விப்ரோ-விற்கு போட்டியாக 'இன்போசிஸ்'.. எச்1பி விசா பிரச்சனையைத் தீர்க்க அதிரடி முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஐடி நிறுவனங்கள் பல வருடங்களாக அமெரிக்க அரசு அளிக்கும் எச்1பி விசா மூலம் பல மில்லியன் டாலர்களை லாபமாகப் பெற்று வந்த நிலையில், தற்போது எச்1பி அளிப்பதற்கான கட்டுப்பாடுகள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்க முடிவு செய்துள்ள அமெரிக்க அரசு.

 

இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவில் வரலாறு காணாத விதமாக முதலீட்டையும், ஊழியர்கள் சேர்க்கையும் செய்து வருகிறது.

விப்ரோ

விப்ரோ

இதன் பிடி விப்ரோ நிறுவனத்தில் சிஇஓவான அபித் அலி கூறுகையில், 2017ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவடைவதற்குள் அமெரிக்காவில் இருக்கும் தனது ஊழியர் எண்ணிக்கையில் 50 சதவீதம் அமெரிக்கக் குடிமக்களாக இருப்பார்கள் என அறிவித்தது.

இந்திய ஊழியர்கள்

இந்திய ஊழியர்கள்

இதனால் அமெரிக்காவில் இருக்கும் இந்நிறுவனத்தின் இந்திய ஊழியர்கள் தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த அதிர்வுகள் முழுமையாக அடங்கும் முன்னரே, இன்போசிஸ் முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது.

எச்1பி விசா பிரச்சனை
 

எச்1பி விசா பிரச்சனை

டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு எச்1பி விசா கட்டுப்பாடுகளை முழுமையாக அமல்படுத்த சில மாதங்கள் தேவைப்படும் என்று உறுதி செய்த நிலையில், இக்காலகட்டத்திற்கும் இந்திய ஐடி நிறுவனங்கள் தனது வர்த்தகத்தைக் காத்துக்கொள்ள அனைத்து விதமான பணிகளையும் செய்து வருகிறது.

இதன் படியே தற்போது இன்போசிஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Read More in English: https://www.goodreturns.in/

இன்போசிஸ்

இன்போசிஸ்

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், தனது அமெரிக்க வர்த்தகத்தைத் தொடர்ந்து சீரான முறையில் நடத்த 10,000 உள்ளூர் பணியாளர்களையும், புதிதாக 4 டெக்னாலஜி மற்றும் இன்னோவேஷன் ஹப்-களையும் நிறுவ முடிவு செய்துள்ளதாக இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

புதிய விரிவாக்கம்

புதிய விரிவாக்கம்

புதிய 10,000 உள்ளூர் பணியாளர்கள், புதிதாக 4 டெக்னாலஜி மற்றும் இன்னோவேஷன் ஹப்-களின் விரிவாக்கத்தின் மூலம் இன்போசிஸ் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், வாடிக்கையாளர் அனுபவம், கிளவுட் மற்றும் பிக் டேட்டா துறைகளில் தனது சேவைகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளது.

இன்டியானா

இன்டியானா

இதுகுறித்து இன்போசிஸ் சிஇஓ விஷால் சிக்கா கூறுகையில், நடப்பு நிதியாண்டில் ஆகஸ்ட் மாத்திற்குள் அமெரிக்காவின் இண்டியான பகுதியில் முதல் ஹப் திறக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் 2021ஆம் ஆண்டுக்குள் சுமார் 2000 வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போவதாகக் கூறினார்.

பிற 3 ஹப்

பிற 3 ஹப்

மேலும் அமெரிக்காவில் இன்போசிஸ் நிறுவ உள்ள பிற டெக்னாலஜி ஹப்கள் அமைய உள்ள இடத்தை அடுத்தச் சில மாதங்களில் முடிவு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.

60 சதவீத வருவாய்

60 சதவீத வருவாய்

இன்போசிஸ் நிறுவனத்தின் 2016-17 நிதியாண்டுக்கான 10.2 பில்லியன் டாலரான மொத்த வருவாயில் சுமார் 60 சதவீதம் அமெரிக்கச் சந்தையைச் சார்ந்து உள்ளது.

கால அவகாசம்

கால அவகாசம்

வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் அதிகளவில் பயன் ஊழியர்களின் வேலைவாய்ப்பு விசா கட்டுப்பாடுகளை அமலாக்கம் செய்ய நினைத்ததை விட அதிகக் காலம் தேவைப்படுகிறது என்று வெள்ளை மாளிகை செய்தி பிரிவின் செயலாளர் சியான் ஸ்பைசர் சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

உண்மையான பொருள்..

உண்மையான பொருள்..

சியான் ஸ்பைசரின் கருத்தின் உண்மையான பொருள், புதிய கட்டுப்பாடுகள் அமலாக்கம் அதிகப்படியான காலம் தேவைப்படும் என்பதால் தற்போது இருக்கும் விசா சட்டங்கள் குறைந்தபட்சம் 2018ஆம் ஆண்டு முழுமையாகச் செயல்பாட்டில் இருக்கும் என்பதே ஆகும்.

பை அமெரிக்கன் மற்றும் ஹையர் அமெரிக்கன்

பை அமெரிக்கன் மற்றும் ஹையர் அமெரிக்கன்

சமீபத்தில் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்ட பை அமெரிக்கன் மற்றும் ஹையர் அமெரிக்கன் உத்தரவில் விசா கட்டுப்பாடுகள் அமலாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் தப்பித்தது.

இந்த உத்தரவில் அமெரிக்காவின் செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட், அட்டார்னி ஜென்ரல், செக்ரட்டரி ஆஃப் லேபர் மற்றும் செக்ரட்டரி ஆஃப் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி ஆகிய துறைகளை இனி எச்-1பி விசா அனைத்தும் திறமைவாய்ந்தவர்கள், அதிகச் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே சென்றடையும் வகையில் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என இத்துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப்.

 

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள்

உலகளவில் ஐடி சேவையைச் சிறப்பான முறையில் அளித்து வரும் 150 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஐடி சந்தைக்கு மிகமுக்கியமான வர்த்தகத் தளம் அமெரிக்கா.

அமெரிக்கா சந்தை வர்த்தகத்தில் குறைவான செலவீட்டில் அதிக லாபத்தை அடைய வேண்டும் என்னும் நோக்கில் இந்திய ஐடி நிறுவனங்கள் இந்திய பொறியாளர்களை அமெரிக்காவிற்கு எச்-1பி விசா வாயிலாக அனுப்பி அதிகளவிலான லாபத்தைப் பெற்று வந்தது.

 

இழப்பு

இழப்பு

தற்போது டிரம்ப்-இன் இப்புதிய கட்டுப்பாடுகளால் இந்திய ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் லாபத்தை இழக்க உள்ளது.

இந்த இழப்பைச் சமாளிக்கவே தற்போது விப்ரோ, இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் அதிகளவில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

 

டெலிவரி சென்டர்

டெலிவரி சென்டர்

விப்ரோ நிறுவனம் 50 சதவீத ஊழியர்களை அமெரிக்கக் குடிமக்களாக அமர்த்துவது மட்டும் அல்லாமல் புதிய டெலிவரி சென்டர் ஒன்றையும் அமைக்க முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை அளிக்கவும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் அமெரிக்காவிலேயே புதிய டெலிவரி சென்டரை அமைக்க உள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys to hire 10,000 American techies to escape from H1B visa effects

Infosys to hire 10,000 American techies to escape from H1B visa effects
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X