இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வெளியேற்றியது மட்டும் அல்லாமல் தற்போது அடுத்து அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விப்ரோவின் இந்த அறிவிப்பைக் கேட்டு அமெரிக்காவில் இருக்கும் இந்நிறுவன ஊழியர்கள் மிகப்பெரிய அச்சத்திலும் சோகத்திலும் உள்ளனர்.
முக்கிய நடவடிக்கை
அமெரிக்காவில் விசா பிரச்சனை முற்றிய நிலையில், அந்நாட்டில் இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து நிலையான வர்த்தகத்தைப் பெறவும், வாடிக்கையாளர்களை இழக்காமல் காத்துக்கொள்ளவும் இந்திய நிறுவனங்கள் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.
அமெரிக்கக் குடிமக்கள்
இந்த நடவடிக்கைகளில் முக்கியமான இந்திய ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், டிசிஸ் ஆகியவை அதிகளவிலான அமெரிக்க மக்களை நிறுவன பணிகளில் அமர்த்தத் திட்டமிட்டது.
இதே திட்டத்தை விப்ரோ மிகப்பெரிய அளவில் நடைமுறைப்படுத்த தயாராகி வருகிறது.
3 மாதம்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவடைவதற்குள், அதாவது ஜூன் மாதத்திற்குள் அமெரிக்காவில் இருக்கும் விப்ரோ அலுவலகத்தில் இருக்கும் அமெரிக்கக் குடிமக்களின் ஊழியர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என விப்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
டெலிவரி சென்டர்
மேலும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை அளிக்கவும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் அமெரிக்காவிலேயே புதிய டெலிவரி சென்டரை அமைக்க உள்ளது.
அபித் அலி நீமுச்வாலா
ஜூன் மாதத்திற்கு அமெரிக்காவில் விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் அந்நாட்டு மக்களாக இருப்பார்கள் என விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ அபித் அலி நீமுச்வாலா கூறினார்.
7.7 பில்லியன் டாலர்
2016-17ஆம் நிதியாண்டில் விப்ரோ நிறுவனத்தின் 7.7 பில்லியன் டாலர் வருவாயில் சுமார் 54 சதவீதம் அமெரிக்கச் சந்தையில் இருந்து கிடைத்துள்ளது.
2 டெலிவரி செனடர்கள்
இந்நிலையில் இச்சந்தையில் இருந்து தொடர்ந்து வர்த்தகத்தைப் பெற கலிபோர்னியா மற்றும் மிச்சிகன் மாகாணத்தில் 2 புதிய டெலிவரி செனடர்களை அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்திய ஊழியர்கள்
விப்ரோ நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் இந்நிறுவனத்தில் பணியாற்றும் பல இந்தியர்கள் தாயகம் திரும்பும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications