பெங்களுரூ: இந்தியாவின் மிகப்பெரிய பீர் தயாரிப்பு நிறுவனமான கிங்பிஷர் நிறுவனம் தனது அனைத்து தயாரிப்புகளை விடவும் மிகவும் சிறப்பான (Strong Brew) பீர்-ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்குக் கிங்பிஷர் ஸ்ட்ராம் என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கிங்பிஷர் நிறுவனத்தின் அனைத்து பீர் வகைகளும் சிறப்பான விற்பனையில் இருக்கும்போது எதற்காக இந்தப் புதிய அறிமுகம் என்று கேட்டால், அதற்குப் பதில் இதன் பெயரிலேயே உள்ளது.
பீர் விற்பனை
இந்திய சந்தையில் பொதுவாகப் பீர் விற்பனை அனைத்தும் நகரப்புறங்களில் அதிகளவிலும், சிறிய நகரம் மற்றும் டவுன் பகுதிகளில் கணிசமான விற்பனையைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 5 வருடத்தில் இந்தியாவிற்குள் நுழைந்த கார்ல்ஸ்பெர்க் நிறுவனம் சுமார் சதவீத வர்த்தகச் சந்தையைப் பிடித்துள்ளது.
கிங்பிஷர் ஸ்ட்ராம்
இந்நிலையில் கார்ல்ஸ்பெர்க் எலிபேன்ட், டூபார்க் ஸ்ட்ராங், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டூபார்க் கிளாசிக் ஆகியவற்றின் போட்டியை எதிர்கொள்ளவும், சந்தையில் அதன் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கிங்பிஷர் நிறுவனம் அதன் சிறப்பான தயாரிப்பான கிங்பிஷர் ஸ்ட்ராம்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
18 மாதங்கள்
இதன் தயாரிப்பை ஏற்கனவே கிங்பிஷர் நிறுவனம் துவங்கிய நிலையில் அடுத்த 18 மாதங்களில் படிப்படியாக இந்தியா முழுவதும் அதன் விற்பனைக்கு வாடிக்கையாளர் கிடைக்கும் வகையில் அறிமுகம் செய்ய உள்ளது.
8 வருடம்
கடந்த 8 வருடத்தில் இத்தகைய பெரிய அளவிலான அதிரடி திட்டத்தைக் கிங்பிஷர் நிறுவனம் அறிமுகம் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பெயரை போலவே சூராவளியை போன்று விற்பனையில் கிங்பிஷர் அசத்த திட்டமிட்டுள்ளது.
ஸ்மூத் டிரிங்க்ஸ்
சமீப காலமாக இந்தியாவில் 5% - 7% மத்தியில் ஆல்கஹால் கொண்ட பீர் வகைகள் மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் இந்தியாவில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்.
இந்த மாற்றத்தால் கிங்பிஷர் நிறுவனத்தின் விற்பனை அளவு 2017ஆம் நிதியாண்டில் சுமார் 2 சதவீதம் குறைந்துள்ளது.
80 சதவீதம் ஆதிக்கம்
இந்தியாவில் வருடத்திக்து சுமார் 30 கோடி கேஸ் பீர் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 80 சதவீதம் ஸ்ட்ராங் பீர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது குடிமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் பிரீமியம் பீர் விற்பனை சந்தை 5-7 சதவீதம் வரை உயரலாம் என ஆய்வுகள் கூறுகிறது.
கிங்பிஷர் ஆதிக்கம்..
இந்தியாவின் பீர் விற்பனை சந்தையில் கிங்பிஷர் பிராண்டின் தாய் நிறுவனமான யுபி நிறுவனம் சுமார் 52 சதவீத சந்தை வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
விஜய் மல்லையா
யுபி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட நிதியை பல்வேறு கிளை நிறுவனங்களுக்கு முறையற்ற வகையில் பயன்படுத்திய காரணத்திற்காக யுபி நிறுவனத்தின் முன்னாள் தலைவரான விஜய் மல்லையா நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தற்போது யுபி நிறுவனம் டியாஜியோ என்னும் மற்றொரு பன்னாட்டு மதுபான நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
முதல் இடம்


Click it and Unblock the Notifications