ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 24 வது ஆண்டு விழா விற்பனை.. விமான டிக்கெட்களில் 24% சலுகை..!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 24 வது ஆண்டு விழா விற்பனை.. விமான டிக்கெட்களில் 24% சலுகை..!

இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் 24 வது ஆண்டு விழா விற்பனையை அறிவித்துள்ளது.

2017-ம் ஆண்டின் சிறந்த விமான நிறுவனம் என்ற விருதை வென்றுள்ள ஜெட் ஏர்வேஸ் மே 5-ம் தேதி வெளிநாட்டு விமானப் பயணங்களுக்கு அடிப்படை கட்டணத்தில் இருந்து 24 சதவீதம் சலுகை அறிவித்துள்ளது.

உள்நாட்டு விமானப் பயண ஆஃபர்

உள்நாட்டு விமானப் பயண ஆஃபர்

அதே நேரம் உள்நாட்டு விமானப் பயணங்களுக்குக் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் 23 சலுகை என்றும் முதலில் வந்தவர்களுக்கு முதலில் வழங்கும் அடிப்படையில் வழங்கப்படும் என்று ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

சலுகை எப்போது வரை

சலுகை எப்போது வரை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்தச் சிறப்புச் சலுகை விலையில் 2017 ஜூன் 16-ம் தேதி முதல் புக் செய்து பயணம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டு விழாவை முன்னிட்டு ஆஃபர்

ஆண்டு விழாவை முன்னிட்டு ஆஃபர்

24 வது ஆண்டு விழாவை முன்னிட்டு 24 ஆண்டு ஆதரவு அளித்து வரும் பயணிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்தச் சிறப்புக் கட்டணத்தை அறிவித்துள்ளதாக ஜேட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மூத்த வணிக அதிகாரி ஜெயராஜ் ஷண்முகம் கூறினார்.

புதிய முயற்சி

புதிய முயற்சி

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அன்மையில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை இணைக்கும் விதமாக ஏர் பிரான்ஸ், KLM ராயல் டச் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் ஆகியோருடன் இணைந்து விமானச் சேவையை அறிவித்தது.

பேரிஸ் மற்றும் ஆம்ஸ்டர்டம்க்கு நேரடி விமானம்

பேரிஸ் மற்றும் ஆம்ஸ்டர்டம்க்கு நேரடி விமானம்

மேலும் வியாழக்கிழமை சென்னையில் இருந்து பேரிஸ் செல்லவும், பெங்களூருவில் இருந்து ஆம்ஸ்டர்டம் செல்லவும் இரண்டு நேரடி விமானங்களை ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

600 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணங்கள்

600 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணங்கள்

இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் 600 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களைத் தினமும் இயக்கி வருகின்றது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 66 வழித்தடங்களில் தங்களது விமானச் சேவையை அளிக்கின்றது.

ஜெட் ஏர்வேஸ் விமானங்கள்

ஜெட் ஏர்வேஸ் விமானங்கள்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் 122 விமானங்களும், அதில் போயிங் 777-300 ஏஆர்ஸ், ஏர்பஸ் A330-200 / 300, அடுத்தத் தலைமுறை போயிங் 737s மற்றும் ATR 72-500 / 600s ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.

முந்தைய ஆஃபர்

முந்தைய ஆஃபர்

ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கோடைக்கால விற்பனையாக உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 1,294 ரூபாய்க்கு எக்கானமி வகுப்பு டிக்கெட்களை அறிவித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+