ஜியோவிற்கு தான் நன்றி செல்ல வேண்டும்.. என்ன ஒரு வளர்ச்சி..!!

மும்பை: உலகளவில் டெலிகாம் துறை வாடிக்கையாளர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துக்கொண்டு இருக்கும் சந்தைகளில் இந்தியா முதல் இடத்தில் இருக்கும் நிலையில், டெலிகாம் நிறுவன கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் ஒரு முக்கியச் செய்தியை வெளியிட்டுள்ளது.

டிராய்

டிராய்

பிப்ரவரி 2017இன் படி இந்தியாவில் மொபைல், லேண்டு லைன் வாடிக்கையாளரின் எண்ணிக்கை சுமார் 118 கோடியாக உயர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இது ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் சுமார் 1.17 சதவீதம் அதிகம் என டிராய் அறிவித்துள்ளது.

 

பிப்ரவரி

பிப்ரவரி

இந்தியாவில் டெலிகாம் சந்தையில் பிப்ரவரி மாதம் மட்டும் சுமார் 13.75 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.

இந்தத் திடீர் உயர்விற்குக் காரணம் மொபைல் கட்டணத்தைப் போலவே தற்போது லேண்டு லைன் சேவையின் கட்டணமும் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

 

கட்டண குறைவு மற்றும் இலவசங்கள்

கட்டண குறைவு மற்றும் இலவசங்கள்

மேலும் டெலிகாம் நிறுவனங்கள் ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக டெலிகாம் சேவை கட்டணங்களை அதிகளவில் குறைப்பு, இலவசங்கள் என டெலிகாம் சந்தையில் கடந்த சில மாதங்களாகப் புரட்சி ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே ஓரே மாதத்தில் 1.17 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது.

 

போட்டி

போட்டி

தற்போது ஜியோவின் குறைந்த கட்டண சேவை எதிர்கொள்ளவும், வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து வெளியேறாமல் தடுக்கவும் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அதிகளவிலான கட்டண குறைப்பை அறிவித்துள்ளது.

என்ன ஒரு வளர்ச்சி

என்ன ஒரு வளர்ச்சி

இந்திய டெலிகாம் வாடிக்கையாளர் எண்ணிக்கை பிப்ரவரி மாதத்தில் 1.18 சதவீதம் அதாவது 118 கோடி அளவில் உயர்ந்ததற்கு முக்கியக் காரணம் ஜியோ.

மேலும் இந்த மாற்றத்தில் நகரப்புற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 681.15 மில்லியனில் இருந்து பிப்ரவரி மாகம் 692.15 மில்லியனாக உயர்ந்துள்ளது.

 

சீனா

சீனா

மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா 2வது இடத்தில் இருக்கும் நிலையில் சீனா முதல் இடத்தில் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+