இந்தியாவில் கள்ள நோட்டு மற்றும் கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த தடை செய்தது.
இதன் பின் ரிசர்வ் வங்கி புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டது. இதனால் மக்கள் 2000 ரூபாய்க்குச் சில்லறைக்குத் தேடி அலையும் நிலை தொடரும் நிலையில் 500 ரூபாய் நோட்டுகளில் பல குளறுபடி.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக 500 ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கியின் பெயர் தவறாகப் பல இடங்களில் கள்ள நோட்டுப் புழக்கத்தில் இருந்த நிலையில் தற்போது காந்தி முகம் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் வந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் இருக்கும் மோரினா என்ற பகுதியில் இருக்கும் ஒரு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ஏடிஎம்களில் ஒருவர் பணம் எடுக்கச் சென்ற போது அவருக்கும் காந்தி முகம் இல்லாத 500 ரூபாய் நோட்டு கிடைத்துள்ளது. இதனை உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications