இந்தியாவில் ஊழல் அதிகம் நடைபெறும் மாநிலம் கர்நாடகா.. தமிழ் நாட்டின் நிலை என்ன?

டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்தியாவில் ஊழல் எந்த நிலைமையில் உள்ளது என்ற ஒரு ஆய்வை நடத்தி அதன் முடிவையும் வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்று வருடங்கள் மூன்று மாதங்களை நிறைவு செய்ய இருக்கின்றது. பாஜக அரசு ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தது ஊழலை ஒழிப்போம், கருப்புப் பணத்தை மீட்போம் என்பதாகும்.

எனவே டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்தியாவில் ஊழல் எந்த நிலைமையில் உள்ளது என்ற ஒரு ஆய்வை நடத்தி அதன் முடிவையும் வெளியிட்டுள்ளது.

இந்த சர்வேயில் இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களில் இருந்து 3000 வீடுகளில் உள்ளவர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த சர்வேயின் முடிவு என்ன, எந்த மாநிலத்தில் அதிக ஊழல் நடைபெறுகின்றது என்று இங்குப் பார்க்கலாம்.

ஊழல் குறைந்துள்ளது

ஊழல் குறைந்துள்ளது

கடந்து 10 வருடங்களாக அதாவது 2005-2016 ஆண்டுகள் வரை பார்க்கும் போது ஊழல் 60 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்த ஆய்வின் முடிவு கூறுகின்றது.

2005-ம் ஆண்டு

2005-ம் ஆண்டு

2005-ம் ஆண்டு வெளியிடப்பட்ட முடிவுகளின் படி இந்தியாவில் 53 சதவீதத்தினர் ஊழல் அதிகம் நடப்பதாகக் குறிப்பிட்டு இருந்தனர். மேலும் ஊழல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது என்றும் 73 சதவீதத்தினர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

2016-ம் ஆண்டு

2016-ம் ஆண்டு

இதுவே 2016-ம் ஆண்டு 33 சதவீதத்தினர் மட்டுமே ஊழல் அனுபவம் உள்ளதாகவும், 60 சதவீதத்தினர் ஊழல் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் ஊழல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது 43 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

லஞ்சம் குறைந்துள்ளது

லஞ்சம் குறைந்துள்ளது

2005-ம் ஆண்டு 20,500 கோடி வரை சாமின்ய மக்கள் லஞ்சமாக பணத்தை அளித்துள்ளதாகவும், இது 2016-ம் ஆண்டு 6,350 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இடம்

முதல் இடம்

இந்தியாவில் அதிகளவில் ஊழல் நடைபெறும் மாநிலம் என்றால் அது கர்நாடகா என்றும் அங்கு 77 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர்.

தமிழகத்திற்கு என்ன இடம்

தமிழகத்திற்கு என்ன இடம்

கர்நாடகாவைத் தொடர்ந்து ஆந்திராவில் 74 சதவீதமும் வரை ஊழல் நடப்பதாகக் கூறியதன் மூலம் இரண்டாம் இடத்திலும், தமிழகத்தில் 68 சதவீதத்தினர் ஊழல் நடப்பதாக கூறியதன் மூலம் மூன்றாவது இடமும் பெற்றுள்ளன.

குறைந்த ஊழல் நடக்கும் மாநிலங்கள்

குறைந்த ஊழல் நடக்கும் மாநிலங்கள்

ஹிமாச்சல பிரதேசம் மற்றும் கேரளாவில் தான் குறைந்து அளவு ஊழல் நடப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஊழல் அதிகம் நடக்கும் துறை

ஊழல் அதிகம் நடக்கும் துறை

இந்திய அளவில் ஊழல் அதிகம் நடக்கும் துறையாக காவல் துறை உள்ளதாக ஆய்வின் கருத்து கூறுகின்றது. அதற்கு அடுத்த இடத்தில் கட்டுமானத் துறை, சட்டத்துறை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

குறிப்பு

குறிப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளாதாக இல்லையா என்று கீழே உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+