80% வரை தள்ளுபடி.. அடுத்தப் போட்டிக்குத் தயாராகும் பிளிப்கார்ட், அமேசான்..!

80% வரை தள்ளுபடி.. அடுத்தப் போட்டிக்குத் தயாராகும் பிளிப்கார்ட், அமேசான்..!

இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஒவ்வொரு வருடமும் தங்களது வாடிக்கையாளர்களைக் குஷிப்படுத்தும் நோக்கிலும், தொடர்ந்து வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் அதிரடியான தள்ளுபடி விற்பனையை ஒரு விழாவாக நடத்தும்.

காலப்போக்கில் இந்த விழா ஒரு போட்டியாக மாறியுள்ளது என்றால் மிகையாகாது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தும் இந்தத் தள்ளுபடி விற்பனை இன்றளவில் வருடத்திற்குப் பல முறை நடத்தப்பட்டு வருகிறது.

கலக்கல் மே மாதம்

கலக்கல் மே மாதம்

இந்தவகையில் மே மாதத்தில் பிளிப்கார்ட், அமேசான் ஆகிய இரு நிறுவனங்களும் மிகப்பெரிய அளவில் தள்ளபடி விற்பனையை அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

10வது ஆண்டுவிழாவை அடுத்துப் பிளிப்கார்ட் நிறுவனம் மே 14-18ஆம் தேதி வரையிலான காலத்தில் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.

80 சதவீத தள்ளுபடி

80 சதவீத தள்ளுபடி

இந்த விற்பனையில் வாடிக்கையாளர் வாங்கும் பொருட்களுக்குச் சுமார் 80 சதவீதம் வரையிலான தள்ளுபடிகள் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் இதில் முன்னணி பிராண்டுகளின் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாகக் கருத்து நிலவி வருகிறது.

பிக் 10

பிக் 10

இதன் மூலம் 3 அல்லது 4 மடங்கு அதிக வருவாய் பெறும் அளவிற்கு விற்பனை இருக்கும் எனப் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. இந்த விற்பனைக்குப் பெயர் 'பிக் 10'.

அமேசான்

அமேசான்

பிளிப்கார்ட் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான அமேசான் கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் மே 11-14ஆம் தேதியில் இதுவரை பார்த்திராத அளவிற்கு அதிரடி தள்ளபடி செய்யப்போகிறது என அறிவித்துள்ளது.

மைந்திரா

மைந்திரா

இந்நிலையில் ஆடை விற்பனை நிறுவனமான மைந்திரா பிளிப்கார்ட் உடன் இணையாமல் தனியாகத் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+