பிஎஸ்III வாகன விற்பனை தடையால் 600 கோடி நஷ்டம்..!
இந்தியாவில் பிஎஸ்III ரக வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதனால் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்னரே வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அதிகளவிலான சலுகைகளுடன் பிஎஸ்III ரக வாகனங்களை விற்பனை செய்தனர். இதன் எதிரொலியாக இரு சக்கர வாகன துறையில் சுமார் 300 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
உதிரிப் பாகங்கள் தயாரிப்பு
உச்ச நீதிமன்றம் உத்தரவால் அதிகம் பாதிக்கப்பட்டது உதிரிப் பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தான் என்று ICRA அமைப்பு தெரிவித்துள்ளது.
சுப்ரதா ரே
இதுகுறித்து ICRA அமைப்பின் துணை தலைவர் சுப்ரதா ரே கூறுகையில் உச்ச நீதிமன்றத்தின் பிஎஸ்III ரக வாகன விற்பனை தடை உத்தரவையடுத்து மார்ச் 30 மற்றும் 31ஆம் தேதி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடி சலுகையை அறிவித்து இருப்பில் இருந்த வாகனங்களை விற்பனை செய்தது.
இதனால் இந்த விற்பனையின் மூலம் இரு சக்கர வாகனச் சந்தையில் சுமார் 600 கோடி ரூபாய் அளவிலான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தது OEM நிறுவனங்கள் என ரே தெரிவித்தார்.
பிஸ்-IV
பிஎஸ்III ரக வாகன விற்பனை தடை பின், தற்போது இந்திய வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை சந்தையில் பாரத் ஸ்டேஜ் IV அல்லது பிஸ்-IV விதிமுறைகள் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, குறிப்பாக நைட்ரஜென் ஆக்ஸைட் வெளியேற்றும் அளவைக் குறைக்கப்பட்டுள்ளது.
8 லட்ச வாகனங்கள்
உத்தரவிற்கு முன் சந்தையில் இருந்த 8 லட்ச இரு சக்கர வாகனங்களில் வெறும் 6.71 லட்ச வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications