ஐடி நிறுவன சிஇஓக்களுக்கு போனஸ் 'கட்'.. ஊழியர்களின் நிலை என்ன..?

கடந்த நிதியாண்டில் பணமதிப்பிழப்பு மூலம் இந்தியாவில் பல தொழிற்துறைகள் பெரிய அளவிலான பாதிப்புகளைச் சந்தித்ததை நாம் மறந்திருக்க முடியாது. ஆனால் இதில் அதிகப் பாதிக்கப்படாத ஐடி துறை சர்வதேச சந்தையில் சந்தித்த பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக வர்த்தகத்திலும் வருவாயிலும் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டது.

இதன் எதிரொலியாக இந்திய ஐடி நிறுவனங்களின் சிஇஓக்களின் 2017ஆம் நிதியாண்டுக்கான போன்ஸ் தொகை அதிகளவில் குறைக்கப்பட்டுள்ளது.

எதற்காகப் போனஸ் குறைப்பு..?

எதற்காகப் போனஸ் குறைப்பு..?

ஒவ்வொரு வருடமும் ஒரு நிறுவனம் அதன் வர்த்தக இலக்கை அடைந்துவிட்டால் அதன் நிர்வாகத் தலைவருக்குப் போனஸ் அளிப்பது வழக்கம். இதுவே இலக்கை விட அதிகமான வருமானத்தையும் வர்த்தகத்தையும் அளித்து விட்டால் அதன் நிர்வாகத் தலைவருக்குக் கூடுதலாகப் போனஸ் அளிக்கப்படும்.

ஆனால் மார்ச் 31 உடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்திய ஐடி நிறுவனங்களில் பல நிர்ணயம் செய்த இலக்கை அடைவில்லை.

 

அதிரடி குறைப்பு

அதிரடி குறைப்பு

வர்த்தகம் வருவாய் இலக்கை அடையாத காரணத்தால் ஜென்பேக்ட், இன்போசிஸ், காக்னிசென்ட் ஆகிய நிறுவன தலைவர்களின் செயல்திறன் போனஸை அதிகளவில் குறைத்துள்ளது.

நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை நிர்வாகம் சிஇஓக்களின் போனஸ் குறைப்பில் ஈடு செய்கிறது.

 

ஜென்பேக்ட்

ஜென்பேக்ட்

ஐடி மற்றும் பிபிஓ சேவை அளிக்கும் நிறுவனமான ஜென்பேக்ட்-இன் சிஇஓ என்வி தியாகராஜன் அவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட 1.12 மில்லியன் டாலர் போனஸ் தொகையில் வெறும் 7,00,00 டாலர் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகை 1.33 மில்லியன் டாலர்.

1 மில்லியன் = 10 லட்சம்

 

காக்னிசென்ட்

காக்னிசென்ட்

அமெரிக்க மென்பொருள் சேவையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைவரான பிரான்சிஸ்கோ டிசோசா-விற்கு 2015ஆம் ஆண்டு 12 மில்லியன் டாலர் சம்பளம் அளிக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டில் வர்த்தக இலக்கை எட்ட முடியாத காரணத்தால் அவருக்கு அளிக்கப்படும் போனஸ் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான போனஸ் குறைக்கப்பட்டு வெறும் 8.26 மில்லியன் டாலராக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

 

இன்போசிஸ்

இன்போசிஸ்

மென்பொருள் ஏற்றுமதியில் முன்னணியாகத் திகழும் இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ -விற்கு அளிக்கப்பட்ட போனஸ் தொகையான 5 மில்லியனில் வெறும் 1 மில்லியன் டாலர் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள்

ஊழியர்கள்

2016ஆம் ஆண்டுக்கான சம்பள உயர்விற்காகக் காத்திருக்கும் ஐடி நிறுவன ஊழியர்களுக்கு இத்துறையின் முன்னணி நிறுவனங்களின் சிஇஓக்களின் போனஸ் குறைப்பு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பணிநீக்கம்

பணிநீக்கம்

விப்ரோ, காக்னிசென்ட் நிறுவனத்தில் பணிநீக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இத்துறை ஊழியர்கள் சம்பள உயர்வு அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அடுத்த ஒரு வருடத்திற்கு வேலையைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் எனக் கூறுகின்றனர்.

முக்கியமானவை

முக்கியமானவை

ஐடி ஊழியர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய சில முக்கிய செய்திகள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+