கடந்த 10 வருடங்களாக உலகளவில் பொருளாதார நாடுகள் மத்தியில் மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது, இதன் எதிரொலியாக ஒவ்வொரு வருடமும் இப்பட்டியில் பல மாற்றங்கள் ஏற்படும்.
இந்த வகையில் தற்போது இந்தியாவிற்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
2022
2022ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி உலகப் பொருளாதார நாடுகள் பட்டியலில் 4வது இடத்தைப் பிடிக்கும் எனச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
தென் ஆசிய நாடுகள்
இந்தியாவின் வளர்ச்சி மீது மிகப்பெரிய அளவிலான நம்பிக்கையை வைத்துள்ள ஐஎம்எப் நடப்பு நிதியாண்டுக்கான இந்திய வளர்ச்சி விகிதத்தையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 4வது இடத்தைப் பிடிக்க வேண்டும் என்றால் தென் ஆசிய நாடுகள் பிரச்சனைகள் மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் நீங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது ஐஎம்எப்.
இத்தகைய திடீர் வளர்ச்சிக்கு என்ன காரணம்..?
காரணம்
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து சக்திவாய்ந்த பொருளாதார நாடாக இருக்கும் பிரிட்டன் வெளியேறிய நிலையில் இரு தரப்பு மத்தியிலும் மிகப்பெரிய அளவில் வர்த்தகப் பாதிப்பு, நாணய மதிப்பில் சரிவு எனப் பல வகையில் பாதிப்படைந்துள்ளது.
இதன் மூலம் ஐரோப்பிய யூனியனில் பெரிய பொருளாதார நாடாக விளங்கும் ஜெர்மனி இதில் அதிகளவில் பாதிக்கப்படும்.
இந்த இரு நாடுகள் மத்தியிலும் இருக்கும் பாதிப்புகளே இந்தியா இப்பட்டியலில் 4 வது இடத்தைப் பிடிக்கும் அளவிற்குத் தற்போது வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
இந்தியா
மேலும் இந்தியாவில் புதிய வரி மாற்றங்கள், வங்கிகளில் குவிந்துகிடக்கும் வராக் கடன் களைய திட்டம், உற்பத்தி, வேலைவாய்ப்பு, முதலீடு ஆகியவற்றை அதிகரித்தல் எனப் பல விஷயங்களில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
அனைத்திற்கும் மேலாக இந்தியாவில் மிகப்பெரிய அளவில் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த மத்திய அரசு இயங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications