வர்த்தகத் துறையில் இறங்க முடிவு செய்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் பிர்லா குழுமத்தின் தலைவரான குமார மங்களம் பிர்லா கார்பன் பைபர் உற்பத்தியில் இறங்கத் திட்டமிட்டுள்ளார்.

ஆதித்யா பிர்லா குழுமம்

ஆதித்யா பிர்லா குழுமம்

சுரங்க முதல் டெலிகாம் வரையில் பல துறையில் வர்த்தகம் செய்து வரும் பிர்லா குழுமம் எதிர்காலச் சந்தையில் மிகப்பெரிய அளவில் புரட்சி செய்யக் காத்திருக்கும் கார்பன் பைபர் தயாரிப்பில் இறங்க உள்ளது.

2022ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 4.7 பில்லியன் டாலர் வர்த்தகச் சந்தையைக் கொண்டிருக்கும் இத்துறையில் இந்தியாவில் பிற முன்னணி நிறுவனங்கள் விடப் பிர்லா குழுமம் முந்தியுள்ளது.

 

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல் துறை உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் இந்தியா, பைக் மற்றும் கார் உற்பத்தியில் அதன் எடையை மிகப்பெரிய அளவில் குறைக்க இந்தக் கார்பன் பைபர் பயன்படுத்தி வருகிறது. மேலும் இது ஸ்டீல் அளவிற்கு மிகவும் கடுமையான ஒன்றாக இருப்பதால் இதற்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

வெளிநாட்டுச் சந்தை

வெளிநாட்டுச் சந்தை

இந்நிலையில் ஆதித்யா பிர்லா குழுமம் தனது வெளிநாட்டு வர்த்தகப் பிரிவில் கார்பன் பைபர் உற்பத்தி செய்யும் டெக்னாலஜியை வாங்க உள்ளதாகப் பிர்லா குழுமம் முடிவு செய்துள்ளதாக இத்திட்டம் குறித்த அறிந்த ஒரு பிர்லா குழும அதிகாரி தெரிவித்தார்.

மாற்று வழி

மாற்று வழி

கார்பன் பைபர் தயாரிக்கும் டெக்னாலஜி வெளிநாட்டில் இருக்கும் பிர்லாவின் தொழிற்சாலையில் அமைக்க முடியாவிட்டால், இதனைத் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் தொழிற்சாலையை வாங்கவும் பிர்லா குழுமம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியத் துறை

முக்கியத் துறை

2015ஆம் ஆண்டில் கார்பன் பைபர் வர்த்தகச் சந்தை வெறும் 2.2 பில்லியன் டாலராக இருந்த நிலையில் தற்போது இதன் பயன்பாடுகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள காரணத்தால் 2022ஆம் ஆண்டுக்குள் இதன் சந்தை இரண்டு மடங்கு அதாவது 4.7 பில்லியன் டாலர் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

வொன்டர் மெட்டிரீயல்

வொன்டர் மெட்டிரீயல்

தற்போதைய நிலையில் கார்பன் பைபர் ஆட்டோமொபைல் துறையில் மட்டும் அல்லாமல் பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்திகளிலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

காரணம் இது மிகவும் வலுவான, அதிக-இழுவிசை, வெப்ப-எதிர்ப்பு சக்தி கொண்டு பொருள். மேலும் இது ஸ்டீல் தரத்திற்கு இணையான ஒன்று என்பதால் இதனை வொன்டர் மெட்டிரீயல் என்று அழைக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிர்லா குழுமம் வெளியிடவில்லை என்பதால் எப்போது இத்துறை தயாரிப்பில் இறங்கும் எனத் தெரியவில்லை.

புலம்பல்..

புலம்பல்..

இத்துறை தயாரிப்பில் மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் இருப்பது தெரிந்தும் உற்பத்தித் துறையின் முன்னணியாக இருக்கும் டாடா, ரிலையன்ஸ், அதானி குழுமம் இதில் இறங்குவதற்கு முன்னதாகவே ஆதித்யா பிர்லா களத்தில் இறங்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+