ஜியோ நிறுவனத்தில் ரூ.18,000 கோடி முதலீடு செய்ய அம்பானி திட்டம்.. விரக்தியின் உச்சத்தில் ஏர்டெல்..!

ஜியோ நிறுவனத்தில் ரூ.18,000 கோடி முதலீடு செய்ய அம்பானி திட்டம். விரக்தியின் உச்சத்தில் ஏர்டெல்..!

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் மிகவும் குறைந்த காலத்தில் மிகப்பெரிய முதலீட்டுடன் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்ற டெலிகாம் நிறுவனம் என்றால் இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோ தான். இதை யாராலும் மறுக்க முடியாது.

ஏற்கனவே ஜியோ நிறுவனத்தில் 1.75 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்த ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தற்போது கூடுதலாக 18,000 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளார்.

அதுமட்டும் அல்லாமல் தற்போது ஜியோ அறிவித்துள்ள தன் தானா தன் ஆஃபர் அடுத்த 18 மாதங்கள் வரை தொடரும் எனத் தகவல் வெளியாகியுள்ளதால் இந்நிறுவனத்தின் மிகப்பெரிய போட்டி நிறுவனமான ஏர்டெல் விரக்தியின் உச்சத்தில் உள்ளது.

30 பில்லியன் டாலர்

30 பில்லியன் டாலர்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் தனது ஆஸ்தான பெட்ரோல் சுத்திகரிப்பு, இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த வர்த்தகத்தில் இருந்து முழுமையாக மாறுபட்ட துறையில் தனது வர்த்தகத்தைத் துவங்கியுள்ளார்.

டெலிகாம் மற்றும் மொபைல்

டெலிகாம் மற்றும் மொபைல்

3 வருடங்களுக்கு முன் இந்தியாவில் குறைந்த விலையில் மொபைல் போன், விலை குறைவான டேட்டா சேவைகள், இலவச வாய்ஸ் கால் சேவையை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

இதற்கு ரிலையன்ஸ் செலவிட்ட தொகை 1.75 லட்சம் கோடி ரூபாய்

 

கூடுதல் முதலீடு

கூடுதல் முதலீடு

இந்நிலையில் ஜியோ சேவை அறிமுகம் செய்யப்பட்ட மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தனது சேவை மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள ஜியோ நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி இந்நிறுவனத்தின் கூடுதலாக 2.8 பில்லியன் டாலர்.

இன்றைய ரூபாய் மதிப்பில் 17,920 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளார். இதன் மூலம் ஜியோ நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீடு அளவு 2 லட்சம் கோடி ரூபாயாக உயர உள்ளது (30 பில்லியன் டாலர்).

 

வாடிக்கையாளர் எண்ணிக்கை

வாடிக்கையாளர் எண்ணிக்கை

மேலும் மார்ச் மாத முடிவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 108.9 மில்லியன் டாலராக உயர்ந்துள்ள நிலையில் தனது அதிவேக 4ஜி சேவையை மேலும் விரிவாக்கம் செய்ய இந்த 18,000 கோடி ரூபாய் முதலீட்டைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

18 மாதங்கள் தொடரும்..

18 மாதங்கள் தொடரும்..

ஜியோ நிறுவனத்தில் புதிய முதலீடுகளை அறிவித்துள்ள ரிலையன்ஸ் குழுமம் தனது தன் தானா தன் ஆஃபர் அடுத்த 12-18 மாதங்கள் வரையில் தொடரும் என டெலிகாம் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காகவே இப்புதிய முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் சந்தையில் கருத்து நிலவுகிறது.

 

ஜியோ

ஜியோ

ஜியோ நிறுவனத்தால் இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய நிறுவனங்களின் அனைத்துச் சேவைகள் அடங்கிய திட்டம் 300 ரூபாயில் இந்திய டெலிகாம் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.

இதன் மூலம் டெலிகாம் நிறுவனங்களுக்குச் சராசரி வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் வருமானத்தின் அளவு அதிகளவில் குறைந்துள்ளது என மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 செப்டம்பர் 5

செப்டம்பர் 5

முகேஷ் அம்பானி தனது ஜியோ மூலம் மக்களுக்குச் சேவையைச் செப்டம்பர் 5ஆம் தேதி அளிக்கத் துவங்கிய நிலையில் இது வரை மொத்த சந்தையில் 6 சதவீத வாடிக்கையாளர்களைப் பெறுள்ளது.

இந்த எண்ணிக்கையை 15 சதவீதம் வரை உயர்த்துவதே ஜியோ வின் அடுத்தத் திட்டம்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+