சாம்சங் உடன் போட்டிபோட ரூ.2,200 கோடியில் மெகா திட்டம்: ஓப்போ, விவோ கலக்கல்
இந்திய டெலிகாம் சந்தை வேகமாக வளர்ச்சி அடைவதற்கு முக்கியக் காரணம் ஸ்மார்ட்போனின் விற்பனை நினைத்துபார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
மொபைல் விற்பனை சந்தையில் பொதுவாக இந்தியாவில் கொரியா மற்றும் ஜப்பான் நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது சீனா நிறுவனம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இதன் ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிறுவனங்கள், சாம்சங் நிறுவனத்துடன் நேரடியாகப் போட்டி போடும் வகையில் சுமார் 2,200 கோடி ரூபாய் அளவில் விளம்பரம் செய்ய முடிவு செய்துள்ளது.
டெல்லி மெட்ரோ
2017ஆம் ஆண்டில் மட்டும் ஓப்போ, விவோ நிறுவனங்கள் விளம்பரத்திற்காகச் சுமார் 2,200 கோடி ரூபாய் தொகையைச் செலவு செய்ய முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் கூட இந்நிறுவனம் டெல்லி மெட்ரோ ரயிலில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்தது.
முன்னணி நிறுவனம்
விளம்பரத்திற்காக ஓப்போ, விவோ நிறுவனங்கள் ஒதுக்கிவைத்துள்ள 2,200 கோடி ரூபாய் தனது போட்டி நிறுவனங்களான சாம்சங், எல்ஜி, வீடியோகான், சோனி ஆகிய நிறுவனங்களை விடவும் அதிகமானது.
25 சதவீத வளர்ச்சி
இந்த விளம்பரத்தின் மூலம் இந்தியாவில் இந்நிறுவனங்களின் விற்பனை அளவு சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
விரிவாக்கம்
மேலும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை அளிக்கும் திட்டத்துடன் புதிய கடைகள், பழுது பார்க்கும் கடைகள் என இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவிலான விரிவாக்க பணிகளை ஓப்போ மற்றும் விவோ கையில் எடுத்துள்ளது.
சாம்சங்
அடுத்தத் திட்டமாக ஓப்போ மற்றும் விவோ இந்தியாவில் 6,000 - 20,000 ரூபாய் விலையில் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தப் பிரிவு இந்தியாவில் சுமார் 78 சதவீதம் வர்த்தகச் சந்தையைக் கொண்டுள்ளது.
இப்பிரிவில் சாம்சங் நிறுவனம் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் நிலையில், தற்போது இந்நிறுவனத்துடன் நேரடியாகப் போட்டி போட களமிறங்கியுள்ளது ஓப்போ மற்றும் விவோ.
விலை சரிவு
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் மத்தியில் நிலவும் போட்டியின் காரணமாக இந்தியாவில் தொடர்ந்து இதன் விலை குறைந்து சாமானியர்களும் வாங்கும் அளவிற்கும் நிலைமை மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications