எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி..டர்ம் டெபாசிட் வட்டி விகிதத்தை 0.50% வரை குறைத்தது..!
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வாடிக்கயாளர்களுக்கு முதலீடு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியைக் குறைத்துள்ளது.
இந்த வட்டி விகித குறைப்பு 1 கோடி ரூபாய்க்கும் குறைவான நடுத்தர மற்றும் நீண்ட கால வைப்பு நிதி கணக்குகளுக்கும் மட்டும் குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அமைப்பின் படி இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான முதலீடு திட்டங்களுக்கு எஸ்பிஐ வங்கி வட்டி விகிதத்தை 6.75 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
மூத்த குடிமக்கள் திட்டத்திற்கும் வட்டி குறைப்பு
இதே முதிர்வுக்கு மூத்த குடிமக்களுக்கான முதலீடு திட்டத்தில் 7.25 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தை 6.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக 0.25 சதவீதம் குறைக்கப்படும் முதலீடுகள்
மூன்று வருடம் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதலீடு திட்டங்களுக்கு வட்டி விகிதம் 0.25 சதவீதமாகக் கூடுதலாகக் குறைக்கப்பட்டு 6.50 சதவீதமாக உள்ளது.
புதிதாக முதலீடுகளுக்கு மட்டும்
எஸ்பிஐ வங்கி இந்தப் புதிய வட்டி விகித மாற்றம் புதிதாகத் துவங்கப்படும் முதலீடுகள் மற்றும் ஏற்கனவே உள்ள முதலீடுகளைப் புதுப்பிக்கும் போது மட்டும் அளிக்கப்படும் என்கின்றது.
குறைந்த கால முதலீடுகளில் மாற்றம் இல்லை
குறைந்த கால முதலீடு திட்டங்களான 7 நாட்கள் முதல் இரண்டு வருடங்களுக்குள் முதிர்ச்சி அடையும் திட்டங்களின் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை.
அதிகபட்ச வட்டி விகிதம்
எஸ்பிஐ வங்கி ஒரு வருடம் முதல் 455 நாட்கள் வரையிலான முதலீடுகளுக்கு அதிகபட்சமாக 6.90 சதவீதம் மட்டுமே இப்போது வட்டி விகிதம் அளிக்கின்றது. எஸ்.பி.ஐ., நிதி சார்ந்த கடன் விகிதங்களின் மாதாந்திர செலவுகளையும் மாற்றவில்லை. அதன் ஒரு வருட நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் அடிப்படை செலவு 8% ஆகும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications