விப்ரோ 4வது காலாண்டு அறிக்கை 20 சதவீத வருவாய் உயர்வு.. 1:1 போனஸ்..ஊழியர்களின் நிலை என்ன..?
இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய ஐடி நிறுவனமான விப்ரோவின் 4வது காலாண்டு அறிக்கை இன்று வெளியானது. அதில் வருவாய் 20 சதவீதம் உயர்ந்து 2,303.5 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
2015-2016 நிதி ஆண்டில் விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருவாய் 1,918.50 கோடியாக இருந்தது.
மீண்டும் தலைவர் பதவிக்கு அசிம் பிரேம்ஜி
விப்ரோ நிறுவனத்தின் குழு பங்குகளுக்கு 1:1 அடிப்படையிலான போனஸ் அளிக்கவும் மீண்டும் அசிம் பிரேம்ஜி அவர்களைத் தலைவராக நியமிக்கவும் பரிந்துரைத்துள்ளது.
காலாண்டுகளின் ஒருங்கிணைக்கப்பட்ட உயர்வு
2016-2017 நிதி ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு காலாண்டும் 7.19 சதவீதம் வரை ஒருங்கிணைக்கப்பட்ட லாபம் அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது என்றும் 2017 மார்ச் 31-ம் தேதி முடியும் 4 வது காலாண்டில் 2,267 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்துள்ளது என்றும் அறிவித்துள்ளது.
3வது மற்றும் 4வது காலாண்டு ஒப்பீடு
3 வது காலாண்டில் அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் விப்ரோ நிறுவனம் 2,114.80 கோடி நிகர லாபம் அடைந்துள்ளதாக அறிவித்தது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4 வது காலாண்டில் 15,033.80 கோடி மொத்த வருவாய் கிடைத்துள்ளதாகவும், சென்ற நிதி ஆண்டில் 14,336.40 கோடியாக இருந்த மொத்த வருவாய் 4.87 சதவீதம் அதிகரித்துள்ளது.
பங்குகளின் விலை உயர்வு
விப்ரோ நிறுவனத்தின் பங்கு ஒன்றுக்கு ஒருங்கிணைந்த வருவாய் (EPS) 9.33 ரூபாயாக வரை அதிகரித்துள்ளது என்றும் இது சென்ற காலாண்டில் 8.70 ரூபாயாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய பங்குச் சந்தை நிலவரம்
பங்குகளின் விலை சந்தை நேர முடிவின் போது காலாண்டு அறிக்கை வாசிக்கச் சில மணி நேரங்களுக்கு முன்பு 0.93 சதவீதம் அதிகரித்து ஒரு பங்கு விலை 496.35 ரூபாய் வர்த்தகம் ஆனது.
ஊழியர்கள் பணி நீக்கம்
இந்தியாவின் 3வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான விப்ரோ 2016-17ஆம் ஆண்டுக்கான செயல்திறன் மதிப்பீட்டின் வாயிலாகச் சுமார் 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. விப்ரோவின் இந்த அறிவிப்பு இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் எச்-1பி விசா விதிகள் மாற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிரச்சனைகளைக் குறைக்கும் விதமாக விப்ரோ நிறுவனம் 2016-17 நிதியாண்டுக்கான ஊழியர்களின் வருடாந்திர "performance appraisal" மூலம் சுமார் 600 பேரைப் பணிநீக்கம் செய்துள்ளது. இது குறித்து மேலும் அறிய இங்குக் கிளிக் செய்க.
காலாண்டு அறிக்கையில் லாபம் சம்பாதித்தும் நிறுவனம் ஊழியர்களை நீக்கும் என்று அறிவித்திருப்பது ஊழியர்களை வெகுவாகப் பாதித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications