சென்ற வருடம் புதிதாகத் தொலைத்தொடர்பு சேவை வழங்க வந்த ஜியோ நிறுவனத்தினால் தான் இந்த முடிவுக்கு டிராய்த் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது, அது ஏன் என்று இங்குப் பார்ப்போம்.
மும்பை: தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையம் டிராய் வரும் மே மாதம் முதல் புதிதாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் துவங்க வருபவர்களுக்கு விதிகளைத் திருத்தி அமைப்பதற்கான தொழில்துறை அளவிலான ஆலோசனைp பணிகளைத் தொடங்குகின்றது.
சென்ற வருடம் புதிதாகத் தொலைத்தொடர்பு சேவை வழங்க வந்த ஜியோ நிறுவனத்தினால் தான் இந்த முடிவுக்கு டிராய்த் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது, அது ஏன் என்று இங்குப் பார்ப்போம்.
ஜியோ
2016-ம் ஆண்டுப் புதிதாகத் தங்களது சேவையைத் துவங்கிய ஜியோ நிறுவனம் சோதனைகளுக்காக வழங்கப்பட்ட சேவையை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளித்து வருகின்றது என்று குற்றம்சாட்டப்பட்டது.
செல்லூலார் ஆப்ரேட்டர்கள் கோரிக்கை
அதனால் இதுப்போன்று சோதனை சேவையை அளிக்கும் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று டிராய் விளக்க வேண்டும் என்று தற்போதைய செல்லூலார் ஆப்ரேட்டர்கள் கோரியிருந்தனர்.
என்ன திருத்தங்கள் எல்லாம் ஏற்பட வாய்ப்பு உள்ளது?
வர இருக்கும் இந்தப் புதிய விதிகள் திருத்தத்தின் போது சோதனை சேவை வழங்கும் காலத்தில் எத்தனை சந்தாதார்கள் சேர்க்க முடியும் என்பதில் எல்லாம் கட்டுப்பாடுகள் வரலாம். மேலும் எவ்வளவு காலம் சோதனைக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் பிற சேவைப் பிரச்சனைகள், இலவசங்கள் அளிக்கலாமா, கூடாதா என்பதில் திருத்தம் கொண்டு வரப்படலாம் என்று தெரிகின்றது.
எப்போது இதற்கான பணிகள் துவங்குகின்றது?
இத்திட்டத்திற்கான ஆலோசனை கோப்புகள் மே மாதம் முதல் வெளியிடப்படும் என்று இதைப் பற்றி நன்கு அறிந்த இரண்டு அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்தனர்.
செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு
இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் சென்ற ஆண்டு ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை அதிகளவில் பெறும் நோக்கத்தில் இலவசங்களை வாரி வழங்கிக் கொண்டு இருக்கும் போது சோதனை சேவையை முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று குற்றம்சாட்டியது.
ஜியோ நிறுவனத்தின் புகார்
அதே நேரம் ஜியோ நிறுவனம் தங்களது போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான அளவு இண்டர்கனக்ட் போர்ட்களை வழங்கவில்லை அதனால் எங்களது வாடிக்கையாளர்களால் பிற நெட்வொர்க் சேவைகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றது.
வாடிக்கையாளர்களைக் கவர்ந்த ஜியோவின் இலவச திட்டம்
சோதனை காலத்தில் ஒரு பெறும் அளவில் வாடிக்கையாளர்கள் பெற்றதுடன் ஜியோ நிறுவனம் செப்டம்பர் மாதம் இலவசங்களும் தங்களது வணிகச் சேவையை அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது.
செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கத்தின் கோரிக்கை
இப்படியெல்லாம் ஜியோ நிறுவனம் செய்ததை அடுத்து இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் சோதனை சேவையை ஜியோ முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளது எனவே டிராய் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சோதனை சேவைகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்று விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைத் தெளிவாக அளிக்க வேண்டும் என்று கோரியது.
விதிகளை மாற்றி மைக்கும் பணிகளில் டிராய்
இப்படி ஏற்பட்ட பல சிக்கல்களால் தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையம் விதிகளை மாற்றி அமைப்பதில் இப்போது டிராய் ஈடுபாட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications