இராணுவத்திற்கு செலவு செய்வதில் உலகின் டாப் 5 நாடுகளில் இடம் பிடித்தது இந்தியா..!
2015-ம் ஆண்டு உலக நாடுகள் இராணுவத்திற்குச் செலவு செய்ததை விட அதிகமாக அதாவது 0.4 சதவீதம் உயர்ந்து 2016-ம் ஆண்டு 1686 பில்லியன் டாலர் வரை செலவு செய்துள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இராணுவத்திற்கு அதிகம் செலவு செய்துள்ளதாகவும், அதே நேரம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் இராணுவத்திற்குச் செலவு செய்வதைக் குறைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக நாடுகள் இராணுவத்திற்குச் செலவு செய்வது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வந்துள்ளது. எனவே நாம் இங்கு இராணுவத்திற்குச் செலவு செய்வதில் உலகின் டாப் 5 நாடுகள் என்னென்ன மற்றும் பிற நாடுகளின் நிலை என்ன புதிதாக நடந்த மாற்றங்கள் என்னென்ன என்று இங்குப் பார்ப்போம்.
1. அமெரிக்கா
எப்போதும் போல அமெரிக்கா தான் 2016-ம் ஆண்டும் அதிகளவில் அதாவது 2015-ம் ஆண்டுச் செலவு செய்வதை விட 1.7 சதவீதம் அதிகரித்து 611 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது.
2. சீனா
2015-ம் ஆண்டை விட 2016-ம் ஆண்டு 5.4 சதவீதம் அதாவது 2015 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது.
3. ரஷ்யா
ரஷ்யா 2016-ம் ஆண்டு 5.9 சதவீதம் அதிகரித்து 69.2 பில்லியன் டாலர் செலவு செய்ததன் மூலம் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
4. சவுதி அரேபியா
2015-ம் ஆண்டுச் சவுதி அரேபியா இராணுவம் மூன்றாம் இடத்தைப் பிடித்து இருந்தது. இதுவே 2016-ம் ஆண்டு 30 சதவீதம் குறைந்து 63.7 பில்லியன் டாலராகக் குறைந்தது.
5. இந்தியா
இந்தியா ராணுவத்திற்குச் செலவு செய்வது 8.5 சதவீதம் அதாவது 55.9 பில்லியன் டாலராக 2016-ம் ஆண்டு அதிகரித்துள்ளது. இதனால் இந்தியா ராணுவத்திற்குச் செலவு செய்வதில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் இராணுவத்திற்குச் செலவு செய்ததில் டாப் 15-ல் கூட இடம்பெறவில்லை. 2016-ம் ஆண்டு 9.93 பில்லியன் டாலர் மட்டும் தான் பாகிஸ்தான் செலவு செய்துள்ளது என்று அந்த அறிக்கை கூறுகின்றது.
இராணுவத்திற்குச் செலவு செய்ததைப் பெறும் அளவில் குறைத்த நாடுகள்
வெனிசுலா (-56 சதவீதம்), தென் சூடான் (-54 சதவீதம்), அஜர்பைஜான் (-36 சதவீதம்), ஈராக் (-36 சதவீதம்), சவுதி அரேபியா (-30 சதவீதம்) போன்ற நாடுகள் இராணுவத்திற்குச் செலவு செய்ததைப் பெறும் அளவில் குறைத்துள்ளன. அதுமட்டும் இல்லாமல் அங்கோலா, ஈக்வடார், கஜகஸ்தான், மெக்ஸிகோ, ஓமன் மற்றும் பெரு ஆகிய நாடுகளும் இதில் அடக்கம்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications