ஏர் ஏசியாவின் விடுமுறை ஆஃபர்.. 1,498 ரூபாயில் விமான பயணம்..!

ஏர் ஏசியாவின் விடுமுறை ஆஃபர்.. 1,498 ரூபாயில் விமான பயணம்..!

இந்தியாவில் குறைந்த விலையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் விடுமுறை விற்பனையாக 1,498 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.

ஏர் ஏசியாவின் இந்த விடுமுறை விற்பனையில் மே 14 வரை டிக்கெட் புக் செய்யலாம் என்றும் அக்டோபர் 1-ம் தேதி வரை பயணம் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.

1,498 ரூபாய் சலுகை

1,498 ரூபாய் சலுகை

ஏர் ஏசியாவின் 1,498 ரூபாய் சலுகை விலை கட்டணத்தில் கவஹாத்தி-இம்பால் வழித்தடத்தில் பயணம் செய்யலாம் என்று அறிவித்த போதிலும் எத்தனை டிக்கெட்கள் என்று அறிவிக்கவில்லை.

பிற வழித்தடங்களில் சலுகைகள்

பிற வழித்தடங்களில் சலுகைகள்

ராஞ்சி-கொல்கத்தா செல்ல 1,699 ரூபாய் விமானக் கட்டணம், கோவாவில் இருந்து பெங்களூரு செல்ல 1,719 ரூபாய், ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு செல்ல 1,799 ரூபாய் விமானக் கட்டணம் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து கோவா செல்ல 1,999 ரூபாய் விமானக் கட்டணம் என்று ஏர் ஏசியா இந்தியா அறிவித்துள்ளது.

ஏர் ஏசியா விமானச் சேவை

ஏர் ஏசியா விமானச் சேவை

ஏர் ஏசியா இந்தியா விமானச் சேவை நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் காலாண்டு வரையில் மட்டும் 8.4 லட்சம் பயணிகளுக்குச் சேவை அளித்துள்ளது என்றும், இது காலக் கட்டத்தில் 2016-ம் ஆண்டு 5.38 சதவீதம் நபர்கள் பயணம் செய்துள்ளதாகவும், 57 சதவீதம் கூடுதலாக ஒரே வருடத்தில் சேவை அளித்துள்ளதாகவும் புதிய வழித்தடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏர் ஏசியா அறிவித்துள்ளது.

ஏர்ஏசியா இந்தியா

ஏர்ஏசியா இந்தியா

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் டாடா குழுமம் மற்றும் மலேஷியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும்.

புதிய வழித்தடங்கள்

புதிய வழித்தடங்கள்

தில்லி-ஸ்ரீநகர், டெல்லி-பாக்தோகிரா மற்றும் தில்லி-புனே ஆகிய வழித்தடங்களில் விமானச் சேவையை அன்மையில் துவங்கிய ஏர் ஏசியா இந்தியா விரைவில் டெல்லி - கோவா இடையிலும் விமானச் சேவையை அளிக்க இருக்கின்றது.

20 வழித்தடங்கள்

20 வழித்தடங்கள்

வருகின்ற ஜூன் மாதத்துடன் மூன்று வருடத்தை நிறைவு செய்யும் ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் பெங்களூரு, கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய நகரக்களை முக்கிய ஹப்புகளாக வைத்துக்கொண்டு 20 உள்நாட்டு வழித்தடங்களில் விமானச் சேவையை அளித்து வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+