ஏர் ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. 1,099 ரூபாயில் விமான பயணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏர் ஏசியா இந்தியா தொடர்ந்து சலுகை விலையில் விமான டிக்கெட்களை அறிவித்து வருகின்றது. சென்ற வாரம் 1,349 ரூபாய்க்கு விமான டிக்கெட் விலையை அறிவித்த ஏர் ஏசியா இந்த வாரம் மேலும் குறைத்து 1,099 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.

 

ஏர் ஏசியாவின் இந்தப் புதிய சலுகை விலையில் பெங்களூரு, சண்டிகர், கோவா, ஹைதராபாத், புனே மற்றும் வைசாக் ஆகிய வழித்தடங்களில் பயணம் மேற்கொள்ள முடியும்.

ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ், போன்ற போட்டி நிறுவனங்களை விட விலை குறைவான ஸ்பைஸ் ஜெட் விமான டிக்கெட்களை இணையதளம் மூலம் புக் செய்யலாம்.

‘கூல் ஃபேர்’ ஆஃபர்

‘கூல் ஃபேர்’ ஆஃபர்

ஏர் ஏசியாவின் ‘கூல் ஃபேர்' ஆஃபரில் டிக்கெட்களை ஏப்ரல் 30-ம் தேதி வரை புக் செய்யலாம் என்றும் 2017-செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முதல் 2018 பிப்ரவரி 8-ம் தேதி வரை பயணம் செய்யலாம் என்றும் ஏர் ஏசியா இந்தியா தெரிவித்துள்ளது.

1,099 ரூபாய் விலை சலுகை உள்ள வழித்தடங்கள்

1,099 ரூபாய் விலை சலுகை உள்ள வழித்தடங்கள்

ஏர் ஏசியாவின் 1,099 ரூபாய் விலை சலுகை விலை விமான டிக்கெட்டில் பெங்களூரு-கொவா, பெங்களூரு-ஹைதராபாத் வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.

பிற வழித்தடங்களில் ஆஃபர்
 

பிற வழித்தடங்களில் ஆஃபர்

கொச்சி-பெங்களூரு வழித்தடத்தில் 1,299 ரூபாயிலும், பெங்களூரு-புனே வழித்தடத்தில் 1,499 ரூபாயிலும், ஸ்ரீநகர்-டெல்லி வழித்தடத்தில் 1,699 ரூபாயிலும், புனே ஜெய்ப்பூர் வழித்தடத்தில் 1,599 ரூபாயிலும், பெங்களூரு-கவுகாத்தி வழித்தடத்தில் 2,899 ரூபாயிலும் பயணம் செய்யலாம் என்று ஏசி ஏசியா இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைவான டிக்கெட் உள்ள வழித்தடம்

குறைவான டிக்கெட் உள்ள வழித்தடம்

ஏர் ஏசியாவின் இணையதளத்தைப் பார்த்த போது பெங்களூரு-ஹைதராபாத் வழித்தடத்தில் பயணம் செய்யக் குறைந்த அளவே டிக்கெட்கள் உள்ளதாகவும், 1,100 ரூபாய் பயணக் கட்டணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வழித்தடங்கள்

புதிய வழித்தடங்கள்

ஏர் ஏசியா நிறுவனம் அன்மையில் தான் ராஞ்சி, கொல்கத்தா, டெல்லி வழித்தடங்களில் தினமும் இரண்டு முறை தொடர் சேவை அளிக்கும் விமானச் சேவையை 1,799 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

விமான டிராப்பிக்

விமான டிராப்பிக்

ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து ஆஃபர்கள் அளிப்பதினால் இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை இரண்டு அடுக்கு இலக்க அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் சீனாவை விட விமான டிரப்பிக் இந்தியாவில் அதிகரித்துள்ளதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் ஏற்கனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

AirAsia Offers All Inclusive Tickets From Rs. 1,099 On Advance Booking

AirAsia Offers All Inclusive Tickets From Rs. 1,099 On Advance Booking
Story first published: Tuesday, April 25, 2017, 12:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X