பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிக்கும் முன்பே ரிசர்வ் வங்கி புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளைத் தயாராக வைத்திருந்தது.
ஆனால் புழக்கத்தில் இருக்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்களைத் தடை செய்யும் நடவடிக்கை குறித்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எவ்விதமான தகவல்களையும் பரிமாற்றம் செய்துகொள்ளவில்லை.
அனைத்து நடவடிக்கைகளும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது என நிதித்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தெரிவித்தார்.
உர்ஜித் பட்டேல்
ரகசியங்களைத் தொடர்ந்து காக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு ரிசர்வ் வங்கி அனைத்துப் பணிகளையும் செய்து முடித்தது. மக்களிடம் இருக்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் பணத்தை எப்படிப் பெறுவது, பணத் தட்டுப்பாட்டை எப்படி விரைவாகக் குறைப்பது என அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது என அவர் நாடாளுமன்ற குழுவிற்கு எழுத்து மூலம் பதில் அளித்தார்.
அச்சு பணிகளை
மேலும் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் அச்சுப்பணிகளை 1 மாதம் முன்பே துவங்கிவிட்டோம். அறிவிப்பு நாளுக்குள் கணிசமான தொகை அச்சிட்டு விநியோகத்திற்காகத் தயார் நிலையில் இருந்தது என உர்ஜித் கூறினார்.
86 சதவீத பணம்
இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ள நோட்டுகளின் புழக்கத்தைக் குறைப்பதற்காகவும் மத்திய அரசு நவ.8 இரவு பிரதமர் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த தடை விதித்தார். இதன் மூலம் ஓரே இரவில் இந்தியாவில் இருக்கும் 86 சதவீத பணம் செல்லாத வெறும் காகிதமாக மாறியது.
ரூ.15.44 லட்சம் கோடி
இதன் மதிப்பு சுமார் 15.44 லட்சம் கோடி ரூபாய், இதில் 17,165 மில்லியன் நோட்டுகள் 500 ரூபாயும், 6,858 மில்லின் நோட்டுகள் 1000 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரகுராம் ராஜன்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மத்திய அரசு 2016ஆம் ஆண்டுத் துவக்கத்திலேயே அப்போதிருந்த ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் உர்ஜித் பட்டேல்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications