ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி, ஆஸ்டன் மார்டின், ரேஞ்ச் ரோவர் மற்றும் ஃபெராரி ஆகிய ஆடம்பர கார்களின் விலை இந்தியாவில் சுமார் 20 லட்சம் ரூபாயில் துவங்கி சுமார் 1 கோடி ரூபாய் வரை குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்த கார்களை வாங்கத் திட்டமிடுவோர் கூடத் தற்போது ஆடம்பர கார்களை வாங்க முடிவு செய்துள்ளனர்.
இந்தத் திடீர் விலை சரிவு காரணம், பிஎஸ்III உத்தரவால் தான் என்று நீங்கள் நினைத்தால் நிச்சயமாக இல்லை. பிரிட்டன் நாடு ஐரோப்பிய கூட்டணி நாடுகளில் வெளியேறிய காரணத்திற்காகத் தான் இத்தகைய விலை சரிவு ஏற்பட்டுள்ளது.
இதற்கும் இந்தியாவில் விலை குறைவதற்கும் என்ன தொடர்பு..? என்று நீங்கள் கேட்பது புரிகிறது..
பதில்..
பல தசாப்தங்களாக ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இணைந்திருந்த பிரிட்டன் வேலைவாய்ப்பு, தன் நாட்டின் மக்களின் வாழ்வாதாரம் எனச் சுயநலமாக ஐரோப்பிய கூட்டணி நாடுகளுடன் தனது இணைப்பை முறித்துக்கொண்டது.
இந்தப் பிரிவின் இரு நாடுகளின் பொருளாதாரத்திலும் வர்த்தகத்திலும் மிகப்பெரிய அளவில் மாற்றமடைந்து வருகிறது. இதில் முக்கியமான ஒன்று நாணய மதிப்பு.
நாணய மதிப்பு
இந்தப் பிரிவினால் பிரிட்டன் நாட்டின் நாணயமான பிரிட்டன் பவுண்ட் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. இதன் மூலம் பிரிட்டன் நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி, ஆஸ்டன் மார்டின், ரேஞ்ச் ரோவர் மற்றும் ஃபெராரி ஆகிய ஆடம்பர கார்களின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.
இந்திய ரூபாய்
இந்நிலையில் இந்திய ரூபாய்க்கு எதிரான பிரிட்டன் பவுண்ட் மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் சுமார் 20 சதவீதம் வரை சரிந்துள்ளது.
இதன் மூலம் பிரிட்டன் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் கார்களின் விலை 20 லட்சம் ரூபாயில் துவங்கி சுமார் 1 கோடி ரூபாய் வரை குறைந்துள்ளது.
விற்பனை
இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி ஆடம்பர கார் நிறுவனங்கள் அதிகளவிலான வாடிக்கையாளர்கை ஈர்க்க திட்டமிட்டு ஃபெராரி உட்படப் பல நிறுவனங்கள் தனது தயாரிப்புகளின் இயல்பான விலையை விடவும் சுமார் 5-15 சதவீதம் வரை விலையைக் குறைத்துள்ளது.
2 கோடி ரூபாய்
2016ஆம் ஆண்டில் மட்டும் 2 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய கார்களின் விற்பனை மட்டும் இந்தியாவில் சுமார் 200ஆக உயர்ந்துள்ளது. இதில் பாதிக்கு மேல் பிரிட்டன் நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் கார்ஸ்
இதேகாலக்கட்டத்தில் இத்தாலி, ஜெர்மன் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு விற்கப்படும் சூப்பர் கார்களின் விலை அதிகளவில் குறைந்துள்ளது. காரணம் இந்த நாடுகள் அதன் பில்லை டாலர் அல்லது யூரோ நாணயத்தில் பதிவு செய்யும்.
ரூபாய் நாணயத்திற்கு எதிராக யூரோ மதிப்புக் குறைந்தாலும் பவுண்ட் அளவிற்குக் குறைவில்லை.
ரேஞ்ச் ரோவர் ஸ்போர்
இந்த ஆடம்பர காரின் பழைய விலை 1.35 கோடி ரூபாய்
புதிய விலை 1.04 கோடி ரூபாய்
ரேஞ்ச் ரோவர் வோக்
பழைய விலை 1.97 கோடி ரூபாய்
புதிய விலை 1.56 கோடி ரூபாய்
ஃபெராரி 488
பழைய விலை 3.9 கோடி ரூபாய்
புதிய விலை 3.6 கோடி ரூபாய்
ரோல்ஸ் ராய்ஸ் ஃபான்தம்
பழைய விலை 9 கோடி ரூபாய்
புதிய விலை 7.8-8.0 கோடி ரூபாய்
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்
பழைய விலை 5.25 கோடி ரூபாய்
புதிய விலை 4.75 கோடி ரூபாய்
அஸ்டன் மார்டின் டிபி11
பழைய விலை 4.27 கோடி ரூபாய்
புதிய விலை 4.06 கோடி ரூபாய்
பவுண்ட மதிப்பு
கடந்த 18 மாதத்தில் இந்திய ரூபாய்க்கு எதிரான பிரிட்டன் பவுண்ட் மதிப்பு 108 ரூபாயில் இருந்து சுமார் 81 ரூபாய் வரை குறைந்துள்ளது.
ஏற்றுமதி
இதே காலக்கட்டத்தில் பிரிட்டன் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடம்பர கார்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் ஆடம்பர கார் சந்தை பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்துள்ளது என்று கூறினால் மிகையாகாது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications