150 ஆண்டு வழக்கத்தை கைவிட 'மோடி' புதிய திட்டம்.. என்ன நடக்கப் போகிறது..?

Written By:
Subscribe to GoodReturns Tamil

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 150 ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் நிதியாண்டு காலத்தை மாற்றியமைக்கப் புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

இதனால் சாமானிய மக்கள் முதல் கார்பரேட் நிறுவனங்களின் பட்ஜெட், வருமான வரி என அனைத்தும் மாறப்போகிறது.

150 ஆண்டு வழக்கம்

இந்தியா பிரிட்டிஷ் அரசு ஆட்சியில் இருக்கும்போது நிதியாண்டாக ஏப்ரல்-மார்ச் மாத காலகட்டத்தை 1867ஆம் ஆண்டு அமலாக்கம் செய்தது.

150 ஆண்டுகளாக இந்தியாவில் அனைத்து தரப்பினரும் இதனைப் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது நிதியாண்டு காலத்தை வல்லரசு நாடுகளில் புழக்கத்தில் இருப்பது போலவே ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலமாக மாற்றியமைக்கும் திட்டம் ஆலோசனை செய்யப்படுகிறது.

 

ரயில்வே பட்ஜெட்

ஏற்கனவே மோடி தலைமையிலான மத்திய அரசு பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ரயில்வே பட்ஜெட் அறிக்கையை மத்திய பட்ஜெட் உடன் இணைத்து.

மத்திய பட்ஜெட்

ரயில்வே பட்ஜெட் அறிக்கையின் தாக்கலை முழுமையாக நீக்கப்பட்ட நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளை கூட மத்திய அரசு பிப்ரவரி 29ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 1ஆம் தேதியாக மாற்றியது.

நிதியாண்டு மாற்றம்

தற்போது நிதியாண்டின் காலத்தை மாற்றுவதற்காகப் பிரதமர் மோடி புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது மட்டும் அல்லாமல் இத்திட்டத்தை முக்கியமானதாகக் கருத்தில் கொண்டு வருவாய் துறை முதல் அனைத்துத் துறைகளும் இதுகுறித்து ஆலோசனை செய்து வருகிறது.

சரி இந்த மாற்றத்தால் என்ன நடக்கும்..

 

விவசாயிகள்

இந்தியாவின் 15 சதவீத ஜிடிபி மற்றும் 58 சதவீத குடும்பங்கள் விவசாயத் துறையும் அதன் உற்பத்தியையும் நம்பி இருக்கிறது. இந்நிலையில் ஜூன் முதல் செப்டம்பர் காலத்தில் வறட்சி ஏற்பட்டால் இந்த நிதியாண்டு மாற்றம் அவர்களுக்கு அளிக்கப்படும் மானியம் என அனைத்திலும் அதிகளவிலான பல இவர்களுக்குக் கிடைக்கும்.

156 நாடுகள்

இந்த நிதியாண்டின் மாற்றத்தின் மூலம் 156 நாடுகள் பயன்பாட்டில் இருக்கும் இந்த முறையில் இந்தியாவும் இணைய உள்ளது.

இதன் மூலம் உலக வங்கி, ஐஎம்எப் ஆகியவை கணக்கீட்டில் இந்தியாவின் தரவுகளும் எவ்விதமான தடையும், தாமதமுமின்றிப் பயன்படுத்த முடியும்.

 

தகவல் சேகரிப்பு

தற்போது இருக்கும் நிதியாண்டு காலம் ஊழியர்களைச் சிறப்பான முறையில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதுமட்டும் அல்லாமல் இது மக்களின் கலாச்சாரம், பழக்கவழக்கத்திற்கு ஒவ்வாத ஒன்றாக இருக்கிறது. இதன் மூலம் நாட்டில் தகவல் சேகரிப்பு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.

நிதியாண்டு மாற்றத்தின் மூலம் இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

 

பருவ நிலை மாற்றம்

ஜனவரி டிசம்பர் காலத்தை மாற்றுவதன் மூலம் பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எளிதாகக் களைய முடியும் எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஜிஎஸ்டி

மேலும் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்படும் இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசின் இந்த நிதியாண்டு மாற்றும் ஜிஎஸ்டி-ஐ மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.

எதிர்ப்பு

இத்திடத்திற்கு மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிதியாண்டு மாற்றத்தில் நிறுவனங்கள் அளவில் பல சிக்கல்கள், பல வரிக் கணக்குகள் மாற்றப்பட வேண்டும் எனவே இதனை உடனடியாக ஏற்கமுடியாது.

ஏற்கனவே ஜிஎஸ்டியால் நிறுவனங்களும் வர்த்தகச் சந்தையும் குழப்பத்தில் மூழ்கியுள்ள நிலையில் இது வர்த்தகச் சந்தைக்கு மிகவும் கடினமான முடிவாக இருக்கும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Why Modi is willing to dump a 150-year-old practice to drive India

Why Modi is willing to dump a 150-year-old practice to drive India
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns