இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப அவுட்சோர்சிங் நிறுவனமான விப்ரோ லோகோவினை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மாற்றியுள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் இந்தப் புதிய லோகோவில் ஏற்கனவே வண்ணமையமாக இருந்த சூரிய காந்தி பூ நீக்கப்பட்டு நான்கு வட்டங்கள் கொண்ட புள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளது.
என்ன அர்த்தம்
இந்தப் புதிய லோகோ மாற்றம் விரிவாக்க முறை மற்றும் வரம்பற்ற விப்ரோவை அடையாளப்படுத்துகிறது என்று கூறப்படுகின்றது.
நான்கு வட்டங்கள் கொண்ட புள்ளிகளுக்கு என்ன அர்த்தம்
நான்கு வட்டங்கள் கொண்ட புள்ளிகள் விப்ரோவின் மதிப்புகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களைக் குறிப்பதாகக் கூரப்படுகின்றது.
நீல நிற எழுத்து
நீல நிறம் உடைய எழுத்து நம்பகதன்மை மற்றும் அதிகாரம் ஆகியவற்றைக் குறிக்கின்றது என்று பெங்களூரை சேர்ந்த இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ தெரிவித்துள்ளது.
புள்ளிகள்
லோகோவில் உள்ள புள்ளிகள் தொழில்நுட்பம் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் தங்கலது திறம் மற்றும் அறிவைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்திச் செய்வதைக் குறிக்கின்றது என்று விப்ரோ நிறுவனம் கூறியுள்ளது.
பல வண்ண புள்ளிகள்
பல வண்ண புள்ளிகள் ஒரு ஆற்றல் மிக்க மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன, எதிர்காலத்தில் நன்மைச் சேர்ப்பதற்கான அழைப்பை நாம் சிறப்பாகவும், துணிச்சலானதாகவும், அழகாகவும் மாற்ற எங்களது அடையாளத்துவம் உதவும் என நம்புவதாக விப்ரோ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
மதிப்பீடுகள் புதிய அடையாளம்
எங்களது பிறாண்டு அடையாளம் வாடிக்கையாளர்களுக்கான வெளிப்பாடு. இது எங்கள் கலாச்சாரம், எங்கள் கோர் மற்றும் பெக்கான், எங்கள் மதிப்புகள் மூலம் சக்தியளிக்கிறது. நமது மதிப்பீடுகள் புதிய அடையாளத்துடன் இணைந்துள்ளன மற்றும் ஒத்திவைக்கின்றன, என "விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விப்ரோ
உலகளாவிய தகவல், ஆலோசனை மற்றும் வணிகச் செயல்முறை சேவைகள் நிறுவனமான விப்ரோவில் 170,000 ஊழியர்களுடன் ஆறு கண்டங்களில் வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்கின்றனர். 2017 மார்ச் 31 வரையிலான நிதி ஆண்டு வருவாயில் 8.5 பில்லியன் டாலர் லாபம் பெற்றுள்ளதாக விப்ரோ அறிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications