பெப்ஸிகோ குளிர்பான நிறுவனத்தின் அடுத்த அதிரடி தயாரிப்பு...ஓட்ஸ் பால்...!

பெப்ஸிகோ குளிர்பான நிறுவனத்தின் அடுத்த அதிரடி தயாரிப்பு...ஓட்ஸ் பால்...!

அமெரிக்கக் குளிர்பானங்கள் உடல நலத்திற்குக் கேடு, கார்போ ஹைட்ரேட் ஏற்றப்பட்ட குளிர்பானங்களை அருந்தக்கூடாது என்று ஒரு பருக்கும் சமுக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் வர்த்தகர்கள் பெப்ஸி மற்றும் கோகோ கோலா நிறுவன பானங்களை விற்க மாட்டோம் என்று தடை செய்துள்ளனர்.

அதே நேரம் இந்தப் பன்னாட்டு நிறுவனங்களும் சத்தான பாணங்களாகப் பால், இளநீர் போன்றவற்றை இப்போது விற்பனை செய்து வருகின்றனர். இதன் அடுத்தக் கட்டமாகப் பெப்ஸிகோ குளிர்பான நிறுவனம் நேரடியாக அருந்தக்கூடிய ஓட்ஸ் பாலினை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

குளிரூட்டப்பட்ட பால் உணவுப் பொருட்கள்

குளிரூட்டப்பட்ட பால் உணவுப் பொருட்கள்

இந்திய பெப்ஸிகோ நிறுவனத்தின் துணை தலைவரான தீப்பிக்கா வாரியர் இது பற்றிப் பத்திரிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கும் போது குளிர் பாணங்களுக்குப் பேர் போன பெப்ஸிகோ இப்போது குளிரூட்டப்பட்ட பால் உணவுப் பொருட்களை அறிமுகம் செய்ய இருப்பதாகத் தெரிவித்தார்.

பால் பொருட்கள் சந்தை மதிப்பு

பால் பொருட்கள் சந்தை மதிப்பு

இந்தியாவில் பால் பொருட்களின் சந்தை 13 முதல் 14 பில்லியன் டாலர்கள் மதிப்புடையது என்று ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றனர். மதிப்பு-சேர்க்கப்பட்ட பால் பொருட்கள், ருசியான பால், தயிர் மற்றும் மோர் போன்ற தயாரிப்புகளின் சந்தை மதிப்பு 1 பில்லியன் டாலர்கள் ஆகும்.

மதிப்புச் சேர்க்கப்பட்ட பால் பொருட்கள் சந்தை

மதிப்புச் சேர்க்கப்பட்ட பால் பொருட்கள் சந்தை

மதிப்புச் சேர்க்கப்பட்ட பால் பொருட்களின் சந்தை 2021-ம் ஆண்டு 3.3 பில்லியன் டாலர் அதாவது 23 சதவீதம் வரை உயரும் என்று CAGR அறிக்கை கூறுகின்றது.

வருங்காலத்தில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி

வருங்காலத்தில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி

இந்தியாவில் பலர் சத்தான மற்றும் ஆரோக்கியமான பொருட்களைத் தேடிப் பயன்படுத்துகின்றனர், இந்தியாவில் 20 முதல் 23 பில்லியன் டாலர் வரை பிராண்டட் ஊட்டச்சத்து சந்தை ஒரு மேல்நோக்கி செல்ல இருக்கின்றது. இதற்குச் சிறந்த உதாரணமாக 2010 முதல் 2015ம் ஆண்டு வரை மட்டும் பிராண்ட் ஊட்டச்சத்து பொருட்களின் சந்தை 17 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறப்படுகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+