ரிலையன்ஸ் ஜியோவின் தண் தணா தண் திட்டத்தில் தவறு ஏதுமில்லை.. பச்சைக்கொடி காட்டிய டிராய்...!
இந்திய தொலைத்தொடர்பு ஆணையமான டிராய் ரிலையன்ஸ் ஜியோ அன்மையில் சம்மர் சர்பிரைஸ் பிரைம் இலவச சலுகையால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து அறிமுகம் செய்த தண் தணா தண் திட்டத்தில் தவறு ஏதும் இல்லை என்று கூறியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏப்ரல் 1-ம் தேதி சம்மர் சர்பிரைஸ் ஆஃபரை வெளியிட்டது. ஆனால் டிராயின் கட்டளைபடி ஏப்ரல் 6-ம் தேதி இந்தத் திட்டத்தை வாப்பஸ் பெற்ற அடுத்தச் சில நாட்களில் தண் தணா தண் என்ற பெயரில் ஆஃபர் வெளியிட்டது.
309 ரூபாய் ஆஃபர்
தன் தானா ஆஃபர் படி ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் 309 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்குத் தினமும் 1 ஜிபி வரம்பற்ற தரவு மற்றும் இந்தியா முழுவதும் குரல் அழைப்புகளை இலவசமாகப் பெறலாம்.
509 ரூபாய் ஆஃபர்
இதுவே 509 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்குத் தினமும் 2 ஜிபி வரம்பற்ற தரவு மற்றும் இந்தியா முழுவதும் குரல் அழைப்புகளை இலவசமாகப் பெறலாம்.
கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கது
ஜியோவின் புதிய கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக உள்ளன, மேலும் அவை எந்தவொரு கட்டுப்பாட்டு முறையையும் மீறுவதற்கில்லை. தண் தனா தான் எந்தவிதமான விதிமுறைகளையும் மீறவில்லை அதனால் டிராய் அதில் தலையிடாது என்று நமக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்மர் சர்பிரைஸ் ஆஃபர்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்குக் கூடுதலாக இலவச சலுகை அளிக்கப்படும் என்று இருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் மே, ஜூன், ஜூலை மாதம் இலவசமாக ஜியோவின் சேவையைப் பயன்படுத்த முடியும்.
டிராய் கண்டு பிடித்த குற்றம்
இதில் அதான் டிராய் குற்றம் கண்டு பிடித்துள்ளது. டிராய் விதிகளின் படி டாரிப் திட்டத்தில் ப்ரமோஷனல் ஆஃப்ர்கள் வழங்கக் கூடாது. இதைத் திருத்திய பிறகு ஜியோ நிறுவனம் புதிய ப்ரமோஷனல் சலுகையை வெளியிட்டுள்ளதால் அதில் குற்றம் ஏதும் இல்லை என்று டிராய் தரப்புக் கூறுகின்றது. அது மட்டும் இல்லாமல் சம்மர் சர்பிரைஸ் ஆஃபர் 90 நாட்கள் தாண்டி வரும், ஆனால் டிராயின் விதிகளின் படி 90 நாட்களுக்கு அதிகமாக ப்ரமோஷனல் சலுகைகள் அளிக்கக் கூடாது.
ஜியோவிற்குச் சாதகமான தண் தணா தண்
சம்மர் சர்பிரஸ் ஆஃபரினை திரும்பப்பெற்ற பிறகு வெளியான தண் தணா தண் திட்டத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என்றாலும் இது டாரிப் திட்டம் இல்லை, ப்ரமோஷனல் ஆஃபர். 90 நாட்களுக்கு அதிகமாக இலவசம் கிடையாது. 84 நட்கள் மட்டும் தான் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications