ஜனவரி-டிசம்பர் நிதி ஆண்டு.. நவம்பர் மாதம் பட்ஜெட்.. மத்திய அரசு அடுத்த அதிரடி..!
ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நிதி ஆண்டு, ஜனவரி மாதம் தொடக்கத்தில் அல்லது அதற்கு முன்பே பட்ஜெட் கூட்டம் போன்றவற்றை நடத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகின்றது.
மத்திய அரசு இப்படி மாற்றங்கள் செய்வதன் மூலமாக டெல்லியில் நலத்திட்டங்களுக்கு நிதிகள் வேகமாக ஒதுக்கப்பட்டு வேகமாக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறுகின்றது மத்திய அரசு.
இரண்டு பரிந்துரைகள்
ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரையிலான நிதி ஆண்டினை காலண்டர் ஆண்டாக மாற்றுவது அதற்காகப் பட்ஜெட் கூட்டத்தை நவம்பர் மாதமே நடத்துவது அல்லது ஏப்ரல் - மார்ச் நிதி ஆண்டினை அப்படியே தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தினை மட்டும் ஜனவரி துவக்கத்தில் ஆரம்பிப்பது அதனால் நிதிகளை ஒதுக்க மேலும் கூடுதலாக நாட்கள் கிடைக்கும் என்று அரசு முயற்சி செய்வதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் இது குறித்து அரசு முடிவு ஏதும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் முன் எச்சரிக்கை
பிரதமர் மோடி அரசின் இந்த முயற்சிக்காகத் தான் அன்மையில் நடந்த நிதி ஆயோக் எனப்படும் மாநில அரசுகளுக்கான நிதி கூட்டத்தில் நிதி ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும் அதற்காக மாநில அரசுகளை ஜனவரி-டிசம்பர் மாத நிதி ஆண்டாக மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் நிதி கொள்கை நிர்வாகக் குழு கூட்டம் கூறியது.
மத்திய பிரதேசம்
இதை முன்னெடுக்கும் வகையில் மத்திய பிரதேச மாநில அரசு இந்தியாவின் முதல் மாநிலனாக ஜனவரி-டிசம்பர் நிதி ஆண்டுக் கொள்கையில் செயல்படப் போவதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு வரை ஏப்ரல் - மார்ச் நிதி ஆண்டைக் கடைப்பிடித்து வந்த மத்திய பிரதேச அரசு வரும் டிசம்பர் மாதம் பட்ஜெட்டினை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
மாற்றத்திற்கான முயற்சி
முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான ஷங்கர் ஆச்சார்யா தலைமையிலான ஒரு உயர் மட்ட குழு, ஜனவரி-டிசம்பர் மாதத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தால் நிறுவப்பட்டது, ஆனால் அத்தகைய மாற்றத்திற்குப் பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும், அது மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.
பருவமழைக்கு ஏற்றதாக இருக்கும்
நிதி கொள்கை நிறுவனமான நிதி ஆயோக்கின் தலைவர் அரவிந்த் பணகரியா ஜனவரி - டிசம்பர் காலண்டர் நிதி ஆண்டினை பின்பற்றும் போது பருவமழை மற்றம் போன்றவற்றுக்கு ஏற்றதாக அமையும் என்று அன்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
பட்ஜெட் ஒதுக்கும் போது பருவ செயல் திறன் அடிப்படையைப் பொருத்து நிதி ஒதுக்க வேண்டி இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
உலக நாடுகளுடன் இந்தியா
காலண்டர் ஆண்டினை இந்தியா பின் பற்றத் துவங்கினால் அது இந்தியாவைப் பிற உலக நாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வழிவகுக்கும் என்று தரவுகள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications